Tuesday, 23 April 2013


செய்திகள்

  • CMD உடல்நலக்குறைவாக இருப்பதாலும், PGM(SR ) சுற்றுப்பயணத்தில் இருப்பதாலும் சங்க அங்கீகார உத்திரவு வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

  • FNTO சங்கம் DIRECTOR(HRD)ஐ சந்தித்து எப்படியாயினும் JCM தலமட்டக்குழுவில் FNTO சங்கத்திற்கு  ஒரு இடம் ஒதுக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.

  • FNTO சங்கத்திற்கு JCMல் ஒரு இடம் வழங்குவது சட்ட விரோதம் என TEPU சங்கம் கருத்து தெரிவித்துள்ளது.

  • 80 வயதான ஓய்வூதியர்களுக்கு 20 சத கூடுதல் ஓய்வூதியம் வழங்கப்படுகின்றது. அவ்வாறு கூடுதல் ஓய்வூதியம் பெறுவோர் குடும்ப ஓய்வூதியம் FAMILY PENSION வாங்க நேரிட்டாலும் குடும்ப ஒய்வூதியத்திலும் கூடுதலாக 20 சதம் வழங்க வேண்டும் என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

  • BSNLலில்  நேரடி விற்பனையாளர், சில்லறை விற்பனையாளர் , கிராமப்புற விநியோகிப்பாளர், DSA /Retailers /Rural Distributor பணியைப்  பெண்களுக்கு அளித்து BSNLன் விற்பனை வருவாயைப் பெருக்குவதற்கு BSNL நிர்வாகம் உத்திரவிட்டுள்ளது. இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில்  ஒவ்வொரு மாநிலமும் குறைந்தது 100 கிராமப்புற விநியோகிப்பாளரை நியமனம் செய்ய வேண்டுமெனவும் BSNL நிர்வாகம் உத்திரவிட்டுள்ளது.


No comments:

Post a Comment