செய்திகள்
BSNL ஊழியர்களுக்கு
01/01/2007 முதல் 09/06/2013 வரையிலான காலத்திற்கு
78.2 சத IDA இணைப்பிற்கான நிலுவையை வழங்கிட DOT செயலருக்கு BSNL CMD வேண்டுகோள் விடுத்துள்ளார். இதன் மூலம் பணிபுரியும் ஊழியர்கள் புதிய தெம்புடன் கூடுதலாக பணி புரிந்து நிறுவன வளர்ச்சிக்கு உதவிடுவார்கள் எனவும் CMD கருத்து தெரிவித்துள்ளார்.
CMDஐப் பாராட்டக் கடமைப்பட்டுள்ளோம். ஆனால் இதே CMD நிறுவனத்தின் நிதி நிலை சரி இல்லை என்று சொல்லி நமது உரிமையான குறைந்த பட்ச போனசை மறுப்பதையும் நாம் மறப்பதற்கில்லை.
கருணை அடிப்படை பணிக்கு மதிப்பெண் போடும் போது திருத்தியமைக்கப்படாத PRE REVISED ஓய்வூதிய பலன்களை கணக்கில் கொண்டு மதிப்பெண் வழங்க BSNL நிர்வாகம் உத்திரவிட்டுள்ளது.
போகாத ஊருக்கு எத்தனை பாதை போட்டால் என்ன?
கிடைக்காத வேலைக்கு எத்தனை உத்திரவு போட்டால் என்ன?
ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு 78.2 சத IDAஇணைப்பு
வழங்குவதற்கான குறிப்புகள் அடங்கிய கோப்புகள் தொலைதொடர்பு செயலரிடம் இருந்து ஓய்வூதிய இலாக்காவிற்கு அனுப்பப் பட்டுள்ளது.
ஆண்டுக்கணக்காக JTOவாக OFFICIATING செய்யும் TTA தோழர்கள் சிலர் வேறு வழியின்றி 2013ல் நடந்த போட்டித்தேர்விலும் பங்கு பெற்றனர். ஒருவேளை போட்டித்தேர்வில் அவர்கள் வெற்றி பெற்றால்
அவர்கள் மீண்டும் PHASE -I பயிற்சி செல்ல வேண்டும் என
BSNL நிர்வாகம் உத்திரவிட்டுள்ளது. மறுபடியும் முதலில் இருந்து..
மதுரை வந்த CMD மதுரை தோழர்களின் அன்பில் நனைந்து இராமேஸ்வரத்தில் மேலும் நனைந்து தனது தமிழக பயணம் பற்றி மட்டற்ற மகிழ்ச்சியை நமது தலைவர்களிடம் பகிர்ந்துள்ளார்.
வந்த விருந்து கவனித்து.. வரும் விருந்துக்காக
காத்திருப்பவன் தமிழன் அல்லவா..?
No comments:
Post a Comment