மின்னணு உயிர்வாழ்ச்சான்றிதழ்
DIGITAL LIFE CERTIFICATE
ஓய்வு பெற்ற தோழர்கள்
ஆண்டுதோறும்
தங்கள் உயிர்வாழ்ச்சான்றிதழை
DOTக்கு சமர்ப்பிக்க வேண்டும்.
தற்போது மின்னணு முறையில்
மின்னணு சேவைமையங்கள்
மூலமாக உயிர்வாழ்ச்சான்றிதழ் சமர்ப்பிக்கப்படுகின்றது.
E-சேவை மையங்களில் பணிபுரிபவர்கள்
முழுமையான
விவரம் தெரிந்தவர்களாக
சமயங்களில் இருப்பதில்லை.
எனவே மின்னணுச்சான்றிதழ்
தவறுதலான இலாக்காக்களுக்கு அனுப்பப்பட்டு பின்பு நிராகரிக்கப்படுகின்றது.
நமது தோழர்கள் மின்னணு
சான்றிதழை சமர்ப்பித்ததோடு
தங்கள் கடமை முடிந்ததாக
கருதி ஓய்வெடுத்து விடுகின்றார்கள்.
ஓய்வூதியம் நிறுத்தப்படும்போதுதான்
அவர்களுக்கு
மின்னணுச்சான்றிதழில்
கோளாறு ஏற்பட்டது தெரிய வருகின்றது.
எனவே E-சேவை மையங்கள்
அல்லது நமது
வாடிக்கையாளர் சேவை மையங்கள்
மூலமாக
Jeevan Pramaan இணையதளம்
மூலமாக
உயிர்வாழ்ச்சான்றிதழ்
சமர்ப்பிக்கும்போது
கீழ்க்கண்ட நடைமுறையைப்
பின்பற்ற வேண்டும்.
SANCTIONING
AUTHORITY என்ற இடத்தில் TELECOM
DISBURSING AGENCY என்ற இடத்தில்
DEPARTMENT OF
TELECOMMUNICATIONS
AGENCY என்ற இடத்தில் CCA.. TN என்று நிரப்பி DIGITAL LIFE CERTIFICATE படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
மின்னணு முறையில் உயிர்வாழ்ச்சான்றிதழ் சமர்ப்பித்த பின்பு சான்றிதழைத் தனியாக தபால் மூலமாக சென்னை CCA அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டிய அவசியமில்லை.
தோழர்கள் தங்களது அலைபேசியில்
வருகின்ற குறுஞ்செய்திகளை அவசியம் படித்து உயிர்வாழ்ச்சான்றிதழ் CCA அலுவலகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டதா
என்பதை அறிந்து கொள்ளலாம்.
SAMPANN இணையத்தில் LIFE CERTIFICATE INFORMATION என்ற பகுதியில் உயிர்வாழ்ச்சான்றிதழ் ஏற்றுக்கொள்ளப்பட்டதா என்பதை தெரிந்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment