செய்திகள்
JCM தேசியக்குழுக் கூட்டம் 28/04/2015
அன்று டெல்லியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
---------------------------------------------------------------------------------
ERPயில் சில ஊழியர்களின் பதவியின் பெயர் தவறுதலாக குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்களது சாதிப்பிரிவு குறிப்பிடப்படவில்லை. மேலும் அவர்களது வீட்டு முகவரி முழுமையாக இல்லை. இத்தகைய குளறுபடிகள் 30/04/2015க்குள் சரி செய்யப்பட வேண்டும் என
BSNL நிர்வாகம் மாநில நிர்வாகங்களுக்கு உத்திரவிட்டுள்ளது.
---------------------------------------------------------------------------------
ஓய்வு பெற்ற தோழர்களுக்கு 78.2 சத IDA வழங்குவதற்காக
2007க்கு முன் ஓய்வு பெற்றவர்கள் மற்றும்
01/01/2007 முதல் 09/06/2013 வரையிலும் பணி ஓய்வு பெற்ற
தோழர்களின் எண்ணிக்கையை DOT கோரியுள்ளது.
---------------------------------------------------------------------------------
25000 கோடி முதலீட்டில் BSNL விரிவாக்கத்திட்டங்கள்
இன்னும் 3 ஆண்டுகளில் அமுல்படுத்தப்படும்
என BSNL CMD செய்தியாளர்களிடம் அறிவிப்பு.
---------------------------------------------------------------------------------
7வது ஊதியக்குழு தொழிற்சங்கங்களை சந்தித்து உரையாட ஆரம்பித்துள்ளது. JCM தேசியக்குழு தலைவர்கள் தங்களது கோரிக்கைகளை 7வது ஊதியக்குழு முன் வைத்துள்ளனர்.
ஊதியக்குழு தனது அறிக்கையை
2015 இறுதிக்குள் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது .
No comments:
Post a Comment