Saturday, 30 October 2021

 வாழ்க... பல்லாண்டு... 

கோபம் கொண்டால் எரிமலை...

குளிர்ந்து விட்டால் பனிமலை...

தென்றல் தவழும் பொதிகைமலை....

திங்கள் உறையும் இமயமலை...

அன்பு ஊற்றெடுக்கும் குடகுமலை...

ஆற்றல் பெருக்கெடுக்கும் அண்ணாமலை...

தமிழ்ச்சங்கம் வளர்த்த மதுரையிலே...

பல கணக்கு அதிகாரிகளை உருவாக்கி...

AIBSNLEA அதிகாரிகள் சங்கம் வளர்த்து...

இன்று 31/10/2021 பணிநிறைவு பெறும்

அருமைத்தோழர்

. அருணாச்சலம்

துணைப்பொதுமேலாளர்(நிதி)

அவர்களின் பணிநிறைவுக்காலம்

சிறப்புடன் விளங்க

மனமார வாழ்த்துகின்றோம்...

Friday, 29 October 2021

 AUAB மற்றும் இயக்குநர்கள் 

கூட்ட முடிவுகள்

 

27/10/2021 அன்று டெல்லியில் AUAB

அனைத்து சங்கத்தலைவர்கள் மற்றும்

BSNL வாரிய இயக்குநர்கள் சந்திப்புக் கூட்டம் நடைபெற்றது.

அந்தக் கூட்ட முடிவுகளை BSNL நிர்வாகம்  

இன்று 29/10/2021 கடிதமாக வெளியிட்டுள்ளது.

BSNL நிர்வாகம் இதுவரை AUAB

கோரிக்கைகளை செவிமடுப்பதில்லை.

போராட்டம் என்றால் மிரட்டல் தொனியில்

கடிதங்களை வெளியிடும்.

ஊழியர் கோரிக்கை.... நிறுவன வளர்ச்சி

சம்பந்தமான கோரிக்கைகளைப் பற்றி

நாம் குரல் எழுப்பியபோது கண்டுகொள்ளாத

BSNL நிர்வாகம் CMDஐ மாற்று என்று

குரல் எழுப்பிய பின்புதான்

அசையாத  CMD சற்றே அசைந்துள்ளார்.

அடிமேல் அடி அடித்தால்  CMDயும் நகருவார்.

இது ஒரு மாற்றம்.... முன்னேற்றம். 

27/10/2021 கூட்ட முடிவுகள் 

உரிய தேதியில் சம்பளம் வழங்குதல் 

செப்டம்பர் மாதச்சம்பளம் 11/10/2021 அன்று வழங்கப்பட்டது.

அக்டோபர் மாதச்சம்பளம் தீபாவளிக்கு முன்பாக வழங்கப்படும்.

நவம்பர் மாதச்சம்பளம் 30/11/2021 அன்று வழங்கப்படும்.

டிசம்பர் மாதம் வங்கிக் கடன் கட்ட வேண்டியிருப்பதால்

சம்பளப்பட்டுவாடா தாமதாம் ஆகலாம்.

ஜனவரி மாதச்சம்பளம் 31/01/2022 அன்று வழங்கப்படும்.

2022 முதல் சம்பளப்பட்டுவாடா முறைப்படுத்தப்படும்.

 

3வது ஊதிய மாற்றம் 

ஊதிய பேச்சுவார்த்தைக்குழு

மாற்றியமைக்கப்படவுள்ளது.

தீபாவளிக்கு பின்பு கூட்டம் நடைபெறும்.

அனைத்துக் கேடர்களிலும் ஊழியர்கள்

STAGNATION என்னும் தேக்கநிலையால்

மிகுந்த பாதிப்புக்குள்ளாவதால்

ஊதிய பலன் இல்லாத ZERO FITMENT

ஊதிய மாற்றத்திற்கு சங்கங்கள்

இசைவு தெரிவித்துள்ளன. 

 

சீரமைப்புக்கு முன்பாக பதவி உயர்வு 

கேடர்களை சீரமைப்பு செய்வது குறித்து

BSNL வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.

அது சம்பந்தமான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். 


போராட்டக்காலத்திற்கான குற்றப்பத்திரிக்கை 

போராட்டங்களில் ஈடுபட்டதற்காக

அதிகாரிகள் சங்கத் தலைவர்களுக்கு  

விதி FR-17(a) குற்றப்பத்திரிக்கை அளிக்கப்பட்டது.

ஓய்வு பெற்ற தோழர்களின்

பணப்பலன்கள் நிறுத்தி வைக்கப்பட்டது.

தற்போது ஓய்வு பெற்ற அதிகாரிகள் மீதான

குற்றப்பத்திரிக்கை விலக்கிக் கொள்ளப்படுகின்றது.

பணியில் உள்ள அதிகாரிகள் மீதான

குற்றப்பத்திரிக்கையை விலக்கிக் கொள்வது பற்றி மனிதவள இயக்குநர் உறுதி அளித்துள்ளார். 


ஊழியர்களுக்கான இலாக்காத் தேர்வுகள் 

நவம்பர் 30 அன்று இலாக்காத் தேர்வுகள்

பற்றிய பொது அறிவிப்பு வெளியிடப்படும்.

இட ஒதுக்கீடு மற்றும் காலியிடங்கள் பற்றிய

இறுதி கணக்கீட்டிற்குப் பின்பு

விரிவான அறிவிப்பு வெளியிடப்படும். 


மாற்றல் கொள்கையில் தளர்வு 

விதி 9 மாற்றல் கொள்கை

ஊழியர்களுக்குப் பாதகமாக இருப்பதாக

சங்கங்கள் கருத்து தெரிவித்துள்ளதால்

இது பற்றி ஆராய குழு ஒன்று அமைக்கப்படுகின்றது.

நிர்வாகத்தரப்பில் மூன்று அதிகாரிகளும்,

அதிகாரிகள் மற்றும் ஊழியர் சங்கங்கள் சார்பாக

நான்கு உறுப்பினர்களும் குழுவில் இடம் பெறுவார்கள். 


போராட்டங்களுக்கு எதிரான பூச்சாண்டி கடிதங்கள் 

தர்ணா... உண்ணாவிரதம் போன்ற

அதிபயங்கரப் போராட்டங்களில் சங்கங்கள் ஈடுபடும்போது

நிர்வாகம் மிகவும் கடுமையாக அதனை எதிர்கொள்கிறது.

இது சரியான அணுகுமுறையல்ல என்று

சங்கங்கள் சுட்டிக்காட்டியதன் அடிப்படையில்

சேவைப்புத்தகம் மற்றும் ERPயில் பொறிக்கப்பட்ட

குற்றச்சாட்டுக்களை நீக்குவது பற்றி

மனிதவள இயக்குநர் உறுதி அளித்துள்ளார். 


நேரடி ஊழியர்களின் ஓய்வூதியப்பங்களிப்பு

ஏப்ரல் 2020 முதல் BSNL நேரடி நியமன ஊழியர்களின்

ஓய்வூதியபங்களிப்பை நிர்வாகம் செலுத்தவில்லை.

பணியில் உள்ள ஊழியர்கள் மாதாமாதம் சம்பளம்

கேட்பதால் தங்களால் மேற்கண்ட பங்களிப்பை

செலுத்த இயலவில்லை என்றும்...

31/03/2022க்குள் எப்பாடு பட்டாவது

ஓய்வூதியப்பங்களிப்பு செலுத்தப்படும் என்றும்

BSNL நிர்வாகம் உறுதி அளித்துள்ளது.

 

நிர்வாகம் வெளியிட்ட 29/10/2021 கடிதம்....

வெற்றுக்கடிதமா? வெற்றிக்கடிதமா?

என்பதைப் பொறுத்துதான் பார்க்க வேண்டும்...

Thursday, 28 October 2021

 செவ்வணக்கம் தோழர்....

 

எளிமைக்கு இலக்கணம் வகுத்தவரும்...

எளிய மக்களுக்கான அரசியல் தந்தவரும்...

பந்தாக்களும்.... பகட்டுக்களும் இல்லாதவரும்...

சட்டமன்ற உறுப்பினராக இருந்த போதும்...

பதவிகளை சட்டை செய்யாதவரும்...

மனம் மகிழும் மக்கள் நடையில்....

மேடைப்பேச்சுக்களைத் தந்தவரும்...

பொதுவுடைமை இயக்க மூத்த தலைவருமான

தோழர். நன்மாறன்

அவர்களின் மறைவிற்கு

நமது இதயம் கசிந்த அஞ்சலி.....

Wednesday, 27 October 2021

 எண்பது காணும் இளமைக்குமார்

 
சிவக்குமார்... 80

27/10/2021   

திரையிலே நடிப்பவன்...

நெறிமிகு...

திசையிலே நடப்பவன்... 

காட்சிகளை வரைபவன்...

காவியங்களைப்  படைத்தவன்... 

இலக்கியத்தில் திளைத்தவன்...

இடையறாது உழைத்தவன்.... 

அரிதாரம் பூசுபவன்...

பலதாரம் பார்க்காதவன்... 

எண்பதிலும் இளமையானவன்...

அன்பினிலே இனிமையானவன்... 

வாழ்க பல்லாண்டு....

சேவை தொடர்க நூறாண்டு...

Tuesday, 26 October 2021

செய்திகள்

BSNL ஊதிய மாற்றக்குழு  

BSNL ஊதிய மாற்றக்குழு  WAGE NEGOTIATION COMMITTEE மாற்றி அமைக்கப்படவுள்ளது. அதன் தலைவராக இருந்த திரு.H.C. பந்த் ஓய்வு பெற்றதால் ஊதியப் பேச்சுவார்த்தைக்குழு மீண்டும் மாற்றி அமைக்கப்படவுள்ளதாகக் கூறப்படுகின்றது. ஆனால் ஊழியர்கள் தரப்பில் அனைத்து உறுப்பினர்களும் ஓய்வு பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 02/11/2021க்குள் BSNLEU மற்றும் NFTE சங்கங்கள் சார்பாக பேச்சுவார்த்தைக் குழு உறுப்பினர்கள் பட்டியலை நிர்வாகத்திற்கு அளிக்க வேண்டும் என BSNL இன்று 26/10/2021 உத்திரவிட்டுள்ளது. மறுபடியும் முதலில் இருந்து?...

===================

அலுவலகங்களில் FTTH இணைப்புக்கள்

FTTH FIBRE இணைப்புக்கள் BSNL அலுவலகங்களில் கொடுக்கலாம் என்று CORPORATE அலுவலகம் இன்று உத்திரவிட்டுள்ளது. ஏற்கனவே LAN வசதியுள்ள அலுவலகங்களில் FTTH இணைப்புக்கள் கொடுக்கப்படாது. GM மற்றும் அதற்கு மேல்நிலையில் உள்ள அதிகாரிகளுக்கு 799 திட்டத்திலும், AGM/DGM நிலையில் உள்ள அதிகாரிகளுக்கு 599 திட்டத்திலும் இணைப்புக்கள் வழங்கப்படும். BSNL செலவில் OLT போடப்பட்ட இடங்களில் மட்டுமே இணைப்புக்கள் கொடுக்கப்படும். VENDORகள் உள்ள வருவாய்ப் பகிர்வு இடங்களில் இணைப்புக்கள் கொடுக்கப்படமாட்டாது.

===================

இயக்குநர்கள் குழு - AUAB சந்திப்பு

06/10/2021 அன்று AUAB அனைத்து சங்க கூட்டமைப்பு BSNL இயக்குநர்கள் குழுவுடன் பலமணி நேரங்கள் பேச்சுவார்த்தை நடத்தியும் எந்தப் பலனும் இல்லாத நிலையில் 29/10/2021 அன்று TWITTER மூலம் பரப்புரை செய்திட AUAB முடிவு செய்திருந்தது. இந்நிலையில் நாளை 27/10/2021 BSNL இயக்குநர்கள் குழுவுடன் AUAB தலைவர்கள் சந்திப்பதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தீபாவளி நவம்பர் 4ந்தேதி என்பதால் அக்டோபர் மாதச்சம்பளம் அதற்கு முன்பாக பட்டுவாடா செய்யப்பட வாய்ப்புள்ளது. அது விடுத்து ஏதேனும் உருப்படியான முடிவுகள் எட்டப்பட்டால் ஊழியருக்கும் நிறுவனத்திற்கும் நல்லது பிறக்கும்.

===================

தொலைந்து போன தொகை...

2017 மற்றும் 2018ம் ஆண்டுகளில் விருது பெற்ற BSNL ஊழியர்களுக்கு இன்னும் விருதுக்கான தொகை வழங்கப்படவில்லை. 2017ல் மதுரையில் VSSP  விருது பெற்ற தோழர். மகேந்திரன் அவர்களுக்கு ரூ.21000/=விருதுத்தொகை வழங்கப்பட வேண்டும். ஆனால் இன்றுவரை BSNL  நிர்வாகம் அசையவில்லை. எதனையும் தாமதம் செய்வது என்பதில் BSNL நிர்வாகத்திற்கு ஒரு சிறப்பு விருது வழங்கலாம். சிறந்த ஊழியர் என்று அறிவிப்பு செய்து விட்டு 4 ஆண்டுகளாக அதற்கான தொகையைத் தராத இந்த நிர்வாகங்களை நாம் என்ன சொல்வது?  கடும் தாமதத்திற்குப் பின்பு சங்கங்கள் மூலமாக இப்பிரச்சினை நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. தற்போது விருதுத் தொகை சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கு உடனடியாகப் பட்டுவாடா செய்யப்பட வேண்டும் என இன்று 26/10/2021 CORPORATE அலுவலகம் உத்திரவிட்டுள்ளது. இந்த வருடமாவது விருதுத் தொகை பட்டுவாடா ஆகுமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

 ===================

IDA போராட்டம் தள்ளிவைப்பு 

ஜூலை 2021 மற்றும் அக்டோபர் 2021 முதல் வழங்கப்பட வேண்டிய IDA இன்னும் அறிவிக்கப்படவில்லை. எனவே NCOA அமைப்பு  28/10/2021 அன்று போராட்ட அறைகூவல் விடுத்திருந்தது. விரைவில் IDA உத்திரவு வெளியிடப்படும் என்று DPE அதிகாரிகள் கொடுத்த உறுதிமொழியின் பேரில் போராட்டம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. ஜூலை 2021 முதல் 173.6 சதம் IDA வழங்கப்பட வேண்டும். 

அக்டோபர் 2021 முதல்179.2 சதம் IDA உயர்ந்துள்ளது.

IDA நிறுத்தம் 

பணிக்கொடைக்கு விலக்கு 

01/10/2020 முதல் 30/06/2021 வரையிலான

காலத்திற்கு IDA சம்பளம் பெறும் ஊழியர்களுக்கு

IDA நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது அனைவரும் அறிந்ததே.

இதனால் இந்த காலகட்டத்தில் பணிநிறைவு பெற்ற தோழர்களின் பணிக்கொடை மற்றும் விடுப்புச்சம்பளம் ஆகியவை குறைவான IDAவில் கணக்கிடப்பட்டு வழங்கப்பட்டது. 

குறைந்த பட்சம்... ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு IDA நிறுத்தத்தில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என சங்கங்கள் தொடர்ந்து கோரிக்கை எழுப்பி வந்தன. 

பணிக்கொடை மற்றும் விடுப்புச்சம்பளம் என்பது வாழ்வில் ஒருமுறை மட்டுமே வழங்கப்படும் தொகை என்பதால் மிகவும் இளகிய மனதோடு அரசு பணிநிறைவு பெறும் ஊழியர்களுக்கு IDA வெட்டில் இருந்து விலக்கு அளித்துள்ளது.   

ஆனால் 01/10/2020 முதல் 30/06/2021வரையிலான காலத்திற்கு அவர்களுக்கு சம்பளத்தோடு இணைந்த IDA உயர்வு கிட்டாது.

பணிக்கொடை மற்றும் விடுப்புச்சம்பளத்திற்கு மட்டுமே NOTIONAL முறையில் IDA கணக்கிடப்பட்டு வழங்கப்படும்.

இதற்கான உத்திரவு 25/10/2021 அன்று வெளியாகியுள்ளது. 

IDA கீழ்க்கண்டவாறு கணக்கிடப்படும்... 

2007ல் ஊதிய மாற்றம் பெற்ற ஊழியர்களுக்கு...(BSNL ஊழியர்கள்)

01/10/2020 முதல் 30/06/2021 வரையிலான காலத்திற்கு...

159.9 சதம் மட்டுமே கணக்கிடப்பட்டு வழங்கப்பட்டது. 

தற்போதைய உத்திரவின்படி...

01/10/2020 முதல்  31/12/2020  வரை 165.4 சதமும்

01/01/2021 முதல்  31/03/2021  வரை  171.7  சதமும்

01/04/2021 முதல்  30/06/2021  வரை  170.5  சதமும்

IDA கணக்கிடப்பட்டு... பணிக்கொடை மற்றும் விடுப்புச்சம்பளம் வழங்கப்படும். 

01/10/2020 முதல் 30/06/2021 வரையிலான காலத்தில் ஓய்வு பெற்று பணிக்கொடை மற்றும் விடுப்புச்சம்பளம் குறைவாகப் பெற்ற  தோழர்களின் குறையைத் தீர்த்து வைத்த DPE இலாக்காவிற்கு நன்றி... 

அப்படியே 01/07/2021 முதல் வழங்கப்பட வேண்டிய IDA உத்திரவும் விரைவாக வெளியிடப்பட வேண்டும் என்பதே பணியில் உள்ள ஊழியர்களின் விழைவாகும்...

Saturday, 23 October 2021

 மாவட்டச்செயற்குழு

 
மாவட்டசெயற்குழு

மற்றும் 

பணிநிறைவு பாராட்டு விழா

--------------------------------------

25/10/2021 – திங்கள் – காலை 10 மணி

பொதுமேலாளர் அலுவலகம் – காரைக்குடி

--------------------------------------

தோழர்களே.... வாரீர்...

TWITTER பரப்புரை இயக்கம்....

A U A B

BSNL அனைத்து சங்க கூட்டமைப்பு

========================

BSNL நிறுவனத்தை சீரழிக்கும்

CMDஐ மாற்றக்கோரி...

BSNL நிறுவனம் மக்கள் சேவையை

தரமுடன் அளித்திட 

உரிய நடவடிக்கைகள் கோரி...

29/10/2021 – நாடு தழுவிய

                 TWITTER

  பரப்புரை இயக்கம்....

தோழர்களே... பங்கு கொள்வீர்...

Friday, 22 October 2021

மாவட்டச்செயற்குழு

தேசியத் தொலைத்தொடர்பு ஊழியர்கள் சங்கம்

காரைக்குடி தொலைத்தொடர்பு மாவட்டம்

மாவட்டச்செயற்குழு

மற்றும்  அகவை 60 அடைந்த

விருப்ப ஓய்வு தோழர்களுக்கு

பணிநிறைவு பாராட்டு விழா

 ========================

25/10/2021 – திங்கள் காலை 10.00 மணி

பொதுமேலாளர் அலுவலகம் – காரைக்குடி

  ========================

தலைமை 

தோழர். வே.சுப்பிரமணியன்

மாவட்டத்தலைவர் NFTE

  ========================

ஆய்படு பொருள்

மாநில மாநாடு

மாவட்ட மாநாடு

ஊழியர் மாற்றல்கள்

ஊழியர் பிரச்சினைகள்

பொறுப்பற்ற அதிகாரிகள்

தேய்ந்து வரும் BSNL சேவை

ஒப்பந்த ஊழியர் பிரச்சினைகள்

புதிய மாவட்டச்சங்க நிர்வாகிகள் தேர்வு

மற்றும்  எழுப்பப்படும் இன்ன பிற பிரச்சினைகள்...

  ========================     

பணிநிறைவு பாராட்டு பெறுவோர்

தோழர்கள் 

R. நெப்போலியன் JE

N. நவ்ஷாத் JE

S. கோபாலகிருஷ்ணன் TT

S. சங்கரன் OS

R. சுதா OS

A. பால்ராஜ் TT

V. வியாகப்பன் TT

  ========================

பங்கேற்பு : தோழர்கள்

மா. ஆரோக்கியதாஸ்

கிளைச்செயலர் NFTE

S. சதீஷ் பாலாஜி

கிளைச்செயலர் NFTE

பா. முருகன்

மாவட்டச்செயலர் TMTCLU

க. சுபேதார் அலிகான்

மாவட்டச்செயலர் NFTE

க. சுந்தர்ராஜன்

கிளைச்செயலர் AIBSNLPWA

ந.நாகேஸ்வரன்

மாவட்டச்செயலர் AIBSNLPWA

   ========================

கருத்துரை

ஏர் இந்தியா என்னும் தலைப்பில்...

வழக்கறிஞர் தோழர். மணிபாரதி

   ========================

வாழ்த்துரை

திரு. D. துரைச்சாமி DGM

துணைப்பொதுமேலாளர் - காரைக்குடி

   ========================

சிறப்புரை

தோழர். K. நடராஜன்

மாநிலச்செயலர் NFTE

   ========================

நன்றியுரை

தோழர். நா. ஜெகன்

மாவட்ட உதவிச்செயலர் NFTE

   ========================   

தோழர்களே... வருக...

 அன்புடன் அழைக்கும்

NFTE காரைக்குடி மாவட்டச்சங்கம்

Monday, 18 October 2021

 உத்தம நபி உதய தினம் 

நபி மொழி சொல்வோம்...

நபி வழி செல்வோம்...