Monday 29 April 2013


பிழைத்ம்..  

ஒரு காலத்தில் நாம் செய்திகளை வலைவீசினோம்.
இன்றோ செய்திகள் நம்மீது  வலை வீசுகின்றன...

உடனுக்குடன் உலகெங்கும் 
நற்செய்திகளை விதைத்திட 
நலம் பயக்கும் சிந்தனைகளை வித்திட 
இணையதளம் போல் இணையற்றது ஏதுமில்லை.

ஆனால் 
சில வலைத்தளங்களோ 
கொலைத்தளங்களாக காட்சி அளிக்கின்றன 

அவை.. 
நட்பைக் கொலை செய்கின்றன..
தோழமையைக் கொலைசெய்கின்றன 
உண்மையைக் கொலைசெய்கின்றன 
கொள்கையைக் கொலைசெய்கின்றன 
கீழ்ப்படிதலைக் கொலைசெய்கின்றன
மொத்தத்தில் 
இயக்கத்தை கொலைசெய்கின்றன.. 

BSNL  நாம் வாழும் தளம்.. 
NFTE  நாம் வணங்கும் தலம்..

அதனதன் மாண்புக்கு ஊறு இல்லாமல்
நமது சிந்தனைகளை செய்திகளை 
வலைத்தளத்தில் விதைப்போம்..

வலைத்தளத்தை பிழைத்தளமாக்கும்
செயல்களை ஒறுப்போம்.. வேரறுப்போம்..

1 comment:

  1. இது நல்ல உணமையாகவே அனைவரும் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டுதல். நன்றி. மாலி

    ReplyDelete