Tuesday, 1 June 2021

 தமிழக தலைமைப் பொதுமேலாளர் 


தமிழகத்தின் தலைமைப்  பொதுமேலாளராகப் பணியாற்றிய 

திரு.ஜெகதீசன் அவர்கள் 31/05/2021 அன்று

பணிநிறைவு பெற்றதையொட்டி...

தமிழகத்தின் புதிய CGM தலைமைப் பொதுமேலாளராக

கோவையில் பொதுமேலாளராகப் பணியாற்றிய

திரு.G. முரளிதரன் அவர்கள்

இன்று 01/06/2021 பொறுப்பேற்றுள்ளார்.

நமது நல்வாழ்த்துக்களை உரித்தாக்குகின்றோம்.

 --------------------------------------------------------------

தமிழகத்தில்....

ஊழியர் பிரச்சினைகள் கேட்பாரற்றுக் கிடக்கின்றன...

ஒப்பந்த ஊழியர்கள் அடியோடு அழிக்கப்பட்டு விட்டனர்....

BSNL தரைவழி சேவை தரைமட்டமாகப் போய்விட்டது....

அகன்ற அலைவரிசை சேவை அடியோடு நாசம் போய்விட்டது...

செல்கோபுரங்கள் சமயங்களில் செல்லாக்கோபுரங்களாகி விட்டன..

புதிய FTTH சேவையும் சரமாரியாக SURRENDER ஆகும் அவலம்...

தொழிற்சங்கங்களோடு சந்திப்பு.... ஊழியர் பிரச்சினைகள் தீர்வு....

என்பதெல்லாம் பழங்கதையாக... கலைந்த கனவாகப் போய்விட்டது.

கொரோனா நல்லது.... நிம்மதியான நிர்வாகத்திற்கு...

தமிழகத்தின் கடந்த காலம் மாற்றியமைக்கப்பட வேண்டும்...

இந்தியாவின் முன்மாதிரி மாநிலமாக

தமிழகம் மீண்டும் தலைநிமிர வேண்டும்...

புதிய தலைமைப் பொதுமேலாளர் காலத்திலாவது...

தமிழகம் மெலிவு நீங்கி... பொலிவு பெற்றிட வாழ்த்துகின்றோம்...

No comments:

Post a Comment