மாநிலச்செயலர்கள் கூட்ட முடிவுகள்
நமது NFTE சங்கத்தின் மாநிலச்செயலர்கள் கூட்டம்
டெல்லியில் ஆகஸ்ட் 10 மற்றும் 11 தேதிகளில் நடைபெற்றது. கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
============================================
தேசம் முழுவதுமுள்ள BSNL செல் கோபுரங்களைத் தனியாகப் பிரித்து
புதிய துணை நிறுவனம் ஏற்படுத்த முயற்சிக்கும் அரசின் மோசமான முடிவை எதிர்த்து அனைத்து சங்கங்களையும் ஒன்றிணைத்து போராட்டக்களம் காண மத்திய சங்கம் முழு முயற்சி செய்ய வேண்டும்.
============================================
BSNL நிறுவனத்தை சீர்குலைக்கும் மற்றொரு முயற்சியாக
நமது அகன்ற அலைவரிசை இணைப்புகளில் உருவாகும் பழுதுகளை நீக்கும் பணியை சில குறிப்பிட்ட மாநிலங்களிலும், மாவட்டங்களிலும் தனியாருக்கு விடுவதற்கு எத்தனிக்கும் நிர்வாகம் தனது ஊழியர்கள் மீது நம்பிக்கை வைத்து மேற்கண்ட மோசமான முடிவைக் கைவிட வேண்டும்.
============================================
DELOITTEE குழு பரிந்துரையின் பாதகங்களை மாநிலச்செயலர்கள் கூட்டம் விரிவாக விவாதித்தது. DELOITTEE குழு பரிந்துரை அமுலாக்கத்தில் எந்தவொரு இறுதி முடிவு எடுப்பதற்கும்
முன்பு சங்கங்களைக் கலந்து ஆலோசித்து ஒருமித்த கருத்து
ஏற்பட்ட பின்னரே முடிவுகளை அமுலாக்க வேண்டும்.
============================================
உற்பத்தியோடு இணைந்த போனஸ் வழங்கும் விவகாரத்தில் தற்போதைய போனஸ் குழுவின் செயல்பாடுகளை மாநிலச்செயலர்கள் கூட்டம் பாராட்டுகிறது. வரும் தீபாவளிக்குள் சாதகமான முடிவு எட்டப்பட வேண்டும். அவ்வாறு எட்டப்படாத பட்சத்தில்
மத்திய சங்கம் போராட்ட அறிவிப்பு செய்திட வேண்டும்.
============================================
ஊழியர்கள் பெயர் மாற்றக்குழுவின் செயல்பாடுகள் பாராட்டுக்குரியது. அதே நேரம் அதிருப்திக்கு ஆளான SR.TOA தோழர்களின் பெயர் மாற்றம் மறு பரிசீலனை செய்யப்பட வேண்டும். NE-10ல் உள்ள தோழர்கள் துணைக்கண்காணிப்பாளர்கள் என்றும், NE-9ல் உள்ள தோழர்கள் உதவிக்கண்காணிப்பாளர்கள் என்றும் அழைக்கப்பட வேண்டும்.
============================================
இந்தியத் தொழிலாளர் வர்க்கத்திற்கு எதிராகச் செயல்படும் மத்திய அரசின் மோசமான தொழிலாளர் விரோதக் கொள்கைகளை எதிர்த்து செப்டம்பர் 2ல் நாடு முழுக்க நடைபெறவுள்ள அகில இந்திய வேலை நிறுத்தத்தில் NFTE முழுமையான பங்கு பெற வேண்டும்.
No comments:
Post a Comment