செய்திகள்
புதிய போனஸ் வரையறையை உருவாக்குவதற்கான
போனஸ் குழுக்கூட்டம் 31/08/2015 அன்று
டெல்லியில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
NFTE சார்பில் தோழர்.இஸ்லாம் அவர்களும்,
BSNLEU சார்பில் தோழர்.அபிமன்யு அவர்களும் கலந்து கொள்வார்கள்.
===============================================
மாநில நிர்வாகங்கள் தங்கள் பகுதிகளில்
SIM பற்றாக்குறை இருப்பின்
உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என
டெல்லி நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
===============================================
DELOITTEE குழு பரிந்துரையின்படி
SSA எனப்படும் மாவட்ட அமைப்புக்கள் BUSINESS AREA எனப்படும் அமைப்புக்களாக உடனடியாக மாற்றப்பட வேண்டும் என
டெல்லி நிர்வாகம் UP/MP உள்ளிட்ட
10 மாநில நிர்வாகங்களை துரிதப்படுத்தியுள்ளது.
தமிழகம் அடுத்த கட்ட நடவடிக்கையில் இருக்கலாம்.
===============================================
01/01/2007க்குப்பின் பணியில் அமர்த்தப்பட்ட
TTA அல்லாத ஊழியர்களின் சம்பள இழப்பை ஈடு கட்ட
நமது மத்திய சங்கம் நிர்வாகத்தை வலியுறுத்தி வருகின்றது.
===============================================
பதவிகளின் பெயர் மாற்றப் பரிந்துரையை BSNL நிர்வாகம் ஏற்றுக்கொள்ளவில்லை என வதந்திகள் பரவின.
நமது மத்திய சங்கம் இதை மறுத்ததுடன், குழுவின் பரிந்துரைகள் அமுலாக்கப்படும் என உறுதியாக கூறியுள்ளது.
===============================================
வழக்கம்போல் இந்த ஆண்டும் VRS வதந்தி பரவியது.
ஆனால் தற்போதைய நிதி சூழலில்.. அரசிடமிருந்து நிதி உதவி கிடைக்காத வரையில் விருப்ப ஓய்வு என்பது சாத்தியமில்லை
என BSNL அதிகாரிகள் தரப்பு கூறியுள்ளது.
===============================================
7வது ஊதியக்குழு விரைவில் அறிவிக்கப்படும் எனவும்
இதனால் அரசுக்கு 16 சத கூடுதல் ஊதிய சுமை ஏற்படும் எனவும்
அரசு அறிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
No comments:
Post a Comment