2021ஆம் ஆண்டின்
பட்டினிப் பட்டியலின்படி
ஏழை ஆப்பிரிக்க நாடுகளைவிட
மோசமான இடத்தில் இந்தியா உள்ளது.
கடந்த வியாழக்கிழமை வெளியான
நடப்பு 2021ம் ஆண்டுக்கான
இந்தப் பட்டினிப் பட்டியலில்
இடம் பெற்ற 116 நாடுகளில்
இந்தியா 101வது தரவரிசையில் உள்ளது.
இதன் பொருள் இந்த 116 நாடுகளில்
15 நாடுகள் மட்டுமே இந்தியாவை விட
மோசமான நிலையில் உள்ளன என்பதாகும்.
ஒவ்வோர் ஆண்டும்
பல்வேறு நாடுகளை, பல்வேறு அளவீடுகள்,
புள்ளிவிவரங்களின் அடிப்படையில் மதிப்பிட்டு
இந்தப் பட்டியல் வெளியிடப்படுகிறது.
உலகளாவிய அளவிலும்
தேசிய அளவிலும் பிராந்திய அளவிலும்
ஒப்பீடுகள் செய்யப்பட்டு,
மதிப்பீடுகள் செய்யப்படுகின்றன.
உலகம் முழுவதும்
பட்டினியை எதிர்கொள்வதற்கான யுத்தத்தில்,
இந்தப் புள்ளிவிவரங்கள் உதவக்கூடும்
என்ற நோக்கில் இவை கணக்கிடப்படுகின்றன.
பட்டினி என்பதை
எப்படிக் கணக்கிடுவது என்பதற்கு
சில அளவுகோல்கள் முன்வைக்கப்படுகின்றன.
முதலாவதாக,
போதுமான சத்துணவு இல்லாத மக்களின் சதவீதம்.
இரண்டாவது,
ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள்,
தங்கள் உயரத்திற்கு ஏற்ற எடையில்லாமல் இருத்தல்.
மூன்றாவது,
குழந்தைகள் தங்கள் வயதிற்கேற்ற
உயரமின்றி குன்றிப்போயிருத்தல்.
நான்காவது,
ஐந்துவயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம்.
இவற்றை வைத்து ஒவ்வொரு நாட்டிற்கும்
மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றன.
2021ஆம் ஆண்டின் பட்டினிப் பட்டியலின்படி
இந்தியா 101வது இடத்தைப் பிடித்துள்ளது.
கோஸ்டாரிகா, சூரிநாம், கயானா,
நிகராகுவா, கானா, எத்தியோப்பியா,
பர்கின ஃபாஸோ, சூடான், ருவாண்டா
போன்ற பின்தங்கிய ஆப்பிரிக்க
நாடுகள்
இந்தியாவை விட பட்டியலில்
மேம்பட்ட நிலையில் உள்ளன.
அண்டை நாடான
பாகிஸ்தான் 92வது இடத்திலும்
சீனா 5வது இடத்திலும்
நேபாளம் 76வது இடத்திலும்
இலங்கை 65வது இடத்திலும்
பர்மா 71வது இடத்திலும் உள்ளன.
இந்தியாவின் பிரச்சனை என்பது
செல்வம் சரியான முறையில்
பங்கீடு செய்யப்படாததே என்பதை
இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
இந்திய மக்களில் 22 சதவீதம் பேர்
வறுமைக்கோட்டிற்குக் கீழ் வாழும் நிலையில்,
உலக பெரும் கோடீஸ்வரர்களில்
84 பேர் இந்தியாவில்தான் வசிக்கிறார்கள்
என்பதை இந்தப் பட்டியலுடன் சேர்ந்த
அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
2016ஆம் ஆண்டின்
புள்ளிவிவரங்களின்படி,
உலகில் வளர்ச்சிக் குறைபாடான
குழந்தைகளின் எண்ணிக்கையில்
மூன்றில் ஒரு பங்கினர்
இந்தியாவில்தான் உள்ளனர்.
இறுதியாக,
இந்தியாவின் மிக உள்ளடங்கிய
பகுதிகளில் வசிக்கும் எளிதில்
பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கும்
உணவுப் பாதுகாப்பை
உறுதிசெய்ய வேண்டுமானால்,
சமூக ரீதியிலான,
பொருளாதார ரீதியிலான,
அரசியல் ரீதியிலான
பாகுபாடுகளை சரிசெய்ய வேண்டும்
என்கிறது இந்த அறிக்கை.
பாகுபாடு இல்லாத தேசமாக...
பட்டினி இல்லாத தேசமாக
பாரதம் மாறுவது எப்போது?
என்பதே நாட்டு மக்களது எதிர்பார்ப்பு
-BBC இணைய தளம்-
-----------------------------------------------
உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
சேரா தியல்வது நாடு.
குறள்...
No comments:
Post a Comment