ஒப்பந்த ஊழியரின் தீர்க்கப்படாத
பிரச்சினைகள் மீதான கோரிக்கை மனு
AITUC, NFTE மற்றும் TMTCLU சார்பில்
நிர்வாகப்பிரிவு DGMகள் இருவரும்
நேற்று அலுவலகத்தில் இல்லாத காரணத்தால்
காரைக்குடி துணைப்பொதுமேலாளர் நிதி
DGM(F) திரு.N.சந்திரசேகரன்
அவர்களிடம் அளிக்கப்பட்டது.
ஒப்பந்த ஊழியர்கள் சங்கம்
AITUCயுடன் இணைக்கப்பட்டுள்ளதால்
அதன் மாநிலக்குழு உறுப்பினர்
தோழர்.பழ.இராமச்சந்திரன் உடனிருந்து வழிகாட்டினார்.
பேச்சுவார்த்தையில் உதவிப்பொது மேலாளர் நிர்வாகம் திரு.சுவாமிநாதன் கலந்து கொண்டார்.
- சம்பளத்துடன் கூடிய வார ஓய்வு தொடர்ந்து வழங்கப்பட வேண்டும்.
- மாவட்ட ஆட்சியர் நிர்ணயித்துள்ள கூலி கொடுக்கப்பட வேண்டும்..
- ESI மருத்துவ அட்டை வழங்கப்பட வேண்டும்..
- அடையாள அட்டை வழங்கப்படவேண்டும்..
- EPF கணக்கு துவக்கப்பட வேண்டும்..
- போனஸ் வழங்கப்பட வேண்டும்..
- மரணமுற்ற காவலர் ஆரோக்கியசாமி குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும்..
என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகள்
விவாதிக்கப்பட்டன. நிர்வாகத்தரப்பில் ஆவண செய்வதாக உறுதியளிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய நிகழ்ச்சிகளை கண்ணுற்ற நமது தோழர்கள்
இது தண்ணீர்.. தண்ணீர்... கதை போல் இருக்கிறதே..
என மன வேதனை சொல்லினர்.
இது அடிமட்ட ஊழியரின் கண்ணீர்... கண்ணீர் கதை...
நிர்வாகம் நிச்சயம் மனிதாபிமானத்துடன்
கோரிக்கைகளைத் தீர்த்து வைக்கும் என்று
தோழர்களுக்கு நம்பிக்கை தெரிவித்துள்ளோம்.
நம்பினோர் கெடுவதில்லை... நான்மறைத் தீர்ப்பு...