Tuesday 2 December 2014

அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் 
இணைந்த 
நாடு தழுவிய  எதிர்ப்பு நாள் 
 ஒன்று படு.. உறுதி படு..

டிசம்பர் 5 
மண்டேலா மறைவு  தினத்தில் 
மத்திய அரசின் தொழிலாளர் விரோத 
மடத்தனங்களை எதிர்த்து 
மத்திய சங்கங்கள் அனைத்தும்  
 இணைந்து போராடும் 

எதிர்ப்பு நாள் 

கோரிக்கைகள்:- 
மத்திய அரசே...
  • தொழிலாளர் நலனுக்கு எதிராக  தொழிலாளர்  சட்டங்களைத் திருத்தும் போக்கை கைவிடு...
  • தொழிலாளர் பிரச்சினைகளில் தொழிற்சங்கங்களை ஆலோசனை செய்...
  • நடைமுறையில் உள்ள தொழிலாளர் நலச்சட்டங்களை அமுல்படுத்து...
  • பதிவு செய்த 45 நாட்களுக்குள் தொழிற்சங்க பதிவு எண் வழங்கு...
  • நிரந்தர ஊழியர்களுக்கான அனைத்து சலுகைகளையும் ஒப்பந்த ஊழியர்களுக்கு வழங்கு..
  • ஒப்பந்த ஊழியர்களுக்கு குறைந்த பட்சம் மாதம் ரூ.15000/= வழங்கு...
  • மத்திய அரசு ஊழியர்களுக்கு குறைந்த பட்சம் மாதம் ரூ.26000/= வழங்கு...
  • பாதுகாப்பு, இரயில்வே,ஆயுள் காப்பீடு மற்றும் ஏனைய பொதுத்துறைகளில் அந்நிய வெளிநாட்டு மூலதனங்களை அனுமதிக்காதே...
  • வங்கி ஊழியர்களுக்கு சம்பள திருத்தம் உள்ளிட்ட கோரிக்கைகளை அமுல்படுத்து..
  • மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளத்துடன் 50 சத விலைவாசிப்படியை இணைத்து வழங்கு..
  • மத்திய அரசு ஊழியர்களுக்கு தேர்வு இல்லாமல், தேர்வுக்குழு இல்லாமல் நான்கிற்கு மேற்பட்ட  பதவி உயர்வு வழங்கு.
  • போனஸ் உச்சவரம்பை உயர்த்து..
  • போனஸ் பெறுவதற்கான தகுதி வரம்பை உயர்த்து..
  • மத்திய அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதிய த்தை உயர்த்து...
  • ஓய்வூதியர்களுக்கு உரிய மருத்துவப்படி மற்றும் மருத்துவ சிகிச்சைக்கான சலுகைகளை வழங்கு...
  • புதிய ஓய்வூதிய விதிகளை தொழிலாளர்களுக்கு நலன் தரும் வகையில் திருத்தி அமை..

தோழர்களே....
மத்திய அரசைப்போல்... 
அந்நியனிடம் குனிந்து நில்லோம்....
நாம்... 
இணைந்து நிற்போம்...
அநியாயத்தின் முன் 
அணி அணியாய்..
நிமிர்ந்து நிற்போம்....
கரம் உயர்த்துவோம்....
தேசத்தின் சிரம் நிமிர்த்துவோம்...

No comments:

Post a Comment