AUAB - அனைத்து சங்க கூட்ட முடிவுகள்
21/06/2021 அன்று காணொளிக்காட்சி வாயிலாக
BSNL AUAB அனைத்து சங்க கூட்டம் நடைபெற்றது.
கீழ்க்கண்ட சங்கங்கள் கலந்து கொண்டன.
NFTE , BSNLEU, SNEA , AIGETOA, AIBSNLEA,
SEWA BSNL, FNTO, BSNLMS, BSNLATM, TEPU & BSNLOA
இம்முறை AIGETOA மற்றும் SEWA BSNL
சங்கங்கள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
--------------------------------------------------------
கீழ்க்கண்ட பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டன...
4G சேவை அனுமதிப்பதில் தொடரும் தாமதம்
ஊழியர்கள் சம்பளப்பட்டுவாடாவில் தொடரும் தாமதம்.
DOTயில் இருந்து BSNLக்கு வரவேண்டிய ஏராளமான பாக்கித்தொகை.
CLUSTER என்னும் மோசமான முறையினால் சீரழிந்த தரைவழி மற்றும் அகன்ற அலைவரிசை இணைப்புக்கள்.
நில விற்பனை மற்றும் கடன்களை அடைப்பதில் தொடரும் மந்த நிலை.
TRANSMISSION பகுதியை சீரழிப்பதால்... புறக்கணிப்பதால் FTTH இணைப்புக்கள் SURRENDER ஆகும் அவலம்..
இரண்டாவது ஊதியமாற்றத்தில் இன்னும் தீர்க்கப்படாத சம்பளப்பிரச்சினைகள்
மூன்றாவது ஊதியமாற்றம் அமுல்படுத்துதல்...
கூடுதலாக செலுத்தப்பட்ட ஓய்வூதியப் பங்களிப்பை BSNLக்கு திருப்பித் தருதல்.
-----------------------------------------------------
கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன...
25/06/2021 அன்று
அனைத்து மட்டங்களிலும்
நாடு தழுவிய
கண்டன ஆர்ப்பாட்டம்.
30/06/2021 அன்று...
டெல்லியில் CMD...
மாநிலத் தலைநகரங்களில் CGM..
மாவட்டத்தலைநகரங்களில் GM...
ஆகியோரை அனைத்து சங்க
கூட்டமைப்பின் சார்பாக அவர்களது
அறைகளில் சந்தித்து...
கோரிக்கை மனு அளித்தல்.
01/07/2021 அன்று
டெல்லியில் அனைத்து சங்கத்தலைவர்கள் நேரடியாகக் கூடி அடுத்த கட்ட நடவடிக்கையைத் தீர்மானித்தல்.
தோழர்களே...
ஒன்றுபடுவோம்... போராடுவோம்..
அனைத்து சங்க கூட்டமைப்பின் முடிவுகளை வெற்றிகரமாக்குவோம்....
No comments:
Post a Comment