Friday, 31 July 2015

அஞ்சலி 
காந்தியவாதி சசிபெருமாள் 


தமிழகத்தில் தொடர்ந்து மது எதிர்ப்பு பிரச்சாரம் செய்து 
மக்கள் மத்தியில் மது விலக்கு கொள்கையை பரப்பி வந்த 
காந்தியவாதி சசிபெருமாள் 
இன்று 31/07/2015 மார்த்தாண்டம் அருகே உண்ணாமலைக்கடைப்பகுதியில் உள்ள 
மதுக்கடையை மூடக்கோரி 
நடத்திய போராட்டத்தில் தன் இன்னுயிர் நீத்தார். 

நேற்று 30/07/2015  அப்துல் கலாம் மறைவிற்கு 
இறுதி அஞ்சலி செலுத்த அவர் இராமேஸ்வரம் வந்திருந்தார்.  
இன்று அவருக்கே அஞ்சலி செலுத்தும் நிலை உருவாகி விட்டது. 
அவரது மரணம் பல பலத்த  சந்தேகங்களை உருவாக்கியுள்ளது.

மது குடிப்பவரையும் கொல்லும் 
எதிர்ப்பவரையும் கொல்லும்...
என்ற நிலை தமிழகத்தில் உருவாகியுள்ளது.

களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க் 
குளித்தானைத் தீத்துரீ அற்று.
என்பது குறளாகும்.

தண்ணீருக்குள் இருப்பவனை விளக்கு கொண்டு தேடுவதும் 
தண்ணியில் மிதப்பவனை  விளக்கங்கள் சொல்லி திருத்த முயலுவதும் 
ஒன்றுதான் என்பது  அதன் பொருளாகும்.

திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் 
திருட்டை ஒழிக்க முடியாது 
என்று  பாடிய பட்டுக்கோட்டை இன்றிருந்தால் 

குடிகாரனாய் பார்த்து திருந்தாவிட்டால் 
குடியை ஒழிக்க முடியாது
என்று பாடியிருப்பார்.

மது என்னும் அரக்கனுக்கு எதிரான போராட்டத்தில் 
தன் இன்னுயிர் நீத்த காந்தியவாதி 
சசிபெருமாள் மறைவிற்கு நமது அஞ்சலி உரித்தாகுக...

Thursday, 30 July 2015

வாழ்க.. பல்லாண்டு... 
வளமுடன்... நலமுடன்.. 

இன்று 31/07/2015
 பணி நிறைவு பெறும் 

NFTE - காரைக்குடி
 மாவட்டத்தலைவர் 

எல்லோருக்கும் நல்லவர் 
அனைவருக்கும் அன்பானவர்
கடமையில் கருத்தானவர் 
கொள்கையில் சிவப்பானவர்  

அன்புத்தோழர்.
P.காந்தி 
TM/இராமநாதபுரம் 


பரமக்குடியின் பாசமிகு தோழர் 
S.R .சரவணன் STS
ஆகியோரின்  பணி நிறைவுக்காலம் 
சிறப்புடன் விளங்க வாழ்த்துகின்றோம்.
JTO நிலுவைத்தொகை
 
JTO பதவியில் தற்காலிகப் பதவி உயர்வு
 OFFICIATING  வகிக்கும் TTA தோழர்களின் FR  22 C சம்பள நிர்ணயம் 
மாநில நிர்வாகத்தின் வழிகாட்டுதலுக்கு முன்பே  
காரைக்குடி மாவட்டத்தில் விரைந்து  அமுல்படுத்தப்பட்டது. 
ஆனால் நிலுவை வழங்குவதில் தாமதமும் தயக்கமும் ஏற்பட்டது. 

தற்போது மேற்கண்ட  தோழர்களுக்கு
 நிலுவை வழங்கப்பட்டு விட்டது. சில லட்சம் ரூபாய்களை   நிலுவையாகப்பெற்று  
நமது JTO alias  TTA தோழர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

சம்பளப்பட்டுவாடா கணக்கு அதிகாரி 
அன்புத்தோழர்.சொக்கலிங்கம் அவர்களுக்கு
 நமது நன்றிகள் பல..

இது போலவே.. 
நமது இளம் TTA தோழர்கள் 01/01/2007க்குப்பின்
 அவர்களுக்கு தற்போது  வழங்கப்பட்ட கூடுதல் ஆண்டு உயர்வுத்தொகை சம்பள நிர்ணயத்திற்கும் நிலுவைக்கும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். காலத்தே அவர்களது கோரிக்கையும் நிறைவேற்றப்பட வேண்டும் 
என வேண்டுகோள் விடுக்கின்றோம்.
காலத்தை வென்று காவியமான 
அமரர் அப்துல் கலாம் 
புகழஞ்சலிக் கூட்டம் 
=============================

30/07/2015 மாலை 5  மணி 
சங்க அலுவலகம் - காரைக்குடி .
தோழர்களே.. வருக..

Tuesday, 28 July 2015

காலத்தை வென்ற கனவு நாயகன் 
உறங்கும் போது காண்பதல்ல கனவு..
உன்னை உறங்க விடாமல் செய்வதுதான் கனவு..

இந்திய தேசமே அழுகிறது..
120 கோடி இதயங்களும் துடிக்கின்றன.. 
240 கோடி விழிகளும் நனைகின்றன...
இந்திய தேசமே இடைவிடாமல் அழுகிறது..

நண்பன் இறந்தது போல் நம் இளைஞர்கள் அழுகிறார்கள்.. 
ஆசிரியர் இறந்தது போல் நம் மாணவர்கள் அழுகிறார்கள்...
தந்தை இறந்தது போல் தனயன்கள் அழுகிறார்கள்.. 
தனயன் இறந்தது போல் தாய்மார்கள் அழுகிறார்கள்.. 
சகோதரன் இறந்தது போல் சகலரும் அழுகிறார்கள்..
இந்திய தேசமே இன்று அழுகிறது..

எல்லாவற்றிலும் இரண்டுபடும் நம் இந்திய தேசம் 
இன்று மட்டுமே ஒன்று பட்டு நிற்கிறது...

நேற்றிருந்தார் இன்றில்லை..
இன்றிருப்பார் நாளை இல்லை..
இது வெறும் பழமொழி..

ஆனால் கலாம் என்றுமிருப்பார்..
மக்கள் மனங்களில் வீற்றிருப்பார்...
காலத்தை வென்ற 
கலாம் புகழ் வாழ்க...வாழ்க..

Monday, 27 July 2015

கனவு கலைந்தது... 
மனிதம் மறைந்தது... 

இந்திய இளைஞர்களின் இதய நாயகன் 
அப்துல் கலாம் 

இளமையைத் துறந்தவர் 
முதுமையை மறந்தவர் 

இந்தியாவை  நேசித்தவர் 
இளைஞர்களை சுவாசித்தவர் 

அணுசக்தி ஏற்றியவர் 
மனிதசக்தி போற்றியவர் 

எளிமையைத் தூண்டியவர் 
வலிமையை வேண்டியவர் 

சிகையை  மாற்றாதவர்.. 
சிந்தனையின் ஊற்றானவர்.. 

அடக்கம் நிறைந்த மாணவர்  
அறிவு பெருக்கிய ஆசிரியர் 

2020 என தூக்கத்திலும் கனவு கண்டார் 
2015ல் மீளாத்  துயில் கொண்டார்

இராமேஸ்வரத்தின் அன்பு மகன் 
இந்தியத்தாயின் மூத்த மகன் 
அண்ணலுக்குப்பின்
நாம் கண்ட நாயகம் 

அப்துல்கலாம் 

புகழ் ஓங்குக.. 

Sunday, 26 July 2015

அஞ்சலி  
வ.உ.சி. வாலேஸ்வரன் 
வ.உ.சி யின் கடைசி மகன் 
வாலேஸ்வரன் 
கப்பலோட்டிய தமிழன் 
செக்கிழுத்த செம்மல் 
வ உ சிதம்பரனாரின் கடைசி மகன் 
வ.உ.சி. வாலேஸ்வரன் 
அவர்கள் மறைவிற்கு 
நமது அஞ்சலியை உரித்தாக்குகின்றோம்.
===============================================

வ.உ.சி அவர்களுக்கு 
இரட்டை ஆயுள் தண்டனை வழங்கியவர்
 வெள்ளைக்கார நீதிபதி வாலேஸ். 

பிற்காலத்தில்  வ.உ.சி அவர்கள் வறுமையில் உழன்ற போது, 
இந்தியர்கள் வ.உ.சி யை மறந்து அவரை ஒதுக்கியபோது, 
வெள்ளையரான வாலேஸ்
  வ.உ.சியின் தண்டனையைக் குறைக்கவும், 
மீண்டும் வழக்கறிஞர் தொழில் செய்யவும் உதவி புரிந்தார். 
வ.உ.சியின் உற்ற நண்பராகவும் விளங்கினார். 
எனவேதான் வ.உ.சி அவர்கள் செய்நன்றி அறிதலின் பொருட்டு 
தனது கடைசி மகனுக்கு வாலேஸ்வரன் என்று திருநாமம் சூட்டினார். 

வெள்ளையனை எதிர்த்துப்போராடிய 
ஒரு வீர மகன் தன்மகனுக்கு 
ஒரு வெள்ளையனின் பெயரைச் சூட்டிய நிகழ்வு
 மாசற்ற மனித நேயத்தின் மறக்கவியலா அடையாளமாகும்.

Friday, 24 July 2015


NFTE - BSNL 
தொலைத்தொடர்பு  ஊழியர்கள் சங்கம் 
இராமநாதபுரம் மற்றும் கீழக்கரை கிளைகள் 
=================================================================
கிளை மாநாடு 
=================================================================
26/07/2015 - காலை - 09.00 மணி 
முத்தமிழ் மன்றம் - இராமநாதபுரம் 

-: தலைமை  :-
தோழர்.B.ஜெயபாலன் 
கிளைத்தலைவர் 

-: வரவேற்புரை  :-
தோழர். S.சரவணக்குமார் 
மாவட்ட உதவிச்செயலர் 


-: ஆய்படு  பொருள் :- 
  • செயல்பாட்டறிக்கை 
  • நிதி நிலை அறிக்கை 
  • அமைப்பு நிலை 
  • கீழக்கரை கிளை இணைப்பு 
  • புதிய நிர்வாகிகள் தேர்வு 
  • தீர்மானங்கள் 

-: பங்கேற்பு :-

தோழர். வெ.மாரி 
மாவட்டச்செயலர் 

தோழர்.சேது 
மாநிலச்சங்க சிறப்பு அழைப்பாளர் 

தோழர். ஆர்.கே.,

மற்றும் தோழர்கள்...

-: நன்றியுரை  :-
தோழர். காளிமுத்து 
பணிக்குழு உறுப்பினர் 

தோழர்களே.. வருக... 

அன்புடன் அழைக்கும்..

K . தங்கவேலு                                             P . காந்தி 
கிளைச்செயலர்                                        கிளைச்செயலர் 
கீழக்கரை                                                    இராமநாதபுரம் 

Thursday, 23 July 2015

TMTCLU
ஒப்பந்த ஊழியர்கள் சங்கம் 
 காரைக்குடி.

==================================  
 சிறப்புக்கூட்டம் 
==================================
 26/07/2015 -  ஞாயிறு - மதியம் 02.00 மணி 
முத்தமிழ் மன்றம் - இராமநாதபுரம் 
 ================================== 

 விவாதப்பொருள் 

  • குறித்த தேதியில் சம்பளம் 
  • அடையாள அட்டை 
  • மாவட்ட ஆட்சியர் நிர்ணயித்துள்ள சம்பளம் 
  • வேலைக்கேற்ற கூலி 
  • சம்பளத்துடன் வார ஓய்வு 
  • மாதம் ஒரு சிறு விடுப்பு 
  • சம்பளத்துடன் பண்டிகை விடுமுறை 
  • சேம நல நிதி EPF
  • மருத்துவ அட்டை 
  • மற்றும் பிற..


-: சிறப்புரை :- 

 இயக்க வழிகாட்டி
தோழர். சேது 

 ஒப்பந்த ஊழியர்கள் சங்க 
மாநிலத்தலைவர்
 தோழர். ஆர்.கே.,

தோழர்களே .. வருக.. வருக..

தோழமையுடன் 
 சி.முருகன் 
ஒப்பந்த ஊழியர்கள் சங்க
 மாவட்டச்செயலர் 
          காரைக்குடி.            

Tuesday, 21 July 2015

மெல்லத் திறந்தது கதவு..
அமெரிக்க - கியூப அதிபர்கள் அன்போடு உரையாடும் காட்சி 

54 ஆண்டுகளாக 
அடாத பகை கொண்டு வாழ்ந்த 
அமெரிக்க கியூப தேசங்கள் 
தங்கள் பகை மறந்து...
நேசக்கரம் நீட்டியுள்ளனர்..

இரு நாட்டுக்கொடிகளும்..
இணைந்து பறக்கின்றன..
மூடிக்கிடந்த மனங்கள் திறந்தன...
மூடப்பட்ட   தூதரகங்கள்  திறந்தன...
அமைதிக்கதவு மெல்லத்திறந்துள்ளது...
அனைவரும் மகிழ்ச்சி கொண்டுள்ளனர்...

"உங்களுக்குத் தொழில் இங்கே 
அன்பு செய்தல் கண்டீர்.. "
என்று  உலக மக்களை 
அன்பென்னும்  
தொழில் செய்யத்தூண்டினான் 
மகாகவி பாரதி...

அந்த வழியில்.. அன்பு வழியில்..
உலகம் நடை போடவேண்டும்....
நமது வாழ்த்துக்கள்...

Sunday, 19 July 2015

NFTE 
தொலைத்தொடர்பு ஊழியர்கள் சங்கம் 
காரைக்குடி.
=====================================================================
மக்களைக் கவர்ந்த மனிதன் 
மனிதநேயமிக்க தலைவன் 

இராமநாதபுரம் கிளைச்செயலர் 
காரைக்குடி மாவட்டத்தலைவர் 

தோழர். காந்தி 
பணி நிறைவு பாராட்டு விழா 
தோழியர்.அருந்ததி - தோழர்.காந்தி 

-:நிகழிடம்:-
26/07/2015 - ஞாயிறு - காலை 10 மணி 
முத்தமிழ் மன்றம் 
பழைய தந்தி அலுவலகம் அருகில் 
இராமநாதபுரம். 

-:தலைமை:- 
வெ. மாரி 
மாவட்டச்செயலர் 

-:வரவேற்புரை:- 
திரு.N.இரத்தினம் 
நகராட்சிக்  கணக்கர் (ஓய்வு)

தோழர்.R. இராமமூர்த்தி 
JTO - இராமநாதபுரம் .
=====================================================================
-: வாழ்த்துரை :- 

திரு.S.ஜெயச்சந்திரன் 
துணைப்பொதுமேலாளர் - BSNL 

திரு.K .குமார் 
கோட்டப்பொறியாளர் - BSNL 

தோழர்.N.சேகரன் 
மாவட்டச்செயலர் - தமிழ்நாடு க இ பெ மன்றம் 

தோழர். RT. இரகுநாதன் 
நகரச்செயலர்  - CPI 

தோழர்.S .முருகன் 
மாவட்டச்செயலர் - TMTCLU 

தோழர்.P .முருகன் 
மாவட்டச்செயலர் - AIBSNLPWA

தோழர்.R.பூபதி 
தொழிற்சங்கத்தலைவர் 

தோழர். B.ஜெயபாலன் 
கிளைத்தலைவர் 

தோழர்.சுபேதார் அலிகான் 
மாநில இளைஞரணி 

-: சிறப்புரை :- 

உயர்திரு. D.குப்புராம் 
மாநில துணைத்தலைவர் - BJP 

தோழர். N.K. இராஜன் 
மாவட்டச்செயலர் - CPI 

தோழர். K .சேது 

தோழர். ஆர்.கே.,  

-: சிறப்பு பங்கேற்பு :​- 

தோழர். ஆர்.கே., அவர்களின் 
அருமைப்புதல்வர் 
தோழர். R.K. அஜய் - USA

 மற்றும் 
தோழமை தொழிற்சங்கத்தலைவர்களும் 
முன்னணித்தோழர்களும்... 

-: அனுபவ உரை :-
தோழர். P.காந்தி 

-: நன்றியுரை  :-
தோழர்.கா.பூபாலன் 
துணைக்கோட்ட  அதிகாரி - கோவை 

தோழர்களே.. வருக.. வருக..

அன்புடன் அழைக்கும் 
NFTE  மாவட்டச்சங்கம் - காரைக்குடி
மற்றும் 
இராமநாதபுரம் - கீழக்கரை -
இராமேஸ்வரம் கிளைச்சங்கங்கள்.

Friday, 17 July 2015

சகோதரத்துவம் தழைக்கட்டும்...

மனிதம் மலரட்டும்.. 
புனிதம் பெருகட்டும்.. 

அன்பு வளரட்டும்..
அமைதி பரவட்டும்..

சகோதரத்துவம் தழைக்கட்டும்..
சமாதானம் உயரட்டும்..

அனைவருக்கும் 

னிய  லான் 

நல்வாழ்த்துக்கள் 

Thursday, 16 July 2015

NFTE - BSNLEU
மாவட்டச்சங்கங்கள் 
காரைக்குடி. 
-------------------------------------------------------------
இணைந்த ஆர்ப்பாட்டம் 
-------------------------------------------------------------
20/07/2015 - திங்கள் - மதியம் 01.00 மணி 
பொதுமேலாளர் அலுவலகம் - காரைக்குடி 
-------------------------------------------------------------
கோரிக்கைகள் 
மாவட்ட நிர்வாகமே...

  • JCM  தலமட்டக்குழு முடிவுகளை உடனடியாக நடைமுறைப்படுத்து..

  • ஊழியர்களின் நீண்ட நாள் விருப்பமாற்றல்களை அமுல்படுத்து..

  • வெளிமாவட்டங்களுக்கு விருப்ப மாற்றலில் நீண்ட நாட்களாக காத்திருக்கும் தோழர்களை காரைக்குடியில் இருந்து விடுதலை செய்...

  • மரணமுற்ற,  பணி நிறைவு பெற்ற,  ஒழுங்கு நடவடிக்கை முடிவு பெற்ற  மற்றும்  விடுபட்ட தோழர்களுக்கு நாலுகட்டப்பதவி உயர்வு உடனே வழங்கு..

  • காசாளர் பணி செய்யும் தோழர்களுக்கு CONVEYANCE ALLOWANCE அலைச்சல் படி உடனடியாக வழங்கு..

  • JTO OFFICIATING செய்யும் TTA  தோழர்களின் நீண்ட நாள் நிலுவையை உடனே வழங்கு...

  • TTA தோழர்களின் பயிற்சிக்கால உதவித்தொகை நிலுவையை உடனடியாக வழங்கு...

  • தேங்கிக்கிடக்கும்  சம்பள முரண்பாடு பிரச்சினையை தீர்த்து வை..

  • மாவட்டத்தில் BSNL சேவையை செம்மைப்படுத்து...

===============================================

ஒப்பந்த ஊழியர் கோரிக்கைகள் 
===============================================

  • அனைத்துப்பிரிவு ஒப்பந்த ஊழியர்களின் சம்பளத்தையும் உரிய தேதியில் வழங்கு...

  • மாவட்ட ஆட்சியர் நிர்ணயித்துள்ள கூலியை ஒப்பந்த ஊழியர்களுக்கு உரிய தேதியில் இருந்து வழங்கு..

  • மாநில அரசு உத்திரவின்படி மாதம் ஒரு நாள் CASUAL LEAVE  சிறுவிடுப்பு வழங்கு..

  • மற்ற நிறுவனங்களில் வழங்கப்படுவது போல் ஆண்டிற்கு 9 நாட்கள் சம்பளத்துடன் கூடிய PAID HOLIDAYS  பண்டிகை விடுப்பு வழங்கு...

  • வார ஓய்வை WEEKLY OFF வரன்முறைப்படுத்தப்பட்ட குறைந்த பட்சக்கூலி சட்டத்தின்படி நடைமுறைப்படுத்து...

  • EPF வைப்பு நிதியின் UAN - UNIVERSAL ACCOUNT NUMBER அனைத்து ஊழியர்களுக்கும் உடனே வழங்கு...

  • பல ஆண்டுகளாக குத்தகைக்காரர்களிடம்  பிடித்தம் செய்து வைக்கப்பட்டுள்ள EPF தொகையினை உரிய ஊழியர்களின் கணக்கில் செலுத்து...


தோழர்களே..

அழுது கத்தினால்தான்.. 
அன்னையிடம் கூட பால் கிடைக்கும்...

கரமும் சிரமும் உயர்ந்தால்தான் ...
உரிமைகள்  நம் கையில்  கிடைக்கும்...

இணைந்து கரம் உயர்த்துவோம்...
நம் உரிமைகள் அடைவோம்..

வாரீர்.. தோழர்களே...

தோழமையுடன் 
BSNLEU - NFTE
 மாவட்டச்சங்கங்கள் 
காரைக்குடி.

Wednesday, 15 July 2015

NFTE 
தொலைத்தொடர்பு  ஊழியர்கள் சங்கம் 
இராமநாதபுரம் கிளை 
காரைக்குடி மாவட்டம் 

பொதுக்குழுக் கூட்டம் 

16/07/2015 - வியாழன்  - மாலை 5 மணி 
தொலைபேசி நிலையம் - இராமநாதபுரம் 

விவாதப்பொருள் 

  • கிளை மாநாடு 
  • தோழர். காந்தி பணி நிறைவு விழா 
  • SDE (INDOOR ) ஊழியர் விரோதப்போக்கு 
  • தலமட்டப் பிரச்சினைகள் 
  • இன்ன பிற...
தோழர்களே.. வருக.. வருக..

தோழமையுடன் 

B.ஜெயபாலன்                                        P . காந்தி 
கிளைத்தலைவர்                                கிளைச்செயலர் 

Tuesday, 14 July 2015

விடை பெற்றது...
விஸ்வநாதம்...
மெல்லிசை மன்னர் M.S.விசுவநாதன்  

தமிழ்த்தாய்க்கு.. 
வாழ்த்திசைத்த மலைமகன்.. 
மெல்லிசையின் தலைமகன்..

மெட்டுக்களை..  மொட்டுக்களாக்கியவன்..
சந்தங்களை.. சந்தடிகளில் சேர்த்தவன்..

கவிஞர் வாலி சொன்னார்..
"விசுவநாதனை சந்திக்கும்வரை 
எனக்கு சோறு தின்ன வழியில்லை..
சந்தித்தபின்.. 
எனக்கு சோறு தின்ன நேரமில்லை"

கலை வித்துக்களை உருவாக்கிய விருட்சம்..
கண்ணதாசனை உயர வைத்த பொக்கிஷம்..

பாட்டுக்கள் உள்ளவரை..
பாமரர்கள் உள்ளவரை..
விசுவரூபம்.. 
மங்காது... மறையாது..
ஜூலை - 15
பெருந்தலைவர் காமராஜர் 
பிறந்த நாள் 

"வயிற்றுக்குச்  சோறிடல் வேண்டும்..
இங்கு வாழும் உயிர்க்கெல்லாம்..."
என்ற பாரதியின் கனவை நனவாக்கிய ..

கடையர்களைக்   கடைத்தேற்றிய...  
கல்விக்கடவுள்..  கருப்பு சரசுவதி.. 

பெருந்தலைவர் காமராஜர் 
புகழ் பாடுவோம்...

Monday, 13 July 2015

வாராந்தர ஓய்வும் 
நாலாந்தர நடைமுறைகளும் 

ஆண்டவர் ஆறு நாட்களில் 
விண்ணையும் மண்ணையும் கடலையும்
 அவற்றிலுள்ள அனைத்தையும் படைத்து 
ஏழாம் நாளில் ஓய்ந்திருந்தார்.

ஏழாம் நாள் கடவுளாகிய 
ஆண்டவருக்கான ஓய்வு நாள். 

எனவே அன்று நீயும் உன் மகனும் மகளும் 
உன் அடிமையும் அடிமைப்பெண்ணும் 
உன் கால்நடைகளும் 
உன் நகர்களுக்குள் இருக்கும் அந்நியனும் 
யாதொரு வேலையும் செய்ய வேண்டாம்.

மேலே கண்ட பைபிள் வசனம்
மனிதனுக்கு  வாரத்தில் ஒரு நாள் 
ஓய்வு அவசியம்  என்று கூறுகிறது.

இதையேதான் குறைந்தபட்சக்கூலி சட்டம் - 1948 விதி 23 கூறுகிறது.

MINIMUM WAGES ACT - 1948 
Section - 23 - WEEKLY DAY OF REST  
1) Subject to the provisions of this rule an employee in a scheduled employment in respect of which minimum rates of wages have been fixed under the Act shall be allowed a day of rest every week.

EXPLANATION:

For the purpose of computation of the continuous period of not less than six days specified in the first proviso to this sub rule
a) any day on which an employee is required to attend for work but is given only an allowance for attendance and is not provided with work
b) any day on which an employee is laid off on payment of compensation under the Industrial Disputes Act, 1947 ( 14 of 1947) and
c) any leave or holiday with or without pay granted by the employer  to an employee in the period of six days immediately preceding the rest day, shall be deemed to be days on which the employee has worked.

மனிதனுக்கு வாரத்தில் ஒரு நாள் ஓய்வு வேண்டும்
 என்பதைக் கடவுளின் சட்டமும் கூறுகிறது. 
தொழிலாளர் சட்டமும் கூறுகிறது. 

காரைக்குடி மாவட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளாக
 ஒப்பந்த ஊழியர்களுக்கு வார ஓய்வு அளிக்கப்பட்டு வந்தது. 
ஆனால் திடீரென கடந்த இரு மாதங்களாக ஒப்பந்த ஊழியர்கள் வாரத்தில் 6 நாட்கள் தொடர்ந்து வேலை செய்தால் மட்டுமே வார ஓய்வு அளிக்கப்படும். இடையில் இலாக்கா விடுமுறை வந்தாலோ, சம்பந்தப்பட்ட ஊழியர் விடுப்பு எடுத்தாலோ வார ஓய்வு பறிக்கப்படும் என விதியில் தெளிவற்ற ஒரு குட்டி அதிகாரியால் சுட்டிக்காட்டப்பட்டு 
வார ஓய்வு நிறுத்தப்பட்டு தொழிலாளர் வயிற்றில்
 பலமாக ஓங்கி அடிக்கப்பட்டுள்ளது. 

ஆறு வேலை நாட்களில் 
இடையில் விடுப்போ, விடுமுறையோ வந்தாலும் அவற்றையும் வேலை செய்த நாட்களாக கணக்கில் கொண்டு வார ஓய்வு அளிக்க வேண்டும் என குறைந்த பட்சக்கூலி சட்டம் 1948 விதி 23(C) கூறுகிறது. 

ஆனாலும்  படித்த நமது அதிகாரிகள், 
சாதக சட்டங்களை அமுல்படுத்துவை விடுத்து 
எதையேனும் சுட்டிக்காட்டி ஊழியர்களுக்கு 
பாதகம் செய்வதில் குறியாக உள்ளனர். 

20/05/2009ல் வெளியிடப்பட்ட மத்திய அரசிதழில்
 குறிப்பிடப்பட்டுள்ள ஒரு நாள் கூலி என்பது வார ஓய்வையும் உள்ளடக்கியது. எனவே தனியாக வார ஒய்வு கிடையாது 
என்பது அறிவார்ந்த சிலரின்  வாதம்.

அதே மத்திய அரசிதழில்.. 
மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ள கூலியை விட மாநில அரசுகள் கூடுதல் கூலி நிர்ணயம் செய்திருந்தால் அதைத்தான் ஊழியர்களுக்கு வழங்க வேண்டும் என்ற வழிகாட்டுதலும் உள்ளது.

தற்போது காரைக்குடியில் துப்புரவுத்தொழிலாளிக்கு ரூ.233/= 
ஒரு நாள் கூலியாக வழங்கப்படுகிறது. ஆனால் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் நாள் கூலியாக ரூ.317/= நிர்ணயம் செய்துள்ளார். 
அதிகாரத்தில் உயர்ந்த நமது அதிகாரிகளுக்கு  
இந்த உயர்ந்த கூலியைக் கொடுக்க  மனமில்லை. 
ஒரு நாளைக்கு ரூ.84/= வீதம் மாதம் ரூ.2500/=வரை
 ஒரு சாதாரண துப்புரவுத்தொழிலாளி  உறிஞ்சப்படுகிறான்.

சட்டம் தொழிலாளரை 
UNSKILLED/SEMI SKILLED/HIGHLY SKILLED
என்று தரம்  பிரித்திருந்தாலும் தரமிக்க  நமது அதிகாரிகள் 
அவர்களைத்  தரம் பிரிப்பதில்லை.

கணிணியைத் துடைக்கும் தொழிலாளி முதல்
  கணிணியில் பணி புரியும் ஊழியர் வரை 
அனைவரும் UNSKILLED 
திறமைகுறைந்த  தொழிலாளி என்ற பிரிவின் கீழ்
 ஒரே கூலியின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளனர். 
இதில் சட்டம் இவர்களின் கண்களுக்குத் தெரியாது.

மாநில அரசின் தொழிலாளர் நலச்சட்டங்களின் படி 
ஆண்டுக்கு 9 PAID HOLIDAYS விடுமுறை நாட்கள்  சம்பளத்துடன் வழங்கப்பட வேண்டும். ஆண்டுக்கு 12 நாட்கள் 
தற்காலிக விடுப்பு அளிக்க வேண்டும். 
பல இடங்களில் இது நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தாலும் 
BSNLலில்  இன்னும் ஏறெடுத்தும் பார்க்கப்படவில்லை.

சாதக சட்டங்கள் பல இருந்தாலும் 
நமது அதிகாரிகள் பாதகங்களையே செய்து பழகி விட்டதால் சாதகங்கள்  அவர்களின் கண்களில் படுவதேயில்லை. 
நாடு முழுக்க BSNL நிறுவனம் ஒரே அமைப்பாக இருந்தாலும் 
அடிமட்ட ஊழியரின் பிரச்சினைகளைக் கையாளுவதில் 
ஊருக்கு ஊர் நடைமுறைகள் மாறுபடுகின்றன.

சில மாவட்டங்களில் 
வார ஓய்வுக்கு சம்பளம் அளிப்பதில்லை. 
சில மாவட்டங்களில் வார ஓய்வுக்கு 
சம்பளம் முழுமையாக வழங்கப்படுகிறது. 
சில மாவட்டங்களில் ஒரு நாளைக்கு 
6 மணி நேரம் மட்டுமே சம்பளம் வழங்கப்படுகிறது. 
நாகர்கோவிலில் மாதம் 28.6 நாட்களுக்கு 
மட்டும் சம்பளம் போடப்படுகிறது. 

இப்படியாக ஊருக்கு ஊர் நடைமுறைகள் மாறுகின்றன. 
மாநில நிர்வாகத்தைக் கேட்டால் மிகவும் கூலாக BSNL CORPORATE உத்திரவை அமுல்படுத்துங்கள் என்று கூறுவார்கள். 
CORPORATE அலுவலகத்தை கேட்டால் தொழிலாளர் சட்டங்களை கறாராக அமுல்படுத்துங்கள் என்று கூறுவார்கள். 
கடைசியில் இந்த கண்ணாமூச்சியில்  காணாமல் போவது என்னவோ கடைமட்டத் தொழிலாளியின் அடிவயிற்றுக் கஞ்சிதான்.

எழுதப்பட்ட சட்டங்கள் நாட்டில் எத்தனையோ உண்டு.. 
இவை மக்களைக் காப்பதில்லை..
மாறாக  மனித நேயத்துடன் உருவாக்கப்பட்ட 
எழுதப்படாத சட்டங்களே 
இன்றளவும் மானுடத்தைக் காக்கின்றன. 

வார ஓய்வு என்பது
கடவுளுக்கே தேவைப்பட்டுள்ளது. 
எனவே  அதை மறுப்பது 
கடவுளை மறுப்பதாகும்.. 
மனிதத்தை மறுப்பதாகும்..

நமது கோரிக்கை எல்லாம்..
 நாளை என்ற நிச்சயம் இன்றி 
இன்று மாடாய் உழைக்கும் 
ஒப்பந்த ஊழியரின் வாழ்வு மலர வேண்டாம்..
குறைந்த பட்சம் கருகாமல் இருக்க வேண்டும்..
இதுவே நமது ஆழ்மனதின் அன்றாட வேதனை...
அஞ்சலி 
தோழர்.ஆண்டியப்பன் 

FNTO  சங்கத்தின் 
முன்னாள் தலைவர்களில் ஒருவரும் 
அதன் போட்டி சங்கமான
 FNTOBEA சங்கத்தலைவருமான 

தோழர்.ஆண்டியப்பன்
 
அவர்கள் உடல்நலக்குறைவால் 
இயற்கை எய்தினார். 
நமது ஆழ்ந்த இரங்கலை உரித்தாக்குகிறோம்.
TTA
கூடுதல் ஆண்டு உயர்வுத்தொகை

01/01/2007க்குப்பின் BSNLலில் 
நேரடி நியமனம் செய்யப்பட்ட TTA தோழர்களுக்கு
ஒரு கூடுதல் ஆண்டு உயர்த்தொகை வழங்கிட 
BSNL நிர்வாகம்  13/07/2015 அன்று  உத்திரவிட்டுள்ளது.

அந்த உத்திரவின்படி...


01/01/2007லில் இருந்து 07/05/2010 வரை 
பணியில் அமர்த்தப்பட்ட நேரடி நியமன  TTA  தோழர்களுக்கு 
அவர்களின் சம்பள இழப்பை சரிக்கட்டுவதற்காக
  ஒரு  கூடுதல் ஆண்டு  உயர்வுத்தொகை  வழங்கப்படும்.


 NE-9 சம்பள விகிதமான 13600-25420ல் 
அடிப்படைச் சம்பளமான  ரூ.13600/= உடன்
 ஒரு  கூடுதல் ஆண்டு  உயர்வுத்தொகை சேர்க்கப்பட்டு   
ரூ. 14010/=ல் சம்பள நிர்ணயம் செய்யப்படும்.


நிலுவைத்தொகை முழுமையான
 காலத்திற்கும் வழங்கப்படும்.

சில இடங்களில் TTA  தோழர்களின் சம்பள இழப்பை
 சரி செய்ய PERSONAL PAY வழங்கப்பட்டது. 
அத்தகைய தோழர்களுக்கு கூடுதல் ஆண்டு உயர்வுத்தொகை வழங்கப்பட்டு PERSONAL PAY  சரி செய்யப்படும்.

மேற்கண்ட உத்திரவு 
இரண்டாவது ஊதியக்குழு அமுலாக்கத்தேதியான 01/01/2007 முதல் 
இரண்டாவது ஊதியக்குழு உத்திரவு தேதியான  07/05/2010 வரை 
பணி நியமனம் பெற்ற TTA தோழர்களுக்கு மட்டுமே பொருந்தும். 
மற்ற பதவிகளுக்குப் பொருந்தாது. 

07/05/2010ல் இருந்து 5 ஆண்டுகளுக்கும் மேலாக
 இப்பிரச்சினையை விடாது பேசி தீர்வுக்கு வழி வகை செய்த 
நமது சங்கத்திற்கு  நன்றிகள் பல .