JCM
கூட்டாலோசனைக்குழு கணக்கீட்டு முறை
புதிய சங்க அங்கீகார விதிகளின்படி
JCM இடங்கள் கீழ்க்கண்டவாறு கணக்கிடப்படுகின்றன.
1. வாக்கு சதவிகிதம் 30.28 48.6
2. கூடுதல் சதவிகிதம் 8.11 13.01
3. மொத்த சதவிகிதம் 38.39 61.61
4. JCM இடங்கள் 5 8
(7க்கு 1 அடிப்படையில்)
5. மீதியுள்ள சதவிகிதம் 3.39 5.616. மொத்த JCM இடங்கள் 5 9
குறிப்பு:
NFTEயும் BSNLEUவும் சேர்ந்து வாங்கிய வாக்கு சதவிகிதம் 78.88 (30.28+48.6)
வேறு யாரும் 7 சத வாக்குகள் வாங்காததால்
மீதியுள்ள 21.12 சதவிகிதம் (100 - 78.88) அவரவர் வாங்கிய வாக்கு அடிப்படையில்
8.11 + 13.01 என பிரித்தளிக்கப்படுகின்றது.
7 சதத்திற்கு ஒரு இடம் என்ற அடிப்படையில் NFTEக்கு 5 இடங்களும் (5x7=35)
BSNLEUக்கு 8 இடங்களும் (8x7=56) கணக்கிடப்படுகின்றன. மீதி NFTEக்கு 3.39 சதமும், BSNLEUவிற்கு 5.61 சதமும் வருகின்றது. இதில் மீதியுள்ள சதம் BSNLEUவிற்கு 5.61 என NFTE ஐ விடக்கூடுதலாக வருவதால் 8+1 =9 என 9 இடங்கள் அளிக்கப்படும்.
FNTO சங்கம் 14313 வாக்குகளைப் பெற்றிருந்தால் 7 சதம் அடைந்து JCMல்
ஒரு இடம் பிடித்திருக்க முடியும். ஆனால் பாவம்.. 225 வாக்குகள் குறைவாகப் பெற்று 14088 வாக்குகள் மட்டுமே பெற்று அவர்கள் கனவான JCMல் ஒரு இடம் என்பது கானல் நீராகிப்போனது. ஜனநாயகத்தில் ஒரு ஓட்டு அதிகம் பெற்றவர் கூட வெற்றி பெற முடியும். ஆனால் ROUND செய்கின்றோம் என்று 224 வாக்குகளை FNTO சங்கத்திற்கு நிர்வாகம் அளித்து 7 சதம் என்று ஆக்குமேயானால்
அது ஜனநாயகப் படுகொலையாகும்.
ஆனால் நமது தேசத்தில் எது வேண்டுமானாலும் நடக்கும்.
FNTO என்பது காங்கிரஸ் பெற்ற பிள்ளை. அவர்கள் ஆட்சி நடக்கையிலே.. அதிகாரம் அவர்கள் கையிலே.. எனவே அங்கீகார விதிகளைக்கூட நிர்வாகம் திருத்தலாம்.
எது எப்படியாயினும் NFTEக்கு ஆளே இல்லாத ஜபல்பூரிலும் கூட JCMல் 5 இடம் உண்டு.
JCM தலைவர் என்ற அந்தஸ்து உண்டு.
அதை முறையாகப் பயன்படுத்தி ஊழியர் நலன் காப்போம்.
NFTEஐ இன்னும் வலுவாக்குவோம்..
முறையாகச் செயல்பட்ட்டால் 2016ல் நாமே முதன்மைச்சங்கம்.
No comments:
Post a Comment