Tuesday, 30 April 2013
Monday, 29 April 2013
பிழைத்தளம்..
ஒரு காலத்தில் நாம் செய்திகளை வலைவீசினோம்.
இன்றோ செய்திகள் நம்மீது வலை வீசுகின்றன...
உடனுக்குடன் உலகெங்கும்
நற்செய்திகளை விதைத்திட
நலம் பயக்கும் சிந்தனைகளை வித்திட
இணையதளம் போல் இணையற்றது ஏதுமில்லை.
ஆனால்
சில வலைத்தளங்களோ
கொலைத்தளங்களாக காட்சி அளிக்கின்றன
அவை..
நட்பைக் கொலை செய்கின்றன..
தோழமையைக் கொலைசெய்கின்றன
உண்மையைக் கொலைசெய்கின்றன
கொள்கையைக் கொலைசெய்கின்றன
கீழ்ப்படிதலைக் கொலைசெய்கின்றன
மொத்தத்தில்
இயக்கத்தை கொலைசெய்கின்றன..
BSNL நாம் வாழும் தளம்..
NFTE நாம் வணங்கும் தலம்..
அதனதன் மாண்புக்கு ஊறு இல்லாமல்
நமது சிந்தனைகளை செய்திகளை
வலைத்தளத்தில் விதைப்போம்..
வலைத்தளத்தை பிழைத்தளமாக்கும்
செயல்களை ஒறுப்போம்.. வேரறுப்போம்..
Sunday, 28 April 2013
ப.சி. இல்லா பாரதம்......
எங்களுக்கு MP..
நாட்டுக்கோ மந்திரி.
ஞாயிறு எல்லோருக்கும் விடுமுறை
அவருக்கோ வீடு.. முறை
வாரந்தோறும் வங்கிக்கிளை திறப்பு
அதுவே அவரது தனிச்சிறப்பு..
நேற்றைய ஞாயிறும்
எங்கள் தெருவிலே வங்கி திறந்தார்
கூடவே திருவாயும் திறந்தார்..
பாரத தேசத்தில் ஏழைகள் உண்டு..
ஆனால்
பசி.. பட்டினி இல்லை..
வங்கிகளாக திறப்போம்..
பசியில்லா பாரதம் படைப்போம்.. என்றார்..
ஆம்...
நமது ஆசையும் அதுவே..
ஏழைகள் உண்டு.. பசி இல்லை என்பது
எப்பேர்பட்ட தத்துவம்..
இத்தகைய மேல்தட்டு தத்துவார்த்த
ப.சி. இல்லா பாரதமே..
நமது ஆசையும் ...
Friday, 26 April 2013
மதுரையை மீட்போம்
எதிரிகளிடம் இருந்து மதுரையை மீட்டான் சுந்தரபாண்டியன்.
அல்லவைகளிடம் இருந்து நல்லவைகளை மீட்க
என்றென்றும் மதுரையே மதுரமான இடம்.
அந்த வகையில் இன்று 27/04/2013
மதுரையில் கூட்டுறவு நாணயச்சங்க
தேர்தல் நடைபெறுகின்றது.
காசேதான் கடவுளடா என்பது பெரியோர் கூற்று.
எனவேதான்
"நாணயமே நமச்சிவாயம்" என்றும்
"பைசாவே பரமசிவம்" என்றும்
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்து
நிலமிசை நீடு வாழ
தொழிற்சங்கத்தினரும் இன்று துணிந்து விட்டனர்.
அதனால்தான்
நாணயச்சங்கமும் கூட
நாணயமற்றவர்களிடம் மாட்டிக்கொண்டு
நாறிப்போய் கிடக்கின்றது.
தீயதை செய்வது குற்றம்
அதனை வேடிக்கை பார்ப்பது அதனினும் குற்றம்.
எனவே
தீமையை அகற்ற மதுரையில்
மன உறுதியுடன் அணி சேர்ந்து போராடும்
மதுரையின் மீட்பர்களை வாழ்த்துவோம்.
மீட்புக்கு மதுரை என்பதை
மீண்டும் நிருபிப்போம் .
மீண்டும் நிருபிப்போம் .
சங்க அங்கீகார உத்திரவு
BSNLEU சங்கத்தை அங்கீகரிக்கப்பட்ட முதல் சங்கமாகவும்
NFTE சங்கத்தை அங்கீகரிக்கப்பட்ட இரண்டாவது சங்கமாகவும்
அறிவித்து BSNL நிர்வாகம் 25/04/2013 அன்று உத்திரவிட்டுள்ளது.
அங்கீகார காலம் 25/04/2013 முதல் 24/04/2016 வரை மூன்று ஆண்டுகள்
கீழ்க்கண்ட தொழிற்சங்க வசதிகள் இரண்டு சங்கங்களுக்கும் பொருந்தும்.
- தகவல் பலகை
- தொலைபேசி வசதி
- சங்கப்பொறுப்பாளர்களுக்கான மாற்றல் (Immunity Transfer )
- கூட்டாலோசனைக்குழுவில் பிரதிநிதித்துவம் - JCM
- முறைப்படுத்தப்பட்ட கூட்டங்கள் Formal Meetings
- சிறப்பு சிறு விடுப்பு - SPECIAL CASUAL LEAVE
- சந்தாப்பிடித்தம்
- நிர்வாக உத்திரவுகளின் நகல்களை அளித்தல்.
2 சதத்திற்கு மேல் வாக்குகள் பெற்ற
FNTO மற்றும் BTEU BSNL சங்கங்களுக்கு
கீழ்க்கண்ட குறைந்த பட்ச தொழிற்சங்க வசதிகள் அளிக்கப்படும்
எனவும் BSNL நிர்வாகம் உத்திரவிட்டுள்ளது.
1. தகவல் பலகை
2. தொலைபேசி வசதி
3. சந்தாப்பிடித்தம்
4. நிர்வாக நலன் சம்பந்தமாக கடிதம் கொடுத்தல்.
குறிப்பு :
JCM உறுப்பினர் எண்ணிக்கையைத்தவிர
NFTE மற்றும் BSNLEU சங்கங்களுக்கு இடையே
தொழிற்சங்க வசதிகளில் வித்தியாசமில்லை.
ஆயினும் JCM தலமட்டக்குழுவில் NFTE மற்றும் BSNLEU சங்கங்களுக்கு எத்தனை இடம் ஒதுக்கப்படுகின்றது என்ற விவரம் அறிவிக்கப்படவில்லை.
Thursday, 25 April 2013
மதுரை
கூட்டுறவு சங்கத் தேர்தல்
முக்கண்ணனை முகத்திற்கெதிரே தட்டிக்கேட்ட
நக்கீரன் வாழ்ந்த மாமதுரையிலே...
கூட்டு சேர்ந்து கூட்டாக கொள்ளையடிக்கும்
கூட்டத்திடம் இருந்து
மதுரை கூட்டுறவு சங்கத்தைக்
காப்பாற்ற... கைப்பற்ற...
NFTE - FNTO - - BSNLEU - SNATTA - SEWA
என்ற புதிய உறவுகளின் கூட்டை
அதிகாரப்படுத்திட.. ஆதரிப்பீர்..
வரிசை எண்கள் :
மகளிர் பிரிவு
2, 3, 4
SC/ST பிரிவு
10, 13
பொதுப்பிரிவு
17, 19, 20, 22, 23, 25,
நாணயச் சங்கத்தை
நாணயமிக்கவர்களிடம்
ஒப்படைப்போம்..
லஞ்ச இருளை விதைத்தால்
சூரியன் என்றாலும்
சூரியன் என்றாலும்
சுட்டெரிப்போம்..
தேர்தல் நாள்:
27/04/2013
தேர்தல் நாள்:
27/04/2013
Tuesday, 23 April 2013
செய்திகள்
- CMD உடல்நலக்குறைவாக இருப்பதாலும், PGM(SR ) சுற்றுப்பயணத்தில் இருப்பதாலும் சங்க அங்கீகார உத்திரவு வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
- FNTO சங்கம் DIRECTOR(HRD)ஐ சந்தித்து எப்படியாயினும் JCM தலமட்டக்குழுவில் FNTO சங்கத்திற்கு ஒரு இடம் ஒதுக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.
- FNTO சங்கத்திற்கு JCMல் ஒரு இடம் வழங்குவது சட்ட விரோதம் என TEPU சங்கம் கருத்து தெரிவித்துள்ளது.
- 80 வயதான ஓய்வூதியர்களுக்கு 20 சத கூடுதல் ஓய்வூதியம் வழங்கப்படுகின்றது. அவ்வாறு கூடுதல் ஓய்வூதியம் பெறுவோர் குடும்ப ஓய்வூதியம் FAMILY PENSION வாங்க நேரிட்டாலும் குடும்ப ஒய்வூதியத்திலும் கூடுதலாக 20 சதம் வழங்க வேண்டும் என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
- BSNLலில் நேரடி விற்பனையாளர், சில்லறை விற்பனையாளர் , கிராமப்புற விநியோகிப்பாளர், DSA /Retailers /Rural Distributor பணியைப் பெண்களுக்கு அளித்து BSNLன் விற்பனை வருவாயைப் பெருக்குவதற்கு BSNL நிர்வாகம் உத்திரவிட்டுள்ளது. இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் ஒவ்வொரு மாநிலமும் குறைந்தது 100 கிராமப்புற விநியோகிப்பாளரை நியமனம் செய்ய வேண்டுமெனவும் BSNL நிர்வாகம் உத்திரவிட்டுள்ளது.
Sunday, 21 April 2013
BSNL - MTNL
சீரமைப்புக்குழு
சென்ற மாதம் இலாக்கா அமைச்சர் கபில் சிபல் நலிவடைந்து நோயுற்று வரும் BSNL மற்றும் MTNL நிறுவனங்களை நிதி நெருக்கடியில் இருந்து மீட்கவும் அவற்றை சீரமைப்பது பற்றியும்
பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார்
அதன் அடிப்படையில் பிரதமர் நலிவுற்று வரும் BSNL - MTNL நிறுவனங்களின் நிலை பற்றி ஆராயவும் அவற்றிற்கு புத்துணர்ச்சி அளிக்கவும் 7 பேர் கொண்ட குழுவை அமைத்து உத்திரவிட்டுள்ளார்.
3 மாதங்களுக்குள் குழு அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.
- நிதி மந்திரி சிதம்பரம்
- தொலைத்தொடர்பு மந்திரி கபில்சிபல்
- வர்த்தக மந்திரி ஆனந்த் ஷர்மா
- சட்ட மந்திரி அஷ்வின் குமார்
- தகவல் மற்றும் ஒலிபரப்பு மந்திரி மணிஷ் திவாரி
- மாநிலங்களுக்கான இணை அமைச்சர் நாராயணசாமி
- திட்டக்குழு துணைத்தலைவர் மாண்டேக்சிங் அலுவாலியா
ஆகியோர் குழு உறுப்பினர்கள் ஆவர்.
வழக்கமான குழு அறிக்கையைப் போல் அல்லாமல்
தேசத்தின் மிகப்பெரும் பொதுத்துறைகளை காக்க உண்மையான முயற்சி அரசால் மேற்கொள்ளப்பட்டால் BSNL மற்றும் MTNL நலிவிலிருந்து மீண்டு எழும்..
மீண்டும் எழும் என்பதில் ஐயமில்லை.
தொழிற்சங்க வசதிகள்
TRADE UNION FACILITIES
புதிய சங்க அங்கீகார விதிகளின்படி
அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களுக்கான
தொழிற்சங்க வசதிகள்.
(NFTE மற்றும் BSNLEU )
1. தகவல் பலகை
2. தொலைபேசி வசதி
3. சங்கப்பொறுப்பாளர்களுக்கான மாற்றல் (Immunity Transfer )
4. கூட்டாலோசனைக்குழுவில் பிரதிநிதித்துவம் - JCM
5. முறைப்படுத்தப்பட்ட கூட்டங்கள் Formal Meetings
6. சிறப்பு சிறு விடுப்பு - SPECIAL CASUAL LEAVE
7. சந்தாப்பிடித்தம்
8. நிர்வாக உத்திரவுகளின் நகல்களை அளித்தல்.
அலுவலக வசதி என்பது தற்போதுள்ள நிலை தொடரும் என்றும்,
தேவை ஏற்படும்போது பரிசீலிக்கப்படும் எனவும் சேமநலக்குழு மற்றும் விளையாட்டுக்குழு உறுப்பினர்கள் பற்றி சம்பந்தப்பட்ட குழுக்கள் முடிவு செய்யும் எனவும் BSNL நிர்வாகம் தெரிவித்துள்ளது
--------------------------------------------------------------------
2 சதத்திற்கு மேல் வாக்குப்பெற்ற
சங்கங்களுக்கான தொழிற்சங்க வசதிகள்.
(FNTO மற்றும் BTEUBSNL)
1. தகவல் பலகை
2. தொலைபேசி வசதி
3. சந்தாப்பிடித்தம்
4. பொதுநலன் சம்பந்தமாக நிர்வாகத்திற்கு கடிதம் கொடுத்தல்
Saturday, 20 April 2013
JCM
கூட்டாலோசனைக்குழு கணக்கீட்டு முறை
புதிய சங்க அங்கீகார விதிகளின்படி
JCM இடங்கள் கீழ்க்கண்டவாறு கணக்கிடப்படுகின்றன.
1. வாக்கு சதவிகிதம் 30.28 48.6
2. கூடுதல் சதவிகிதம் 8.11 13.01
3. மொத்த சதவிகிதம் 38.39 61.61
4. JCM இடங்கள் 5 8
(7க்கு 1 அடிப்படையில்)
5. மீதியுள்ள சதவிகிதம் 3.39 5.616. மொத்த JCM இடங்கள் 5 9
குறிப்பு:
NFTEயும் BSNLEUவும் சேர்ந்து வாங்கிய வாக்கு சதவிகிதம் 78.88 (30.28+48.6)
வேறு யாரும் 7 சத வாக்குகள் வாங்காததால்
மீதியுள்ள 21.12 சதவிகிதம் (100 - 78.88) அவரவர் வாங்கிய வாக்கு அடிப்படையில்
8.11 + 13.01 என பிரித்தளிக்கப்படுகின்றது.
7 சதத்திற்கு ஒரு இடம் என்ற அடிப்படையில் NFTEக்கு 5 இடங்களும் (5x7=35)
BSNLEUக்கு 8 இடங்களும் (8x7=56) கணக்கிடப்படுகின்றன. மீதி NFTEக்கு 3.39 சதமும், BSNLEUவிற்கு 5.61 சதமும் வருகின்றது. இதில் மீதியுள்ள சதம் BSNLEUவிற்கு 5.61 என NFTE ஐ விடக்கூடுதலாக வருவதால் 8+1 =9 என 9 இடங்கள் அளிக்கப்படும்.
FNTO சங்கம் 14313 வாக்குகளைப் பெற்றிருந்தால் 7 சதம் அடைந்து JCMல்
ஒரு இடம் பிடித்திருக்க முடியும். ஆனால் பாவம்.. 225 வாக்குகள் குறைவாகப் பெற்று 14088 வாக்குகள் மட்டுமே பெற்று அவர்கள் கனவான JCMல் ஒரு இடம் என்பது கானல் நீராகிப்போனது. ஜனநாயகத்தில் ஒரு ஓட்டு அதிகம் பெற்றவர் கூட வெற்றி பெற முடியும். ஆனால் ROUND செய்கின்றோம் என்று 224 வாக்குகளை FNTO சங்கத்திற்கு நிர்வாகம் அளித்து 7 சதம் என்று ஆக்குமேயானால்
அது ஜனநாயகப் படுகொலையாகும்.
ஆனால் நமது தேசத்தில் எது வேண்டுமானாலும் நடக்கும்.
FNTO என்பது காங்கிரஸ் பெற்ற பிள்ளை. அவர்கள் ஆட்சி நடக்கையிலே.. அதிகாரம் அவர்கள் கையிலே.. எனவே அங்கீகார விதிகளைக்கூட நிர்வாகம் திருத்தலாம்.
எது எப்படியாயினும் NFTEக்கு ஆளே இல்லாத ஜபல்பூரிலும் கூட JCMல் 5 இடம் உண்டு.
JCM தலைவர் என்ற அந்தஸ்து உண்டு.
அதை முறையாகப் பயன்படுத்தி ஊழியர் நலன் காப்போம்.
NFTEஐ இன்னும் வலுவாக்குவோம்..
முறையாகச் செயல்பட்ட்டால் 2016ல் நாமே முதன்மைச்சங்கம்.
Thursday, 18 April 2013
ஓரடி முன்னால்...
எட்டாண்டுகளுக்குப் பின்னால் BSNL ஊழியர்களின் பிரச்சினைகளை
தலமட்டம் முதல் அகில இந்திய மட்டம் வரை
நமது சங்கம் பேசுவதற்கும் தீர்ப்பதற்குமான வழி பிறந்துள்ளது.
நடந்து முடிந்த தேர்தலில் BSNLEU சங்கம்
99380 வாக்குகளைப் பெற்று 48.54 சதம் அடைந்து முதன்மைச்சங்கமாகவும்,
நமது சங்கம் 61915 வாக்குகளைப் பெற்று
30.28 சதம் அடைந்து இரண்டாவது சங்கமாகவும்
BSNL நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட உள்ளன.
FNTO சங்கம் 14088 வாக்குகளைப் பெற்று 6.88 சதம் அடைந்துள்ளது.
இத்தனை ஏமாற்றங்களுக்குப் பின்னும்
BSNLEU சங்கம் வெற்றி பெறுவது என்பது தொழிலாளிகள் இன்னும் சிந்திக்கும் நிலையை அடையவில்லை என்பதையே காட்டுகின்றது.
ஆனால் நம்மை மேலும் சிந்திக்க வைத்துள்ளது.
எது எப்படியாயினும்
கடந்த காலங்களை விட தற்போது
அங்கீகரிக்கப்பட்ட சங்கமாகவும், கூட்டு ஆலோசனைக்குழுவில் இடம் பிடித்தும் ஊழியர்களுக்கு சேவை செய்யக்கூடிய வாய்ப்பு
நமது சங்கத்திற்கு ஊழியர்களாலும்,
புதிய விதிமுறைகளாலும் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த வாய்ப்பை உரிய முறையில் பயன்படுத்துவோம்.
ஊழியர் நலன் பேணுவோம்.
நலிவடைந்து வரும் BSNLஐ வலுப்படுத்துவோம்.
அருமைத்தோழர்கள் குப்தா,ஜெகன்,விச்சாரே,வெங்கடேசன் '
காட்டிய திசை வழியில்
என்றும் பயணிப்போம்.. தோழர்களே..
அகில இந்திய
தேர்தல் முடிவுகள்
தேர்தல் முடிவுகள்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு
BSNL Corporate Offie Letter No:
BSNL /Sr.GM (TS )/CRO /2013, Dated 18/04/2013
6TH MEMBERSHIP VERIFICATION - ALL INDIA RESULTS
| ||||
SL.NO:
|
CIRCLE
|
NFTE
|
BSNLEU
|
FNTO
|
1
|
A&N
|
49
|
110
|
5
|
2
|
ANDHRA
|
7603
|
11056
|
1769
|
3
|
ALTTC
|
35
|
74
| |
4
|
ASSAM
|
400
|
3082
|
331
|
5
|
BIHAR
|
2306
|
1544
|
1042
|
6
|
CO OFFICE
|
70
|
93
|
4
|
7
|
CHENNAI
|
2896
|
3038
|
895
|
8
|
CHATTISGARH
|
887
|
616
|
37
|
9
|
GUJARAT
|
4870
|
6843
|
1214
|
10
|
HIMACHAL
|
951
|
1531
|
30
|
11
|
HARYANA
|
1698
|
1893
|
32
|
12
|
J &KASHMIR
|
962
|
807
|
20
|
13
|
JARKAND
|
1310
|
627
|
407
|
14
|
KARNATAKA
|
5268
|
7937
|
683
|
15
|
KERALA
|
839
|
7734
|
2254
|
16
|
KOLKATTA TD
|
1146
|
4238
|
1043
|
17
|
MADHYAPRADESH
|
2703
|
3974
|
372
|
18
|
MAHARASHTRA
|
6055
|
10394
|
451
|
19
|
NE-I
|
87
|
1292
|
85
|
20
|
NE-II
|
233
|
851
|
1
|
21
|
NTR
|
591
|
374
|
104
|
22
|
ORISSA
|
1185
|
1800
|
209
|
23
|
PUNJAB
|
2698
|
4024
|
100
|
24
|
RAJASTHAN
|
2455
|
5321
|
131
|
25
|
T&D CIRCLE
|
3
|
41
|
5
|
26
|
TF- JABALPUR
|
290
|
306
|
59
|
27
|
TF-K
|
218
|
533
|
49
|
28
|
TF-Mumbai
|
280
|
283
|
60
|
29
|
TS
|
35
|
140
|
33
|
30
|
TAMIL NADU
|
6922
|
6178
|
1217
|
31
|
BRBRAITT
|
-
|
76
|
1
|
32
|
UP EAST
|
2882
|
4183
|
550
|
33
|
UP WEST
|
2598
|
2932
|
165
|
34
|
UTHRANJAL
|
472
|
940
|
105
|
35
|
WEST BENGAL
|
918
|
4515
|
625
|
TOTAL
|
61915
|
99380
|
14088
| |
PERCENTAGE
|
30.28
|
48.54
|
6.88
|
Subscribe to:
Posts (Atom)