Friday, 26 April 2013


சங்க அங்கீகார உத்திரவு 

BSNLEU சங்கத்தை அங்கீகரிக்கப்பட்ட முதல் சங்கமாகவும் 
NFTE சங்கத்தை அங்கீகரிக்கப்பட்ட இரண்டாவது  சங்கமாகவும்
அறிவித்து BSNL நிர்வாகம் 25/04/2013 அன்று  உத்திரவிட்டுள்ளது.
அங்கீகார காலம் 25/04/2013 முதல் 24/04/2016 வரை மூன்று ஆண்டுகள் 

 கீழ்க்கண்ட  தொழிற்சங்க வசதிகள் இரண்டு சங்கங்களுக்கும் பொருந்தும்.


  1.  தகவல் பலகை 
  2. தொலைபேசி வசதி 
  3. சங்கப்பொறுப்பாளர்களுக்கான  மாற்றல் (Immunity Transfer )
  4. கூட்டாலோசனைக்குழுவில் பிரதிநிதித்துவம் - JCM 
  5. முறைப்படுத்தப்பட்ட  கூட்டங்கள்  Formal Meetings 
  6. சிறப்பு சிறு விடுப்பு - SPECIAL CASUAL LEAVE
  7. சந்தாப்பிடித்தம் 
  8. நிர்வாக உத்திரவுகளின் நகல்களை அளித்தல்.


2 சதத்திற்கு மேல் வாக்குகள் பெற்ற 
FNTO  மற்றும் BTEU  BSNL சங்கங்களுக்கு 
கீழ்க்கண்ட குறைந்த பட்ச தொழிற்சங்க வசதிகள் அளிக்கப்படும் 
எனவும் BSNL நிர்வாகம் உத்திரவிட்டுள்ளது. 

1.  தகவல் பலகை
2. தொலைபேசி வசதி
3. சந்தாப்பிடித்தம்
4. நிர்வாக நலன் சம்பந்தமாக கடிதம் கொடுத்தல். 


குறிப்பு :
JCM உறுப்பினர் எண்ணிக்கையைத்தவிர 
NFTE மற்றும் BSNLEU சங்கங்களுக்கு இடையே 
தொழிற்சங்க வசதிகளில் வித்தியாசமில்லை.
 ஆயினும் JCM  தலமட்டக்குழுவில் NFTE  மற்றும் BSNLEU  சங்கங்களுக்கு எத்தனை இடம் ஒதுக்கப்படுகின்றது என்ற விவரம் அறிவிக்கப்படவில்லை.

No comments:

Post a Comment