Monday 3 September 2018


செய்திகள்

விலைவாசிப்புள்ளி உயர்வு

ஜூலை 2018ல் விலைவாசிப்புள்ளி
இதுவரை இல்லாத அளவிற்கு 10 சதம் உயர்ந்துள்ளது.
அக்டோபர் மாத IDAவைக் கணக்கிட
ஜூன்... ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாத
விலைவாசிப்புள்ளிகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
ஆகஸ்ட் மாத விலைவாசிப்புள்ளியைப் பொறுத்து
அக்டோபர் மாத IDA உயர்வு தெரிய வரும்.
ஆகஸ்ட் மாதம் விலைவாசிப்புள்ளி வீழ்ச்சி அடைந்தால் கூட
அக்டோபர் மாதம் IDA குறைந்தபட்சம் 6 புள்ளிகளுக்கு
மேல் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
-------------------------------------------------------------------------------
JE இலாக்காத்தேர்வில் தளர்வு..

28/01/2018ல் நடைபெற்ற JE இலாக்காத்தேர்வில்...
மிகக்கடினமான கேள்விகள் கேட்கப்பட்டன. 
ஆயிரக்கணக்கான காலியிடங்கள் இருந்தும் 
ஒரு நூறு தோழர்களே தேர்வில் வெற்றி பெற்றிருந்தனர்.  
எனவே மதிப்பெண்களில் தளர்வு கேட்டு 
நமது சங்கம் தொடர்ந்து நிர்வாகத்தை வலியுறுத்தியது. 
நமது கோரிக்கையை ஏற்று 31/08/2018 அன்று நிர்வாகம் 
தகுதி மதிப்பெண்களைத் தளர்த்தி உத்திரவிட்டுள்ளது.

தற்போதைய தளர்வின்படி... 
OC மற்றும் OBC பிரிவினர் 
தனித்த பாடங்களில் குறைந்தபட்சம் 20 சதமும்...
ஒட்டுமொத்தமாக 30 சதமும்...
SC/ST பிரிவினர் 
தனித்த பாடங்களில் குறைந்தபட்சம் 15 சதமும்...
ஒட்டுமொத்தமாக 23 சதமும் 
மதிப்பெண்கள் பெற வேண்டும். 
மொத்தத்தில் AGGREGATE எனப்படும் 
மொத்த மதிப்பெண்களில் 7 மதிப்பெண்களை மட்டும் 
அனைத்துப் பிரிவினருக்கும் நிர்வாகம் தளர்த்தியுள்ளது. 
இந்த தளர்வு ஒருகட்டமாக மட்டுமே அனுமதிக்கப்படுகின்றது. 
மதிப்பெண் தவிர வயதுவரம்பு, 
சேவைக்காலம் போன்றவற்றில் தளர்வு கிடையாது. 
மேற்கண்ட தளர்வால்...
மேலும் சில நூறு தோழர்கள் பயன்பெறுவார்கள்.
 -------------------------------------------------------------------------------
குழந்தைகள் பராமரிப்பு விடுப்பு


22/06/2018 அன்று DOPT இலாக்கா
குழந்தைகள் பராமரிப்பு விடுப்பு சம்பந்தமாக
சில விளக்கங்களை அளித்திருந்தது.
அதன்படி…
உடல் ஊனமுற்ற குழந்தைகளுக்கு  நிர்ணயிக்கப்பட்ட
22 வயது என்ற உச்சவரம்பு விலக்கப்படுகின்றது.
குழந்தைகள் பராமரிப்பு விடுப்பு 
5 நாட்களுக்கு குறைவாக எடுக்க இயலாது.

மேற்கண்ட உத்திரவு BSNL ஊழியர்களுக்கும் பொருந்தும் என்றும்
வருங்காலங்களில் DOPT இலாக்கா CCL சம்பந்தமாக வெளியிடும் அனைத்து உத்திரவுகளும் BSNL ஊழியர்களுக்கும் பொருந்தும் என்றும் தனியாக விளக்கம் கேட்கவேண்டியதில்லை எனவும் 
BSNL நிர்வாகம் 27/08/2018 தேதியிட்ட கடிதத்தில் கூறியுள்ளது.

No comments:

Post a Comment