Tuesday, 12 October 2021

 நலம்... நலமறிய ஆவல்...

 அஞ்சல் வாரம்... 


1764ல்..

கிழக்கிந்தியக் கம்பெனியின் தேவைகளுக்காக...

மதராஸ்... பம்பாய்.. கல்கத்தா...நகரங்களில்

அஞ்சலகங்கள் துவங்கப்பட்டன...


1774ல்..

வாரன் ஹேஸ்டிங்...

மக்கள் சேவையாக மாற்றினார்...


1820ல்...

தாமஸ் வாகன் அதன் தரம் உயர்த்தினார்...

3 மாதங்களில் இங்கிலாந்து சென்ற தபால்...

அவரது உத்தியால்...

35 நாட்களில் சென்றடைந்தது....


1852ல்...

சிந்து மாகாணத்தில்...

தபால் தலை அறிமுகமானது...


1931ல்...

இங்கிலாந்து மன்னர் படத்துடன்

தபால் தலைகள் வெளியிடப்பட்டன...

தபால் தலைகளில் தலைகள் தென்பட்டன...


1947ல்...

இந்திய விடுதலையை முன்னிட்டு....

தேச மணிக்கொடி... அசோக சின்னம், விமானம்

ஆகிய மூன்று தபால் தலைகள் வெளிவந்தன...


1947க்குப்பின்...

அதிகார வர்க்க அஞ்சல்...

அடிமட்ட மக்களின் அஞ்சலானது...


அஞ்சல்....

மனிதர்களை இணைத்தது....

மனங்களை பிணைத்தது...

நலம் நலமறிய ஆவல் என...

அஞ்சலட்டையில் அன்பு ஒளிர்ந்தது...


அஞ்சல்....

எளியோர்களின் தூதன்...

பாமரர்களின் பாலம்...


அஞ்சல்

பைசா செலவில் தேசம் இணைத்தது...

இன்றோ...

பைசா நகரக்கோபுரம் போல் சாய்ந்து நிற்கிறது...


ஆயிரம் பின்னடைவு இருந்தாலும்...

ஆயிரம் தொழில் நுட்பம் வந்தாலும்...

அஞ்சலுக்கு நிகர் ஏதுமில்லை...

அஞ்சலுக்கு வணக்கம்...

No comments:

Post a Comment