Tuesday, 26 October 2021

செய்திகள்

BSNL ஊதிய மாற்றக்குழு  

BSNL ஊதிய மாற்றக்குழு  WAGE NEGOTIATION COMMITTEE மாற்றி அமைக்கப்படவுள்ளது. அதன் தலைவராக இருந்த திரு.H.C. பந்த் ஓய்வு பெற்றதால் ஊதியப் பேச்சுவார்த்தைக்குழு மீண்டும் மாற்றி அமைக்கப்படவுள்ளதாகக் கூறப்படுகின்றது. ஆனால் ஊழியர்கள் தரப்பில் அனைத்து உறுப்பினர்களும் ஓய்வு பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 02/11/2021க்குள் BSNLEU மற்றும் NFTE சங்கங்கள் சார்பாக பேச்சுவார்த்தைக் குழு உறுப்பினர்கள் பட்டியலை நிர்வாகத்திற்கு அளிக்க வேண்டும் என BSNL இன்று 26/10/2021 உத்திரவிட்டுள்ளது. மறுபடியும் முதலில் இருந்து?...

===================

அலுவலகங்களில் FTTH இணைப்புக்கள்

FTTH FIBRE இணைப்புக்கள் BSNL அலுவலகங்களில் கொடுக்கலாம் என்று CORPORATE அலுவலகம் இன்று உத்திரவிட்டுள்ளது. ஏற்கனவே LAN வசதியுள்ள அலுவலகங்களில் FTTH இணைப்புக்கள் கொடுக்கப்படாது. GM மற்றும் அதற்கு மேல்நிலையில் உள்ள அதிகாரிகளுக்கு 799 திட்டத்திலும், AGM/DGM நிலையில் உள்ள அதிகாரிகளுக்கு 599 திட்டத்திலும் இணைப்புக்கள் வழங்கப்படும். BSNL செலவில் OLT போடப்பட்ட இடங்களில் மட்டுமே இணைப்புக்கள் கொடுக்கப்படும். VENDORகள் உள்ள வருவாய்ப் பகிர்வு இடங்களில் இணைப்புக்கள் கொடுக்கப்படமாட்டாது.

===================

இயக்குநர்கள் குழு - AUAB சந்திப்பு

06/10/2021 அன்று AUAB அனைத்து சங்க கூட்டமைப்பு BSNL இயக்குநர்கள் குழுவுடன் பலமணி நேரங்கள் பேச்சுவார்த்தை நடத்தியும் எந்தப் பலனும் இல்லாத நிலையில் 29/10/2021 அன்று TWITTER மூலம் பரப்புரை செய்திட AUAB முடிவு செய்திருந்தது. இந்நிலையில் நாளை 27/10/2021 BSNL இயக்குநர்கள் குழுவுடன் AUAB தலைவர்கள் சந்திப்பதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தீபாவளி நவம்பர் 4ந்தேதி என்பதால் அக்டோபர் மாதச்சம்பளம் அதற்கு முன்பாக பட்டுவாடா செய்யப்பட வாய்ப்புள்ளது. அது விடுத்து ஏதேனும் உருப்படியான முடிவுகள் எட்டப்பட்டால் ஊழியருக்கும் நிறுவனத்திற்கும் நல்லது பிறக்கும்.

===================

தொலைந்து போன தொகை...

2017 மற்றும் 2018ம் ஆண்டுகளில் விருது பெற்ற BSNL ஊழியர்களுக்கு இன்னும் விருதுக்கான தொகை வழங்கப்படவில்லை. 2017ல் மதுரையில் VSSP  விருது பெற்ற தோழர். மகேந்திரன் அவர்களுக்கு ரூ.21000/=விருதுத்தொகை வழங்கப்பட வேண்டும். ஆனால் இன்றுவரை BSNL  நிர்வாகம் அசையவில்லை. எதனையும் தாமதம் செய்வது என்பதில் BSNL நிர்வாகத்திற்கு ஒரு சிறப்பு விருது வழங்கலாம். சிறந்த ஊழியர் என்று அறிவிப்பு செய்து விட்டு 4 ஆண்டுகளாக அதற்கான தொகையைத் தராத இந்த நிர்வாகங்களை நாம் என்ன சொல்வது?  கடும் தாமதத்திற்குப் பின்பு சங்கங்கள் மூலமாக இப்பிரச்சினை நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. தற்போது விருதுத் தொகை சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கு உடனடியாகப் பட்டுவாடா செய்யப்பட வேண்டும் என இன்று 26/10/2021 CORPORATE அலுவலகம் உத்திரவிட்டுள்ளது. இந்த வருடமாவது விருதுத் தொகை பட்டுவாடா ஆகுமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

 ===================

IDA போராட்டம் தள்ளிவைப்பு 

ஜூலை 2021 மற்றும் அக்டோபர் 2021 முதல் வழங்கப்பட வேண்டிய IDA இன்னும் அறிவிக்கப்படவில்லை. எனவே NCOA அமைப்பு  28/10/2021 அன்று போராட்ட அறைகூவல் விடுத்திருந்தது. விரைவில் IDA உத்திரவு வெளியிடப்படும் என்று DPE அதிகாரிகள் கொடுத்த உறுதிமொழியின் பேரில் போராட்டம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. ஜூலை 2021 முதல் 173.6 சதம் IDA வழங்கப்பட வேண்டும். 

அக்டோபர் 2021 முதல்179.2 சதம் IDA உயர்ந்துள்ளது.

No comments:

Post a Comment