துறைமுகத்தொழிலாளர்
ஊதிய உடன்பாடு
துறைமுகத்தொழிலாளர்களுக்கு (PORT & DOCK WORKERS)
புதிய ஊதிய உடன்பாட்டு ஒப்பந்தம் டெல்லியில் கையெழுத்தாகியுள்ளது.
- துறைமுக நிர்வாகத்திற்கும் 5 மத்திய சங்கங்களுக்கும் இடையில் ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
- ஒப்பந்தம் 01/01/2012ல் இருந்து அமுலுக்கு வரும்.
- அடிப்படைச்சம்பளம் மற்றும் விலைவாசிப்படியில் (BASIC + DA) 10.5 சதம் ஊதிய உயர்வு அளிக்கப்படும்.
- ரூ.4000/= குறைந்தபட்ச உயர்வாகவும், ரூ.8000/= அதிகபட்ச உயர்வாகவும் கிடைக்கும்.
- ஊதிய உடன்பாடு 5 ஆண்டுகளுக்கு அமுலில் இருக்கும்.
- ஏறத்தாழ 48000 தொழிலாளர்கள் இதனால் பயன் பெறுவர்.
பல பொதுத்துறைகளில்
10 ஆண்டுகளில் ஊதிய உடன்பாடு என்று இருக்கும்போது
5 ஆண்டுகளுக்கு உடன்பாடு கண்ட துறைமுகத்தொழிலாளர்களின்
5 சங்கங்களுக்கும் நமது வாழ்த்துக்கள்.
துறைமுகத்தொழிலாளர் ஒன்று பட்டு கரை சேர்கின்றனர்.
தொலைத்தொடர்பு தொழிலாளர்களோ...
தங்களுக்குள் தொடர்பறுந்து தொலைந்து போகின்றனர்.