தீர்ந்தது
ஓய்வூதிய முரண்பாடு...
இருபது
ஆண்டுகளுக்கும் மேலான
ஓய்வூதிய
முரண்பாடு PENSION ANOMALY
07/10/2021
அன்று தீர்க்கப்பட்டுள்ளது.
01/10/2000
அன்று BSNL உருவான பின்பு
01/10/2000
முதல் 30/06/2001 வரையிலான
ஒன்பது
மாத காலங்களில் ஓய்வு பெற்ற தோழர்களுக்கு
மிகப்பெரிய அநீதி இழைக்கப்பட்டது.
அப்போதைய
ஓய்வூதிய விதிகளின்படி
கடைசி 10 மாத சம்பளத்தின் சராசரி ஊதியம்
ஓய்வூதியம் நிர்ணயம் செய்ய கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
01/10/2000
முதல் 30/06/2001 வரையிலான
காலத்தில்
ஓய்வு பெற்றவர்களுக்கு..
BSNL
மற்றும் DOT சம்பளத்தின்
பத்து
மாத சராசரி கணக்கிடப்பட்டு
LAST
PAY DRAWN கடைசி மாத சம்பளம் நிர்ணயம் செய்யப்பட்டது.
விலைவாசிப்படி
IDAவில் கணக்கிடப்பட்டு வழங்கப்பட்டது.
இதனால்
BSNL உருவாக்கத்திற்குப் பின்பு
ஓய்வு பெற்றவர்கள் பெரும் இழப்பைச் சந்தித்தனர்.
உதாரணமாக...
30/11/2000ல்
ஒருவர்
ஓய்வு பெற்றிருந்தார் என்று எடுத்துக்கொண்டால்...
அவரது CDA சம்பளம் ரூ.6050/=
பத்து
மாத சராசரி ரூ.60500/=
கடைசி
மாதச்சம்பளம் ரூ.6050/=
ஓய்வூதியம்
ரூ.6050ல் 50% ரூ. 3025/=
விலைவாசிப்படி
CDA 41 சதம் ரூ. 1240/=
மொத்தம் ரூ.4265/=மாத ஓய்வூதியம் நிர்ணயம் செய்யப்பட்டது.
அதுவே
அவர் BSNL ஊழியராக இருந்து ஓய்வு பெற்றால்
கடைசி
8 மாத CDA ஊதியம் ரூ.6050 X 8 =
Rs.48400/=
கடைசி
2 மாத IDA ஊதியம் ரூ.8500 x 2 = Rs.17000/=
பத்து
மாத மொத்த ஊதியம் ரூ.65400/=
கடைசி
மாத சராசரி ஊதியம் ரூ.6540/=
ஓய்வூதியம்
ரூ.6540ல் 50% ரூ. 3270/=
விலைவாசிப்படி
IDA 28 சதம் ரூ. 916/=
மொத்தம் ரூ.4186/= என நிர்ணயம் செய்யப்பட்டது.
30/11/2000ல்
ஓய்வு பெற்ற
CDA
ஓய்வூதியர் பெற்றது ரூ.4265/=
அதே
தேதியில் ஓய்வு பெற்ற
BSNL ஓய்வூதியர் பெற்றது ரூ.4186/=
CDA
ஓய்வூதியரை விடக்
கடைசி
மாதச்சம்பளம் கூடுதலாக பெற்ற போதும்
BSNL
ஓய்வூதியருக்கு குறைவான
ஓய்வூதியமே நிர்ணயம் செய்யப்பட்டது.
நான்காயிரத்துக்கும்
அதிகமான தோழர்கள்
இதனால்
பாதிப்புக்குள்ளானார்கள்.
இதனை
எதிர்த்து முறையிட்ட போதும்
DOT
அதனை தீர்க்க முயலவில்லை.
தற்போது
இருபது ஆண்டுகளுக்குப் பின்பு
இப்பிரச்சினை தீர்க்கப்பட்டுள்ளது.
இதற்கு
முழுமுதற்காரணம்
AIBSNLPWA
ஓய்வூதியர் அமைப்பும்
அதன் தலைவர்களுமே...
2009ல்
துவங்கப்பட்ட AIBSNLPWA
பல்வேறு தொடர் முயற்சிகளுக்குப் பின்
நீதிமன்றத்தை
2014ல் அணுகி
16/12/2016ல்
சாதகமான தீர்ப்பை பெற்றது.
ஆனாலும்
நீதிமன்ற உத்திரவு
DOTயால்
மதிக்கப்படவில்லை.
2017ல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது.
அதன்
பின் மேல்முறையீட்டை சந்தித்தது.
அதன்
பின் 2 அவமதிப்பு வழக்குகள் தொடர்ந்தது.
தனது
முயற்சியில் சற்றும் மனம்தளராத
AIBSNLPWA
சங்கம் தொடர்ந்து இப்பிரச்சினையில் போராடியது.
இதோ
இன்று எட்டாக்கனியை
வெற்றிக்கனியாக மாற்றியுள்ளது.
AIBSNLPWA
சங்கத்தையும் அதன் தலைவர்களையும்
பாராட்டும்
வேளையில் புதிதாக பொறுப்பேற்றுள்ள
DOT
செயலர் திரு.இராஜாராமன் IAS அவர்களையும்
நாம்
வெகுவாகப் பாராட்டியாக வேண்டும்.
தான்
பொறுப்பேற்ற ஒரு வார காலத்திற்குள்
இந்தப் பிரச்சினையை மனிதாபிமானத்துடன் தீர்த்து வைத்துள்ளார்.
தற்போது
DOT மிகவும் தெளிவான முறையில்
குழப்பங்கள்
ஏதும் இன்றி 07/10/2021
அன்று
உத்திரவு வெளியிட்டுள்ளது.
அதன்படி...
01/10/2000
முதல் 30/06/2001 வரையிலான காலத்தில்
ஓய்வு
பெற்ற BSNL ஊழியர்களுக்கு
அவர்கள்
கடைசியாகப் பெற்ற IDA சம்பளம்
NOTIONAL
FIXATION முறையில்...
பத்து
மாத சராசரிக்கு கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டு
ஓய்வூதியம்
நிர்ணம் செய்யப்படும்.
மேலே
கண்ட உதாரணத்தில்...
8500
IDA சம்பளம் பெற்றவருக்கு...
பத்து
மாத சராசரி ரூ.85000/=என்றும்
கடைசி
மாத அடிப்படை ஊதியம் ரூ.8500/= என்றும்
ரூ.4250/=
அடிப்படை ஓய்வூதியம் என்றும்
IDA ரூ.1190/=என்றும் மறு நிர்ணயம் செய்யப்படும்.
முன்பு
ரூ.4186/= மொத்த ஓய்வூதியம் பெற்றவருக்கு
தற்போதைய
உத்திரவின்படி
மொத்த ஓய்வூதியம் ரூ.5440/= வழங்கப்படும்.
பல
மூத்த தோழர்கள்
தங்கள்
இன்னுயிரை நீத்த நிலையில்
மதுரை
தோழர் தர்மராஜ் போன்ற மிகச்சில தோழர்கள் மட்டுமே
தற்போது
இந்த உத்திரவின் பலனை நேரடியாகப் பெறப்போகின்றார்கள்.
மரணமுற்ற
தோழர்களுக்கு
அவர்கள்
இறந்த தேதி வரை கணக்கிடப்பட்டு
வாரிசுகளுக்கு
நிலுவை வழங்கப்படும்.
பாதிக்கப்பட்ட
தோழர்கள் தனியாக
இதற்காக விண்ணப்பிக்கத் தேவையில்லை.
இது
ஒரு தாமதிக்கப்பட்ட நீதி...
இருபது
ஆண்டுகளாக
மூத்தவர்களுக்கு
இழைக்கப்பட்ட அநீதி...
ஆயினும்
தளராமல்... அயராமல் போராடி வென்ற
AIBSNLPWA சங்கத்திற்கு
மனமார்ந்த வாழ்த்துக்கள்...
No comments:
Post a Comment