ஓம்.. அம்பானி.. அதானி..
சுகினோ பவந்து....
ஓம் சர்வே பவந்து சுகின..
சர்வே சந்து நிராமய..
ஓம் சாந்தி,, சாந்தி... சாந்தி...
அனைவரும் மகிழ்ச்சியாகவும்
நோய்களிலிருந்து விடுபட்டும்..
வேண்டிய பலன்கள் கிடைக்கப்பெற்றும்
துன்பங்களால் பாதிக்கப்படாமலும் இருப்பார்களாக...
என்ற உபநிடதப் பாடலைப்பாடி
நமது நிதியமைச்சர்
120 கோடி மக்களின் நலம் பேணும்
வரவு செலவு திட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.
ஆனால்..
இந்த தேசத்தின் அடையாளமாகிய
ஆடையற்ற... அரை வயிற்றுக்கு கூழுமற்ற
70 கோடி மக்களின் நலனோ..
40 கோடி நடுத்தர மக்களின் நலனோ..
வரவு செலவில் அலசப்படவில்லை...
மாறாக...
அம்பானிகளுக்கும் அதானிகளுக்கும் மட்டுமே
ஓம்.. சாந்தி உரைக்கப்பட்டுள்ளது..
காங்கிரஸ் ஆட்சியில்
பசியறியா ப.சி.
வள்ளுவனின் குறள் சொல்லி
வறியவனின் குரல் நெரித்தார்..
காவிகளின் ஆட்சியில்...
உபநிடதங்கள் ஒலிக்கின்றன...
உபத்திரவங்கள் தொடர்கின்றன...
இங்கே...
படிக்கப்படுவது இராமாயணங்கள்...
ஆனாலும் இடிக்கப்படுவது..
அன்றாடங்காய்ச்சிகளின் குடில்களே...
No comments:
Post a Comment