JAO தேர்வு
SC/ST தோழர்களின் தேர்வு முடிவு மறு ஆய்வு
டிசம்பர் 2012ல் JAO தேர்வு எழுதி தேர்ச்சியுறாத
SC/ST தோழர்களின் தேர்வு முடிவுகளை 08/01/2007ல் வெளியிட்ட வழிகாட்டுதலின்படி மறு ஆய்வு செய்திட மாநில நிர்வாகங்களுக்கு CORPORATE அலுவலகம் 17/10/2013 அன்று உத்திரவிட்டுள்ளது.
அதன்படி..
1. குறித்த JAO காலியிடங்களுக்கு போதிய SC/ST
தோழர்கள் தேர்ச்சி பெற்றிருந்தால் மறு ஆய்வு
செய்ய அவசியமில்லை.
2.போதிய SC/ST தோழர்கள் தேர்ச்சி பெறாத நிலையில்,
எல்லா பாடங்களிலும் குறைந்த மதிப்பெண் (minimum marks) பெற்று
கூட்டு மதிப்பெண்கள் (Aggregate marks) பெறாத தோழர்களுக்கு
கூடுதல் மதிப்பெண்கள் GRACE MARKS அளிக்கப்பட்டு
காலியிடங்கள் நிரப்பப்பட வேண்டும்.
3. ஒரேயொரு பாடத்தில் மட்டும் தேர்ச்சி பெறாதவர்களை
கீழ்க்கண்டவாறு ஆய்வு செய்திடவேண்டும்.
பாடம் III CPWDல் தேர்ச்சி பெறாதவர்களுக்கு
5 மதிப்பெண்கள் வரை GRACE MARKS அளிக்கலாம்.
அதன்பின்னும் காலியிடங்கள் நிரப்பப்படவில்லையென்றால்
பாடம் II WORKSல் தேர்ச்சி பெறாதவர்களுக்கு
5 மதிப்பெண்கள் வரை GRACE MARKS அளிக்கலாம்.
அதன்பின்னும் காலியிடங்கள் நிரப்பப்படவில்லையென்றால்
பாடம் I - TRAல் தேர்ச்சி பெறாதவர்களுக்கு
5 மதிப்பெண்கள் வரை GRACE MARKS அளிக்கலாம்.
மேற்கண்ட வழிகாட்டுதலின்படி தமிழகத்தில்
SC பிரிவில் இரண்டொரு தோழர்களுக்கு மட்டுமே வாய்ப்பு கிட்டலாம்.
ST பிரிவில் காலியிடங்கள் இருந்தும் போதிய தோழர்கள் தேர்வு எழுதாததால் யாருக்கும் பலன் கிட்டாது.
Thanks Mari for the good job of giving tamil version
ReplyDelete