Thursday, 4 December 2014

அஞ்சலி 
நீதியின்  தலை நிமிர்த்திய 
V.R.கிருஷ்ணய்யர்
நூற்றாண்டு வாழ்ந்தவரும்...
இன்னும் பல நூற்றாண்டு
மக்கள் மனதில் 
வாழப்போகிறவருமான 
தோழர்.
V.R.கிருஷ்ணய்யர் 
மறைவிற்கு நமது செங்கொடி 
தாழ்த்திய அஞ்சலி...

பொதுவுடைமை இயக்கத்தில் பூத்தார்..
போராடிய   தோழர்களுக்கு வாதாடினார்...
வாதாடியதாலே சிறைவாசம் பெற்றார்...
மக்கள் பிரதிநிதியானார்...
சட்ட மந்திரியானார்...
வரதட்சிணை ஒழிப்பை சட்டமாக்கினார்..
சிறையை சீர்திருத்த சட்டம் தந்தார்..
மக்களுக்காகப் போராடினார்..
எதிர்க்கட்சியினர் வாக்குகளை வளைத்ததாலே..
ஏழு வாக்குகளில் தோற்றார்...
வழக்கைத்தொடுத்து சட்டத்தை வளைத்து..
ஈராண்டு கழித்து 5 வாக்குகளிலே வென்றார்..
பரம்பிக்குளம் பாசனத்திட்டம் உருவாக்கிட நின்றார்..
தமிழும் மலையாளமும்  ஒன்றுபட பாடுபட்டார்.. 

செங்கொடி இரண்டு பட்டதாலே...
கறுப்புக்கோட்டை மீண்டும் அணிந்தார்..
நீதிபதி ஆனார்..
நீதிக்கு விடுதலை தந்தார்..
மக்கள் நீதிமன்றம் என்னும் மார்க்கம் செய்தார்..
745 தீர்ப்புக்களை தீர்க்கமுடன் சொன்னார்..
பராக்.. பராக்.. பந்தா ஒழித்தார்..
பத்மபூஷண்  பட்டமும் பெற்றார்...

கறுப்பு நீதியை சிவப்பாக்கிய 
காலத்தால் அழியாத 
கிருஷ்ணய்யர் 
புகழ் வாழ்க.. வாழ்க..

No comments:

Post a Comment