Monday 13 July 2015

வாராந்தர ஓய்வும் 
நாலாந்தர நடைமுறைகளும் 

ஆண்டவர் ஆறு நாட்களில் 
விண்ணையும் மண்ணையும் கடலையும்
 அவற்றிலுள்ள அனைத்தையும் படைத்து 
ஏழாம் நாளில் ஓய்ந்திருந்தார்.

ஏழாம் நாள் கடவுளாகிய 
ஆண்டவருக்கான ஓய்வு நாள். 

எனவே அன்று நீயும் உன் மகனும் மகளும் 
உன் அடிமையும் அடிமைப்பெண்ணும் 
உன் கால்நடைகளும் 
உன் நகர்களுக்குள் இருக்கும் அந்நியனும் 
யாதொரு வேலையும் செய்ய வேண்டாம்.

மேலே கண்ட பைபிள் வசனம்
மனிதனுக்கு  வாரத்தில் ஒரு நாள் 
ஓய்வு அவசியம்  என்று கூறுகிறது.

இதையேதான் குறைந்தபட்சக்கூலி சட்டம் - 1948 விதி 23 கூறுகிறது.

MINIMUM WAGES ACT - 1948 
Section - 23 - WEEKLY DAY OF REST  
1) Subject to the provisions of this rule an employee in a scheduled employment in respect of which minimum rates of wages have been fixed under the Act shall be allowed a day of rest every week.

EXPLANATION:

For the purpose of computation of the continuous period of not less than six days specified in the first proviso to this sub rule
a) any day on which an employee is required to attend for work but is given only an allowance for attendance and is not provided with work
b) any day on which an employee is laid off on payment of compensation under the Industrial Disputes Act, 1947 ( 14 of 1947) and
c) any leave or holiday with or without pay granted by the employer  to an employee in the period of six days immediately preceding the rest day, shall be deemed to be days on which the employee has worked.

மனிதனுக்கு வாரத்தில் ஒரு நாள் ஓய்வு வேண்டும்
 என்பதைக் கடவுளின் சட்டமும் கூறுகிறது. 
தொழிலாளர் சட்டமும் கூறுகிறது. 

காரைக்குடி மாவட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளாக
 ஒப்பந்த ஊழியர்களுக்கு வார ஓய்வு அளிக்கப்பட்டு வந்தது. 
ஆனால் திடீரென கடந்த இரு மாதங்களாக ஒப்பந்த ஊழியர்கள் வாரத்தில் 6 நாட்கள் தொடர்ந்து வேலை செய்தால் மட்டுமே வார ஓய்வு அளிக்கப்படும். இடையில் இலாக்கா விடுமுறை வந்தாலோ, சம்பந்தப்பட்ட ஊழியர் விடுப்பு எடுத்தாலோ வார ஓய்வு பறிக்கப்படும் என விதியில் தெளிவற்ற ஒரு குட்டி அதிகாரியால் சுட்டிக்காட்டப்பட்டு 
வார ஓய்வு நிறுத்தப்பட்டு தொழிலாளர் வயிற்றில்
 பலமாக ஓங்கி அடிக்கப்பட்டுள்ளது. 

ஆறு வேலை நாட்களில் 
இடையில் விடுப்போ, விடுமுறையோ வந்தாலும் அவற்றையும் வேலை செய்த நாட்களாக கணக்கில் கொண்டு வார ஓய்வு அளிக்க வேண்டும் என குறைந்த பட்சக்கூலி சட்டம் 1948 விதி 23(C) கூறுகிறது. 

ஆனாலும்  படித்த நமது அதிகாரிகள், 
சாதக சட்டங்களை அமுல்படுத்துவை விடுத்து 
எதையேனும் சுட்டிக்காட்டி ஊழியர்களுக்கு 
பாதகம் செய்வதில் குறியாக உள்ளனர். 

20/05/2009ல் வெளியிடப்பட்ட மத்திய அரசிதழில்
 குறிப்பிடப்பட்டுள்ள ஒரு நாள் கூலி என்பது வார ஓய்வையும் உள்ளடக்கியது. எனவே தனியாக வார ஒய்வு கிடையாது 
என்பது அறிவார்ந்த சிலரின்  வாதம்.

அதே மத்திய அரசிதழில்.. 
மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ள கூலியை விட மாநில அரசுகள் கூடுதல் கூலி நிர்ணயம் செய்திருந்தால் அதைத்தான் ஊழியர்களுக்கு வழங்க வேண்டும் என்ற வழிகாட்டுதலும் உள்ளது.

தற்போது காரைக்குடியில் துப்புரவுத்தொழிலாளிக்கு ரூ.233/= 
ஒரு நாள் கூலியாக வழங்கப்படுகிறது. ஆனால் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் நாள் கூலியாக ரூ.317/= நிர்ணயம் செய்துள்ளார். 
அதிகாரத்தில் உயர்ந்த நமது அதிகாரிகளுக்கு  
இந்த உயர்ந்த கூலியைக் கொடுக்க  மனமில்லை. 
ஒரு நாளைக்கு ரூ.84/= வீதம் மாதம் ரூ.2500/=வரை
 ஒரு சாதாரண துப்புரவுத்தொழிலாளி  உறிஞ்சப்படுகிறான்.

சட்டம் தொழிலாளரை 
UNSKILLED/SEMI SKILLED/HIGHLY SKILLED
என்று தரம்  பிரித்திருந்தாலும் தரமிக்க  நமது அதிகாரிகள் 
அவர்களைத்  தரம் பிரிப்பதில்லை.

கணிணியைத் துடைக்கும் தொழிலாளி முதல்
  கணிணியில் பணி புரியும் ஊழியர் வரை 
அனைவரும் UNSKILLED 
திறமைகுறைந்த  தொழிலாளி என்ற பிரிவின் கீழ்
 ஒரே கூலியின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளனர். 
இதில் சட்டம் இவர்களின் கண்களுக்குத் தெரியாது.

மாநில அரசின் தொழிலாளர் நலச்சட்டங்களின் படி 
ஆண்டுக்கு 9 PAID HOLIDAYS விடுமுறை நாட்கள்  சம்பளத்துடன் வழங்கப்பட வேண்டும். ஆண்டுக்கு 12 நாட்கள் 
தற்காலிக விடுப்பு அளிக்க வேண்டும். 
பல இடங்களில் இது நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தாலும் 
BSNLலில்  இன்னும் ஏறெடுத்தும் பார்க்கப்படவில்லை.

சாதக சட்டங்கள் பல இருந்தாலும் 
நமது அதிகாரிகள் பாதகங்களையே செய்து பழகி விட்டதால் சாதகங்கள்  அவர்களின் கண்களில் படுவதேயில்லை. 
நாடு முழுக்க BSNL நிறுவனம் ஒரே அமைப்பாக இருந்தாலும் 
அடிமட்ட ஊழியரின் பிரச்சினைகளைக் கையாளுவதில் 
ஊருக்கு ஊர் நடைமுறைகள் மாறுபடுகின்றன.

சில மாவட்டங்களில் 
வார ஓய்வுக்கு சம்பளம் அளிப்பதில்லை. 
சில மாவட்டங்களில் வார ஓய்வுக்கு 
சம்பளம் முழுமையாக வழங்கப்படுகிறது. 
சில மாவட்டங்களில் ஒரு நாளைக்கு 
6 மணி நேரம் மட்டுமே சம்பளம் வழங்கப்படுகிறது. 
நாகர்கோவிலில் மாதம் 28.6 நாட்களுக்கு 
மட்டும் சம்பளம் போடப்படுகிறது. 

இப்படியாக ஊருக்கு ஊர் நடைமுறைகள் மாறுகின்றன. 
மாநில நிர்வாகத்தைக் கேட்டால் மிகவும் கூலாக BSNL CORPORATE உத்திரவை அமுல்படுத்துங்கள் என்று கூறுவார்கள். 
CORPORATE அலுவலகத்தை கேட்டால் தொழிலாளர் சட்டங்களை கறாராக அமுல்படுத்துங்கள் என்று கூறுவார்கள். 
கடைசியில் இந்த கண்ணாமூச்சியில்  காணாமல் போவது என்னவோ கடைமட்டத் தொழிலாளியின் அடிவயிற்றுக் கஞ்சிதான்.

எழுதப்பட்ட சட்டங்கள் நாட்டில் எத்தனையோ உண்டு.. 
இவை மக்களைக் காப்பதில்லை..
மாறாக  மனித நேயத்துடன் உருவாக்கப்பட்ட 
எழுதப்படாத சட்டங்களே 
இன்றளவும் மானுடத்தைக் காக்கின்றன. 

வார ஓய்வு என்பது
கடவுளுக்கே தேவைப்பட்டுள்ளது. 
எனவே  அதை மறுப்பது 
கடவுளை மறுப்பதாகும்.. 
மனிதத்தை மறுப்பதாகும்..

நமது கோரிக்கை எல்லாம்..
 நாளை என்ற நிச்சயம் இன்றி 
இன்று மாடாய் உழைக்கும் 
ஒப்பந்த ஊழியரின் வாழ்வு மலர வேண்டாம்..
குறைந்த பட்சம் கருகாமல் இருக்க வேண்டும்..
இதுவே நமது ஆழ்மனதின் அன்றாட வேதனை...

No comments:

Post a Comment