Monday, 1 April 2013


அபி லாசை 

என் பெயர் M. சோணகிரி TM. 
நீங்கள் நினைப்பது சரிதான்.  
நான் M சங்க உறுப்பினர்தான்.  
வெற்றி பெற்ற சங்கத்தோட இருப்பது எவ்வளவு வசதி தெரியுமா?
அதெல்லாம்  உங்களுக்கு புரியாது.  

எங்கள் சங்கத்தலைவர் ஊர்சுற்றி உலகநாதன் தொலைபேசியில் அழைத்தார்.
"தோழர்,  அகில இந்திய பொதுச்செயலர் மதுரை வருகின்றார்.  
காணக்கிடைக்காத காட்சி . நீங்கள் உடனே வரவேண்டும்"  என்றார். 
"கையில் காசில்லையே"  என்றேன். 
"அதெல்லாம் நாங்கள் பார்த்துக்கொள்கின்றோம்.
மதுரையில் சேவையை மேம்படுத்த போகின்றோம் . 
எனவே உங்களுக்கு சிறப்பு விடுப்பு உண்டு, கிளம்புங்கள்  " என்றார். 

ஒரு நாள்   பொழுது போனால் சரி என்று கிளம்பினேன். 
போகும் போது மனைவி சொன்னாள்.
"ஏங்க, உங்க தலைவரிடம் இந்த வருஷமாவது போனஸ் கிடைக்குமா?
என கேட்டு வாங்க,  பக்கத்து வீட்டு தபால்காரன் பொண்டாட்டி படு கேவலமா என்னைப்  பார்க்கிறாள். 
"அப்புறம் நம்ம மகளுக்கு திருமணம் செய்ய வேண்டும். அதுக்கு முன்னாலே அவளை எங்கேயாவது சுற்றுலா  கூட்டிப்  போக வேண்டும். 
LTC எப்போ  வரும்? என்று அதையும் கேளுங்கள். 
ஏங்க! BSNL  ரொம்ப நட்டத்திலே இருக்குனு பத்திரிகையில் படிச்சேன் . 
அதிலே இருந்து எனக்கு  PRESSURE  ஏறிப்போச்சு.
மாத்திரை செலவுக்கு காசு இல்லை. 
மெடிக்கல் பணம் எப்போ கிடைக்கும்?
அதையும் கொஞ்சம் கேளுங்கள்" என்றாள்.

ஏது?  இவள்  M குடும்ப உறுப்பினரா?  NFTE  உறுப்பினரா? 
இத்தனை கேள்வி கேட்கிறாளே?  என நினைத்துக்கொண்டு 
"அதுக்குதானே போறேன்,  கட்டாயம் கேட்டு வாரேன்"
என்று  சொல்லி கிளம்பினேன். 
மதுரையில் கட் அவுட்கள் கண்ணைப் பறித்தன.
நம் தலைவர்கள் அரசியலுக்கு ஏத்த ஆளுகதான்.
தலைவர் அபி பேச ஆரம்பித்தார். 
நம்மிடம் ஒரு லட்சத்து பத்தாயிரம்  உறுப்பினருக்கான  
சந்தா வருகின்றது. எனவே வரும் தேர்தலில் 
51 சதம் பெற்று ஒரே  சங்க  ஆட்சி முறையைக் கொண்டு வருவோம்.  
ஆனால் நிர்வாகம் நமது பந்தாவை பார்த்து இப்போது  பயப்படுவதில்லை . 
நமது சந்தாவைப் பார்த்துத்தான் பயப்படுகின்றது. 
எனவே 2 லட்சம் சந்தாவையும் நாம் பெற வேண்டும்.
தற்போதைய மாதம்  20 லட்ச ரூபாய்  சந்தாவில் சங்கம் நடத்துவது மிகவும் சிரமம். 
எனவே புரட்சிகர காரியங்களை நாம் ஆற்ற வேண்டுமானால்
மாதம் 40 லட்சம் ரூபாய்   சந்தா வேண்டும். எனவே அதற்கான காரியங்களை நீங்கள் ஆற்ற வேண்டும்"  என்று முழங்கினார்.

எனக்கோ கிளம்பும்போது என் மனைவி முனங்கியது மட்டுமே மனதில் நின்றது.  எனவே துணிந்து எழுந்து
"தோழர்    போனஸ், மெடிக்கல்,LTC என்னாச்சு?" என்று கேட்டேன். 

எனது கேள்வியை ஒட்டி சலசலப்பு உண்டானது. 
எல்லா சம்சாரங்களும் எதாவது சொல்லி அனுப்பி இருப்பார்கள் போலும். 
உடனே  உட்காருங்க! உட்காருங்க! என்று சத்தமிட்டார்கள். 
அபி அதன்பின் ஆவேசமாக சொன்னார். 
"உலகிலேயே அதிக சம்பளம் உங்களுக்கு நாங்கள் போராடி வாங்கி கொடுத்துள்ளோம். அற்ப விஷயங்களுக்காக கேள்வி கேட்காதீர்கள். 
நமது இலட்சியம் 2லட்சம்  சந்தா... 
அதற்கான வேலையைப்பாருங்கள், புரட்சி ஓங்குக!!! 
என்று கூறி கூட்டத்தை அவசரமாக முடித்தார்கள்.  

ஊழியரது  அபிலாசைகளைக் கேட்கப்போனால் 
அபி அவரது அபிலாசைகளைக் கூறுகின்றார்.
இதுதானா நாம் கண்ட தொழிற்சங்கப்  பாரம்பரியம்?

மனம் நொந்து நடந்தேன். 
வழியில் இலங்கைப்பிரச்சினைக்காக 
CPI தோழர்களின்  பொதுக்கூட்டம் நடந்து  கொண்டிருந்தது.


செல்போன் மணி அடித்தது. 
அது சிலேத்தும நாடி போல்  ஜீவன் இல்லாமல்
விட்டு விட்டு அடித்தது. 
எனது மனைவியின்  அழைப்பாக இருக்கும்.


ஆனால்.. 
பொதுக்கூட்டம்  நடத்திய தோழர்களின்  இணைந்த கரங்களில் 
எழுந்த ஒலி உற்சாகமாய்க்  கேட்டுக்கொண்டிருந்தது.
இரண்டும்  ஏப்ரல் 16ஐ எனக்கு  நினைவூட்டியது.


மனம் தெளிந்தது.


தொழிலாளியின் அபிலாசை நிறைவேற வேண்டுமானால் 
அபிகளின் ஆசை நிராசையாக வேண்டும் என்ற தெளிவு  பிறந்தது.
அதற்கான பணியினை முடிவினை ஊழியர்கள் ஏப்ரல் 16ல்
கட்டாயம்  மேற்கொள்ள வேண்டும் என்ற வைராக்கியமும் பிறந்தது.

நிச்சயம் உங்களுக்கு நான் உறுதி கூறுகின்றேன்.
எட்டாண்டு  காலமாக ஏமாந்த நான் 
என் பெயரைப்போல் 
இம்முறையும் ஏமாற மாட்டேன்.
இனி நான் 
சோணகிரி அல்ல..  மான கிரி... 
இது சத்தியம்...

2 comments: