Wednesday, 8 July 2015

மடியத் திருவுளமோ?

நமது  BSNL நிறுவனத்தில்  
அகன்ற அலைவரிசை இணைப்புத்தரும் பணி 
 மற்றும் அதனைப் பராமரிக்கும் பணி ஆகியவற்றை
 குறிப்பிட்ட சில நகரங்களில்  தனியாருக்கு விடுவதற்கு 
நிர்வாகம் முடிவெடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 

இதில் ஆச்சரியப்படுவதற்கு, ஆவேசப்படுவதற்கு ஏதுமில்லை. 
ஊழியர்களை உதவாக்கரைகளாக ஆக்க முயற்சிக்கும் 
பல நடவடிக்கைகளில் இதுவும் ஓன்று. 
அது மட்டுமல்ல ஏற்கனவே  ஜெய்ப்பூர், டேராடூன்,மீரட் மற்றும் அகமதாபாத் ஆகிய நகரங்களில் BROADBAND சேவையை  தனியாருக்கு விடும் பணி நடைமுறையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. 

வழக்கம் போலவே நிர்வாகம் இந்தப்பிரச்சினையிலும் தொழிற்சங்கங்களை கலந்து ஆலோசிக்கவில்லை. 
நமது சங்கங்கள் தங்களது எதிர்ப்பைக் காட்டியுள்ளன. 

ஆனால் இந்தப் பிரச்சினையின் மறுபக்கத்தையும்
 நாம் நடுநிலையோடு காணவேண்டும். 

இன்னும் கூட  பல இடங்களில் BROAD BAND 
இணைப்பு கேட்டவுடன் கொடுக்கப்படுவதில்லை. 
உரிய கருவிகள், பொருட்கள், ஊழியர்கள், CABLE PAIR  இல்லாத காரணங்களால்  சில இடங்களில் தாமதம்  நிலவுகிறது. 

சில இடங்களில் உரிய கவனிப்பு இல்லை என்றால் 
 இணைப்பு தாமதப்படுத்தப்படுகிறது. பல இடங்களில் 
பெரிய பெரிய சிபாரிசு மூலம்  இணைப்பு பெறப்படுகிறது. 
புதிய இணைப்புக்காக வருபவர்களிடம் அதிகாரிகளே 
கையேந்தும் அசிங்கமும் ஆங்காங்கே நடைபெறுகிறது.   

இணையதளப் பயன்பாடு 
இன்றைய அத்தியாவசியமாக மாறிவிட்டது. 
எனவே  108 சேவை போன்று BROAD BAND பழுதுகள் உடனுக்குடன் நீக்கப்பட வேண்டும். ஆனால் பழுதுகள் உரிய நேரத்திலே 
பல இடங்களிலே நீக்கப்படுவதில்லை. 
 1008 தடவை வாடிக்கையாளர்கள்  
வாய் வலிக்க சொன்னாலும் கதை நடப்பதில்லை. 

பல வாடிக்கையாளர்கள் தங்களது இணைப்பு மாதக்கணக்கில் 
வேலை செய்வதில்லை என்றும் பில்கள் மட்டும்
 மாதந்தோறும் வந்து கொண்டிருக்கின்றன என்றும் 
நொந்து  கூற நாம் கேட்டுள்ளோம். 
பழுது நீக்க வேண்டி பலர் DGM, GM, CGM  வரையிலும் 
தொலைபேசியில் முறையிடுவதையும் நாம் பார்க்கின்றோம். 
சிலர் பழுது நீக்க  BSNLலில் பணி புரியும் தங்கள் சொந்த பந்தங்கள் 
மற்றும் நண்பர்களின் உதவியை நாடுகின்றனர். 

எதுவும் பலனளிக்காவிட்டால் பலர் மனம் நொந்து
 இணைப்பைத் துண்டித்து விட்டு தனியார் சேவையை நாடும் காட்சியையும் நாம் காண்கின்றோம். 

ஆனாலும் கடமை உணர்வு மிக்க பல தோழர்கள்
 இரவு பகல் பாராது உழைக்கும் நிலையையும்,
 அவர்களுக்கு பெட்ரோல் செலவுக்கு கூட 
நிர்வாகம் ஏதும் தர இயலாத நிலையையும் கூட 
இங்கே நாம் காண்கின்றோம். 

அகன்ற அலை வரிசை இணைப்பின் ஆதரவில்தான் 
தரை வழி இணைப்பு வாழ்கிறது என்ற உண்மை எல்லோருக்கும் புரிந்ததே. வருமானம் மிக்க அகன்ற அலை வரிசை சேவையை 
கண்ணின் மணி போல் நாம் காக்க வேண்டும். நம்மை மீறி எந்த தனியாரும் இங்கே இணைப்பை கொடுத்திட முடியாது. 
சிறப்பாக பராமரிக்கவும் முடியாது.  
நமக்கு வேண்டியதெல்லாம் சேவை காக்கும் உறுதிதான். 

அன்று திருப்பூரில் US - WEST என்னும் நிறுவனத்திற்கு 
புதிய இணைப்புக்கொடுக்கும் உரிமம் வழங்கப்பட்ட போது 
நாம் அதை எதிர்த்து  போராட மட்டும் செய்யவில்லை. 
மாறாக நிர்வாகமே வியக்கும் வண்ணம்
 இணைப்புகளை மின்னலென கொடுத்தோம். 
நமது துறை காத்தோம். 
நம்மையும்  காத்தோம். 
அந்த வீரமும் விவேகமும் 
இன்று அதனினும் பல மடங்கு 
நமக்கு தேவைப்படுகிறது. 

அன்று சுதந்திரத்தை நினைத்து...
எண்ணமெல்லாம் நெய்யாக 
எம் உயிரில் வளர்ந்த 
வண்ண விளக்கிது..
மடியத் திருவுளமோ?
என்று மனம் உருகிப் பாடினான் பாரதி...

நம் உயிரில் கலந்த BSNLஐ 
நம் உணர்வில் கலந்த BSNLஐ 
காக்க நாம் வேண்டாமா ?
தனியாருக்கு இடமும் தரலாமோ?
மடிய நாமும் விடலாமோ?

சிந்திப்போம்.. தோழர்களே..

2 comments:

  1. respected com. whatever you have said is 100% true, feel the pain of our service, thank you com

    ReplyDelete
  2. பல அதிகாாிகளும் தொழிலாளிகளும் கடமை செய்ய தவறுகின்றனா் அதிலும் சிலா் வேலை நோ்மையாக பாா்க்கிறேன் என்று வரும் தொலைபேசி இணைப்பை தடுத்து விடுகின்றனா் இன்னும் பலா் என்ன வேலை என்று தொியாமல் இருக்கையில் இருந்தபடி வீணாக்குகின்றனா் இப்படி அடுக்கடுக்காக சொல்லிக்கொண்டே போகலாம் நான் என்னை சாிசெய்தால் மற்றவன் சாியாகிவிடுவான் என்ற நிலைவந்தால் மட்டுமே இது மாறும்

    ReplyDelete