நாட்டுக்கு நவராத்திரி..
நமக்கோ.. சிவராத்திரி..
நமக்கோ.. சிவராத்திரி..
நவராத்திரி காலம் துவங்கிவிட்டது..
நாடு முழுக்க போனஸ் பேச்சு துவங்கிவிட்டது..
ஆனால் BSNL ஊழியருக்கோ இனி சிவராத்திரிதான்..
தேனும் பாலும் கிடைத்த தொலைத்தொடர்பில்
இனி ஏதேனும் கிடைக்குமா என்பதே..
ஊழியரின் இன்றைய ஏக்கமும் எதிர்பார்ப்பும்..
இரயில்வே ஊழியர்களுக்கு உற்பத்தியோடு
இணைந்த 78 நாள் போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது..
அஞ்சல் ED ஊழியர்கள் போனஸ் உச்சவரம்பை
2500லிருந்து 3500 ஆக்கி விட்டார்கள்..
அடுத்தடுத்து போனஸ் செய்திகள் இனி தொடரும்..
இரயில்வே ஊழியர்களுக்கு
GROSS TRAFFIC RECEIPT
மொத்த போக்குவரத்து வருமான அடிப்படையில்
போனஸ் அறிவிக்கபட்டுள்ளது.
அதே போல் மொத்த அழைப்புக்கள் GROSS MINUTES USAGE அடிப்படையில்
BSNL ஊழியர்களுக்கு ஏன் போனஸ் வழங்கக்கூடாது?
என்ற நியாயமான கேள்வியை நமது மாநில சங்கம் எழுப்பியுள்ளது...
இரண்டு சங்கங்கள் BSNLலில் அங்கீகாரம் பெற்றுள்ள நிலையில்
இருவரும் இணைந்து இந்த ஆண்டு ஊழியர்களுக்கு
அவர்களின் பூர்வீக உரிமையான போனசை
பெற்றுத்தர போராட வேண்டும்..
இதுவே ஒட்டுமொத்த ஊழியர்களின் இன்றைய எதிர்பார்ப்பாகும்..
No comments:
Post a Comment