BSNL - MTNL
சீரமைப்புக்குழு
சென்ற மாதம் இலாக்கா அமைச்சர் கபில் சிபல் நலிவடைந்து நோயுற்று வரும் BSNL மற்றும் MTNL நிறுவனங்களை நிதி நெருக்கடியில் இருந்து மீட்கவும் அவற்றை சீரமைப்பது பற்றியும்
பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார்
அதன் அடிப்படையில் பிரதமர் நலிவுற்று வரும் BSNL - MTNL நிறுவனங்களின் நிலை பற்றி ஆராயவும் அவற்றிற்கு புத்துணர்ச்சி அளிக்கவும் 7 பேர் கொண்ட குழுவை அமைத்து உத்திரவிட்டுள்ளார்.
3 மாதங்களுக்குள் குழு அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.
- நிதி மந்திரி சிதம்பரம்
- தொலைத்தொடர்பு மந்திரி கபில்சிபல்
- வர்த்தக மந்திரி ஆனந்த் ஷர்மா
- சட்ட மந்திரி அஷ்வின் குமார்
- தகவல் மற்றும் ஒலிபரப்பு மந்திரி மணிஷ் திவாரி
- மாநிலங்களுக்கான இணை அமைச்சர் நாராயணசாமி
- திட்டக்குழு துணைத்தலைவர் மாண்டேக்சிங் அலுவாலியா
ஆகியோர் குழு உறுப்பினர்கள் ஆவர்.
வழக்கமான குழு அறிக்கையைப் போல் அல்லாமல்
தேசத்தின் மிகப்பெரும் பொதுத்துறைகளை காக்க உண்மையான முயற்சி அரசால் மேற்கொள்ளப்பட்டால் BSNL மற்றும் MTNL நலிவிலிருந்து மீண்டு எழும்..
மீண்டும் எழும் என்பதில் ஐயமில்லை.
No comments:
Post a Comment