Friday, 31 July 2015

அஞ்சலி 
காந்தியவாதி சசிபெருமாள் 


தமிழகத்தில் தொடர்ந்து மது எதிர்ப்பு பிரச்சாரம் செய்து 
மக்கள் மத்தியில் மது விலக்கு கொள்கையை பரப்பி வந்த 
காந்தியவாதி சசிபெருமாள் 
இன்று 31/07/2015 மார்த்தாண்டம் அருகே உண்ணாமலைக்கடைப்பகுதியில் உள்ள 
மதுக்கடையை மூடக்கோரி 
நடத்திய போராட்டத்தில் தன் இன்னுயிர் நீத்தார். 

நேற்று 30/07/2015  அப்துல் கலாம் மறைவிற்கு 
இறுதி அஞ்சலி செலுத்த அவர் இராமேஸ்வரம் வந்திருந்தார்.  
இன்று அவருக்கே அஞ்சலி செலுத்தும் நிலை உருவாகி விட்டது. 
அவரது மரணம் பல பலத்த  சந்தேகங்களை உருவாக்கியுள்ளது.

மது குடிப்பவரையும் கொல்லும் 
எதிர்ப்பவரையும் கொல்லும்...
என்ற நிலை தமிழகத்தில் உருவாகியுள்ளது.

களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க் 
குளித்தானைத் தீத்துரீ அற்று.
என்பது குறளாகும்.

தண்ணீருக்குள் இருப்பவனை விளக்கு கொண்டு தேடுவதும் 
தண்ணியில் மிதப்பவனை  விளக்கங்கள் சொல்லி திருத்த முயலுவதும் 
ஒன்றுதான் என்பது  அதன் பொருளாகும்.

திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் 
திருட்டை ஒழிக்க முடியாது 
என்று  பாடிய பட்டுக்கோட்டை இன்றிருந்தால் 

குடிகாரனாய் பார்த்து திருந்தாவிட்டால் 
குடியை ஒழிக்க முடியாது
என்று பாடியிருப்பார்.

மது என்னும் அரக்கனுக்கு எதிரான போராட்டத்தில் 
தன் இன்னுயிர் நீத்த காந்தியவாதி 
சசிபெருமாள் மறைவிற்கு நமது அஞ்சலி உரித்தாகுக...

No comments:

Post a Comment