Friday 3 July 2015

மூத்த கிரேக்கமும்... 
முதியோர்  துயரமும்..

கிரேக்கர்கள் உலகின் மூத்தவர்கள்...
அகிலத்துக்கும் அறிவொளி தந்தவர்கள்..
இன்றோ கிரேக்கத்தின் மூத்த குடிமக்கள் 
அனைவரும் துன்பத்தில் மூழ்கிக் கிடக்கின்றனர்..

கிரேக்கத்தில் கடுமையான பொருளாதார நெருக்கடி..
வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட இயலாத நிலை..
கடன் கொடுத்த நாடுகளின்  கடுமையான நெருக்கடியால் 
மூத்த குடிமக்களின் ஓய்வூதியம் குறைக்கப்பட்டுள்ளது..
வங்கியில் இருந்து எடுக்கப்படும் பணத்தின்
 அளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

உழைக்கும் மக்கள் 
மாற்றுப் பொருளாதாரத்தை உருவாக்கி வருகின்றனர்..
ஓய்வு பெற்ற மக்கள் என்ன செய்ய இயலும்?...

எங்களின் வயிற்றுக்குப் பதில்  சொல்லு 
எங்களின் வைத்தியத்துக்கு வழி சொல்லு..
என்பதே இன்றைய கிரேக்க மூத்த குடிமக்களின் கோரிக்கை..
கேட்டாலே நெஞ்சம் கனக்கின்றது...

No comments:

Post a Comment