நன்று கருதுவோம்...
VIGILANCE விசாரணையால்
வேலைக்கு செல்ல இயலாமல்
வேதனையில் தவித்த சிவகங்கைத்தோழர்
ஞானமுத்துவிற்கு நியாயம் கோரி
இன்று 24/12/2014 காரைக்குடியில்
கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்திருந்தோம்...
துணைப்பொது மேலாளர் நிர்வாகம் அவர்கள்
ஞானமுத்துவிற்கும் அவர் குடும்பத்திற்கும்
நன்று செய்வோம் என்று
நமக்களித்த உறுதிமொழியின் அடிப்படையில்
ஆர்ப்பாட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது.
பக்கவாதம் வந்ததற்கு மொத்த காரணம்..
MARR PT காலத்தில்..
மாடாய் உழைத்ததுதான்.. என
மருத்துவரும் கூறுகின்றார்...
மாடாய் உழைத்தவனை
ஓடாய் தேய்ந்தவனை
வீதியிலே விடுவோமா...?
ஞானமுத்துவிற்கு..
சொல் போனது.. கை கால் செயல் போனது..
ஓராண்டுக்கு மேலாக விடுப்பும் போனது...
இல்லறம் காணும் வயதிலே..
இரண்டு பெண் பிள்ளைகள்..
இல்லாமையை விரட்ட வேலை தேடும் மகன்...
இதுதான் அவனது இன்றைய நிலை...
அவனுக்கு...
இன்னும் ஏழரை ஆண்டு பணி இருக்கு..
ஆனாலும் ஏழரையின் பார்வையும் இருக்கு...
பாதகப் பார்வைகள் அகல வேண்டும்..
பலன் தரும் பார்வைகள் வர வேண்டும்..
இதுவே நமது விருப்பம்...
அன்று...
தலைமைப் பொதுமேலாளரிடம்..
தான் செய்த பணிக்காக..
தனித்த பாராட்டு பெற்றவன்...
இன்று.. தவித்து நிற்கின்றான்...
கை கொடுப்பது.. சங்கக்கடமை மட்டுமல்ல..
சம்பந்தப்பட்ட சகலருக்குமான கடமை..
தோழர்களே..
நன்று கருதுவோம்...
ஞானமுத்துவிற்கு நல்லதே நடக்குமென
நன்று கருதுவோம்...
No comments:
Post a Comment