ஓரடி முன்னால்...
எட்டாண்டுகளுக்குப் பின்னால் BSNL ஊழியர்களின் பிரச்சினைகளை
தலமட்டம் முதல் அகில இந்திய மட்டம் வரை
நமது சங்கம் பேசுவதற்கும் தீர்ப்பதற்குமான வழி பிறந்துள்ளது.
நடந்து முடிந்த தேர்தலில் BSNLEU சங்கம்
99380 வாக்குகளைப் பெற்று 48.54 சதம் அடைந்து முதன்மைச்சங்கமாகவும்,
நமது சங்கம் 61915 வாக்குகளைப் பெற்று
30.28 சதம் அடைந்து இரண்டாவது சங்கமாகவும்
BSNL நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட உள்ளன.
FNTO சங்கம் 14088 வாக்குகளைப் பெற்று 6.88 சதம் அடைந்துள்ளது.
இத்தனை ஏமாற்றங்களுக்குப் பின்னும்
BSNLEU சங்கம் வெற்றி பெறுவது என்பது தொழிலாளிகள் இன்னும் சிந்திக்கும் நிலையை அடையவில்லை என்பதையே காட்டுகின்றது.
ஆனால் நம்மை மேலும் சிந்திக்க வைத்துள்ளது.
எது எப்படியாயினும்
கடந்த காலங்களை விட தற்போது
அங்கீகரிக்கப்பட்ட சங்கமாகவும், கூட்டு ஆலோசனைக்குழுவில் இடம் பிடித்தும் ஊழியர்களுக்கு சேவை செய்யக்கூடிய வாய்ப்பு
நமது சங்கத்திற்கு ஊழியர்களாலும்,
புதிய விதிமுறைகளாலும் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த வாய்ப்பை உரிய முறையில் பயன்படுத்துவோம்.
ஊழியர் நலன் பேணுவோம்.
நலிவடைந்து வரும் BSNLஐ வலுப்படுத்துவோம்.
அருமைத்தோழர்கள் குப்தா,ஜெகன்,விச்சாரே,வெங்கடேசன் '
காட்டிய திசை வழியில்
என்றும் பயணிப்போம்.. தோழர்களே..
No comments:
Post a Comment