கார்...காலம்
ஆண்டுக்கு ஒருமுறை வரும் காலம்.. கார்காலம்..
ஆனால் BSNLலிலோ ஆண்டு முழுவதும் CAR காலம்..
அலுவலக வாயிலில் கார்கள் அணிவகுத்து நிற்கும் கார்கோலம்..
அலுவலகங்கள் முழுவதும் கருவறைகள்.. (CHAMBER)
கருவறை கடவுளர்களை சுமக்க
இலக்கு இல்லாமல் காத்து நிற்கும்
வாடகைப்பல்லக்குகள்..
இராமனுக்கு 14 ஆண்டுகள் வனவாசம்...
BSNLலிலோ
அதிகாரிகளுக்கு 14 ஆண்டுகள் சுகவாசம்...
இது ஒன்றும் புதிதில்லையே...
இந்த தொடர் அவலத்தை தொட்டுப்பார்ப்பது ஏன்?
என நீங்கள் கேட்கலாம்... தொடர்ந்து படியுங்கள்...
12/12/2014 அன்று பரமக்குடி பகுதியின் மூத்த தோழர்.கணேசன் அவர்கள் நம்மை தொலைபேசியில் அழைத்தார்.
"தோழர்.. பரமக்குடி பகுதியில் உள்ள 3 குட்டி அதிகாரிகள் இரண்டு இலாக்கா வாடகைக்காரில் இறைக்கை கட்டி காரைக்குடிக்கு ஒரே LINKகாக வந்து கொண்டிருக்கின்றார்கள் ..என்ன காரணம்? என்று வினவினார்..
"இன்று 12/12/2014...
LINKகாக வருகின்றார்கள் என்றால்.. ஒருவேளை...
லிங்கா பார்க்க வந்தாலும் வரலாம்" என்று அவரிடம் பதில் கூறினோம்.
இருந்தாலும் மனதிற்குள் ஒரு சந்தேகம் அரும்பியது.
"பிள்ளையாரின் வாகனம் பிறந்த மேனியாய் அலையாது"
என்பது பெரியோர் வாக்கு.
எனவே காரணம் என்னவென்று விசாரித்தோம்.
பின்புதான் தெரிந்தது..
நமது கடமை உணர்வு மிக்க அதிகாரிகள்
இலாக்கா வாடகைக்காரில் இலவசமாக பயணித்து
பரமக்குடியில் இருந்து பறந்து காரைக்குடி வந்தது
இலாக்கா பணிக்காக அல்ல..
இதந்தரும் அதிகாரிகள் சங்க கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக என்று.
அவர்களின் சங்கப்பற்றை நாம் மெச்சுகின்றோம்.
ஆனால்.. வந்து போன வண்டிச்செலவு
இலாக்கா கணக்கில் பற்று வைக்கப்படும்.
அதுதான் இப்போது நம்மை உறுத்துகிறது..
அவர்களும்..
அந்தக்காலத்து சந்திரலேகா சினிமா பாணியில்
12/12/2014 அன்று காரைக்குடி STORES சென்றோம்...
STOREல் குதிரைக்கு கொள்ளு வாங்கினோம்....
கொள்ளளவு அதிகமாக இருந்ததால்...
கொள்ளை போகும் வாய்ப்பு இருந்ததால்..
ஒன்றுக்கு இரண்டு வண்டியில் வந்தோம்...
ஒன்றுக்கு மூன்று பேராய் பயணித்தோம்...
என்று வழக்கமான கணக்கு எழுதி விடுவார்கள்...
பில்களும் வழக்கம் போல் பட்டுவாடா ஆகிவிடும்...
BSNLம் வழக்கம் போல் நட்டமாகி விடும்...
அதிகாரிகளோ.. தொழிலாளர்களோ...
சங்கத்தில் பற்றுக்கொள்வது...
சங்கக் கூட்டங்களில் பங்கேற்பது நிச்சயம் அவசியம்தான்..
ஆனால் தொழிலாளர்கள் தங்களுடைய..
சங்கக் கூட்டங்களுக்கு போகும்போது அவர்களை
கேள்விகள் கேட்பது.. விடுமுறை மறுப்பது.. என்றெல்லாம்
தங்களது அதிகாரத்தைக்காட்டும் அதிகாரிகள்..
தங்களுடைய சங்க கூட்டங்களுக்கு
ஊர் விட்டு ஊர் செல்லும்போது
பணியிலேயே செல்வது.. பல்லக்கில் செல்வது..
கொஞ்சம் கூட கூச்சம் நாச்சம் இன்றி
பொய்யான காரணங்களை எழுதி..
கார்களை சொந்த உபயோகத்திற்கு பயன்படுத்துவது..
என்ற இழிநிலை இன்னும் தொடருவது சரியல்ல..
இன்று... அதிகாரிகள் BSNLலில்
கை நிறைய.. பை நிறைய.. கைப்பை நிறைய
சம்பளம் வாங்குகின்றார்கள்..
நல்ல நிலையில் இருக்கும் அதிகாரிகள்..
நட்ட நிலையில் இருக்கும் நிறுவனத்தை உறிஞ்சலாமா?
மரத்திலே பழங்களைப் பறிக்கலாம்...
வேர்களைப் பிடுங்கலாமா?...
இதுவரை சுகவாசம் அனுபவித்தது போதாதா?
நட்டப்பட்ட நிறுவனத்தை ஒட்டத்துடைப்பது நியாயமா?..
தோழர்களே...
இது வரை அனுபவித்தது போதும்...
இனியேனும் விட்டு விடுங்கள் BSNLஐ..
சுரண்டல் இன்றி... பிடுங்கல் இன்றி...
சுதந்திரமாக உறங்கட்டும்...BSNL..
Thanks comrade.We are blaming the ITS officers for this culture.But our own middle level officers misusing the vehicle.Right time to raise the voice against this culture.This should be raised in all SSA's
ReplyDeleteநச் என்று 40வரிகள் ஆனால் நமது அதிகாரிகளுக்கு சுரணை வருமா? அல்லது சுரண்டல் தொடருமா?
ReplyDelete