நாதியற்ற.. நலத்திட்டங்கள்
2013-14க்கான DOTன் ஆண்டறிக்கையை முழுமை செய்வதற்காக செப்டம்பர் 2013 வரை BSNLலில் அமுல்படுத்தபட்ட
மகளிர் முன்னேற்ற திட்டங்கள்
உடல் ஊனமுற்றோர் நலத்திட்டங்கள்
மற்றும் SC/ST ஊழியர்களுக்கான சிறப்புத்திட்டங்கள்
பற்றி BSNL நிர்வாகத்திடம் DOT விரிவான அறிக்கை கேட்டுள்ளது. அரசு பொதுத்துறை என்ற முறையில் பல்வேறு நலத்திட்டங்களை அமுல்படுத்த வேண்டியது BSNLன் கடமையாகும்.
ஆனால் மேற்கண்ட 3 பிரிவிலும் நலத்திட்டங்கள் குறிப்பிடத்தக்க அளவு ஒன்று கூட அமுல்படுத்தப்படவில்லை என்பது
கசப்பான உண்மையாகும்.
மகளிருக்கு சிறப்பு விடுப்பு என்ற
நமது கோரிக்கை நிர்வாகத்தின் காதில் ஏறவில்லை.
SC/ST ஊழியருக்கு நாலு கடப்பதவி உயர்வில் ஒதுக்கீடு என்ற கோரிக்கையும் நிர்வாகத்தின் மண்டையில் உரைக்கவில்லை.
உடல் ஊனமுற்றோருக்கு பதவி உயர்வில் வாய்ப்பில்லை.
சிறப்பு படிகளும் இல்லை.
மேற்கண்ட 3 பிரிவினருக்கும் BSNLக்கென
தனியான சிறப்பு திட்டங்கள் இது வரை இல்லை.
இதனை அமுல்படுத்திட..
நலத்திட்டங்களில் BSNL முன்னோடி என்ற நிலை உருவாக்கிட சிந்திப்போம்.. தோழர்களே..
No comments:
Post a Comment