01/01/2007க்குப்பின் பணியமர்ந்த
ஊழியர்களின் சம்பள பிரச்சினை
01/01/2007க்குப்பின் பணிக்கு வந்த தோழர்களின், குறிப்பாக TTA தோழர்களின் அடிப்படைச்சம்பளம்
குறைவாக நிர்ணயம் செய்யப்பட்டது.
இதனால் பல தோழர்களுக்கு சம்பளப்பிடித்தம் செய்யப்பட்டது. தொடர்ந்து இந்தப்பிரச்சினை BSNL நிர்வாகத்துடன் விவாதிக்கப்பட்டு 08/10/2013 அன்று நமது சங்கத்துடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஒரு வாரத்திற்குள் தீர்க்கப்படும் என்று கூறப்பட்டது. எனவே இப்பிரச்சினையை உடனடியாக முடிக்க வேண்டும் என நமது சங்கம்
நிர்வாகத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
இப்பிரச்சினை சம்பந்தமாக அமைக்கப்பட்ட குழு தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ளதும், 01/01/2007க்குப்பின் JAO/JTO தோழர்களின் சம்பளம் கூடுதல் ஆண்டு உயர்வுத்தொகை அளிக்கப்பட்டு
சரி செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment