உழைத்த செல்வங்கள்
உருக்குலையும் நிலை பாரீர்...
முல்லைக்கு தேர் கொடுத்தவன் பாரி புற்றுக்கும் புகலிடம் கொடுத்தது BSNL |
கேட்டாலும் கிடைக்காத செல்வங்கள் கேட்பாரின்றி கிடக்கும் காட்சி |
இரும்பாகி நின்றேன் நான் விரைவில் BSNL போலவே... துரும்பாகிப் போவேன் நான்.. |
பேருக்கு அமர்ந்த பலருக்கு PAY - சம்பளம் தந்த நாற்காலிகள் பேரிச்சம்பழத்திற்கும் நாதியற்ற நிலை காணீர்... |
கோபுரங்கள் நாங்கள் சாய்ந்து விட்டோம்.. சரிந்து விட்டோம்... உங்கள் நிறுவனம் போலவே.. |
தோழர்களே...
நீங்கள் கண்ட காட்சி
காணக்கிடைக்காத கண்காட்சியல்ல...
காணக்கூடாத கடுங்காட்சி...
காரைக்குடி பொதுமேலாளர் அலுவலகத்தில்
கண்ணால் நாம் நித்தமும் காணும் காட்சி...
நாம் தேடிய செல்வங்கள்
நலிந்து கிடக்கும் நிலை கண்டு
நம் நெஞ்சம் பதறுகிறது...
பல பொறுப்புள்ள மனிதரின் தூக்கத்தினால்
பல பொன்னான வேலையெல்லாம் தூங்குதப்பா என்ற
பட்டுக்கோட்டையின் பாடல் வரிகளும்...
புன்னகையும் இன்னிசையும் ஒளிந்து போனதோ?
இன்னலோடு கண்ணீரும் உப்பாகிப் போனதோ? என்ற
பாரதியின் பாடல்களுமே நம் நெஞ்சில் ஒலிக்கின்றன...
No comments:
Post a Comment