IDA நிறுத்தம்
01/10/2020 முதல் 30/06/2021 வரையிலான
காலத்திற்கு IDA சம்பளம்
பெறும் ஊழியர்களுக்கு
IDA நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது
அனைவரும் அறிந்ததே.
இதனால் இந்த காலகட்டத்தில் பணிநிறைவு பெற்ற தோழர்களின் பணிக்கொடை மற்றும் விடுப்புச்சம்பளம் ஆகியவை குறைவான IDAவில் கணக்கிடப்பட்டு வழங்கப்பட்டது.
குறைந்த பட்சம்... ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு IDA நிறுத்தத்தில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என சங்கங்கள் தொடர்ந்து கோரிக்கை எழுப்பி வந்தன.
பணிக்கொடை மற்றும் விடுப்புச்சம்பளம் என்பது வாழ்வில் ஒருமுறை மட்டுமே வழங்கப்படும் தொகை என்பதால் மிகவும் இளகிய மனதோடு அரசு பணிநிறைவு பெறும் ஊழியர்களுக்கு IDA வெட்டில் இருந்து விலக்கு அளித்துள்ளது.
ஆனால் 01/10/2020 முதல் 30/06/2021வரையிலான காலத்திற்கு அவர்களுக்கு சம்பளத்தோடு இணைந்த IDA உயர்வு கிட்டாது.
பணிக்கொடை மற்றும் விடுப்புச்சம்பளத்திற்கு மட்டுமே NOTIONAL முறையில் IDA கணக்கிடப்பட்டு வழங்கப்படும்.
இதற்கான உத்திரவு 25/10/2021 அன்று வெளியாகியுள்ளது.
IDA கீழ்க்கண்டவாறு கணக்கிடப்படும்...
2007ல் ஊதிய மாற்றம்
பெற்ற ஊழியர்களுக்கு...(BSNL ஊழியர்கள்)
01/10/2020 முதல் 30/06/2021
வரையிலான காலத்திற்கு...
159.9 சதம் மட்டுமே கணக்கிடப்பட்டு வழங்கப்பட்டது.
தற்போதைய உத்திரவின்படி...
01/10/2020 முதல் 31/12/2020 வரை
165.4 சதமும்
01/01/2021 முதல் 31/03/2021 வரை 171.7 சதமும்
01/04/2021 முதல் 30/06/2021 வரை 170.5 சதமும்
IDA கணக்கிடப்பட்டு... பணிக்கொடை மற்றும் விடுப்புச்சம்பளம் வழங்கப்படும்.
01/10/2020 முதல் 30/06/2021 வரையிலான காலத்தில் ஓய்வு பெற்று பணிக்கொடை மற்றும் விடுப்புச்சம்பளம் குறைவாகப் பெற்ற தோழர்களின் குறையைத் தீர்த்து வைத்த DPE இலாக்காவிற்கு நன்றி...
அப்படியே 01/07/2021 முதல் வழங்கப்பட வேண்டிய IDA உத்திரவும் விரைவாக வெளியிடப்பட வேண்டும் என்பதே பணியில் உள்ள ஊழியர்களின் விழைவாகும்...
No comments:
Post a Comment