Monday, 10 August 2015

NFTE 
இராமநாதபுரம் 
கிளை மாநாட்டுத் தீர்மானங்கள் 
=============================================================

மாநில... நிர்வாகமே...
  • கடந்த 10 வருடகாலமாக JTO Officiating ஆகப்பணிபுரியும் TTA தோழர்களை நிரந்தர JTOவாக பணியமர்த்து...
  • இரண்டு ஆண்டுகளுக்கு முன்னே JTO LICE போட்டித் தேர்வு எழுதி தேர்வு முடிவுக்காக அகலிகை போன்று காத்திருக்கும் TTA தோழர்களுக்கு உடனடியாக தேர்வு முடிவுகளை அறிவிப்பு செய்...

மாவட்ட நிர்வாகமே...
  • இராமநாதபுரம் தொலைபேசி நிலைய துணைக்கோட்டப் பொறியாளரின் SDE (INDOOR) தொழிலாளர் விரோத, தொழிற்சங்க விரோத, தன்னிச்சையான செயல்பாடு, தொழிலாளர்களைப் பிரித்தாளும் சூழ்ச்சி, ஒருதலைப் பட்சமான முடிவு எடுத்தல் மற்றும் தான் என்ற அகங்காரம் கொண்டு செயல்படுதல், பணிநேரத்தில் பிற தொழில்கள் செய்வது போன்ற செயல்களை கிளை மாநாடு வன்மையாகக் கண்டிக்கின்றது. இவரைப் போன்றவர்கள் நமது நிறுவனத்தில் தொடருவது நமது நிறுவனத்தின் வளர்ச்சிக்கு கேடாகும். எனவே மாவட்ட நிர்வாகமே... உரிய நடவடிக்கை எடுத்து... ஊழியரையும் நிறுவனத்தையும் காப்பாற்று...
  • காரைக்குடி தொலைதொடர்பு மாவட்டத்தில் ஒரு முக்கிய பகுதியான இராமநாதபுரத்தில் ஒரு நிரந்தர கோட்டப் பொறியாளரை பணியமர்த்து...
  • கீழக்கரை தொலைபேசி நிலையத்திற்கு ஒரு முறைகூட செல்லாத துணைக்கோட்டப் பொறியாளரை வாரம் ஒரு முறையாவது கீழக்கரைக்கு செல்ல உத்திரவிடு...
  • இராமநாதபுரம் கோட்டத்தில் கடந்த 8 வருடங்களாக வழங்கப்படாத தொலைபேசி பழுது நீக்கு உபகரணங்களை JCMல் ஒப்புகொண்டபடி உடனே வழங்கு...
  • மிகவும் பழுதடைந்து ஆபத்தான நிலையில் உள்ள தேவிபட்டிணம் தொலைபேசி நிலையத்தை உடனடியாக வேறு இடம் மாற்று.. அதுவரை ஊழியர்கள் உயிருடன் பணி செய்ய வெளியில் ஒரு கூரை அமைத்துக்கொடு...
தோழமையுடன்...
புதிதாக பொறுப்பேற்றுள்ள

B.ஜெயபாலன், CTS R.இராமமூர்த்தி,JTO@TTA K.தங்கவேலு,TM
கிளைத்தலைவர் கிளைச்செயலர் கிளைப்பொருளர்

2 comments:

  1. pls explain in what methodology the OJTO's are all became REGULAR JTO.

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete