Thursday, 30 May 2013

பணி நிறைவு  
வாழ்த்துக்கள் 

இன்று 31/05/2013 காரைக்குடி மாவட்டத்தில் 
பணி நிறைவு பெறும் தோழர்களின் 
பணி நிறைவுக்காலம் சிறப்புடன் 
விளங்க வாழ்த்துகின்றோம்.

M. கதிரேசன் 
STS/காரைக்குடி 

S. சிவராமன் 
SDE/காரைக்குடி

G.சுப்புராஜ் 
TM/கமுதி 

A. அற்புதஜெயராஜ் 
TM /தேவகோட்டை

S . யோகேஸ்வரன் 
SS/காரைக்குடி 

RN.திருச்செல்வம் 
TTA/காரைக்குடி 

 A. மாரியப்பன் 
TM /மானாமதுரை 

V .சுப்பிரமணியன் 
AGM/காரைக்குடி 

 R. சுப்பிரமணியன் 
SR. TOA(T )/திருவாடானை  

இயற்கை ஓய்வே இத்தனை இருக்கையில் 

இனி விருப்ப ஓய்வு இங்கே எதற்கு?

Tuesday, 28 May 2013

WORKS COMMITTEE
பணிக்குழு

WORKS COMMITTEE உறுப்பினர்கள் நியமன முறையை சீரமைத்து 
BSNL  நிர்வாகம் உத்திரவிட்டுள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட NFTE மற்றும் BSNLEU சங்கங்களுக்கு 
WORKS COMMITTEEயில் தலா 3 இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.
WORKS COMMITTEE உறுப்பினர்கள் பணியில் 
உள்ளவர்களாக இருக்க வேண்டும். 
அந்தந்த சங்கங்களின் மாவட்டசெயலர்கள் 
உறுப்பினர்களை நியமனம் செய்வர்.
நியமன காலம் 3 ஆண்டுகள்.

மாவட்ட மட்டங்களில் 15 சத வாக்குகள் பெற்ற அங்கீகரிக்கப்படாத சங்கங்களுக்கு  2 இடங்கள் முன்பு ஒதுக்கப்பட்டன.  
தற்போது அந்த நடைமுறை ரத்து செய்யப்படுகின்றது.

இதனால் FNTO சங்கம் WORKS COMMITTEEயில் 
இனி இடம் பெற இயலாது.

BSNL வளர்ச்சியுற, வளர்ச்சி பெற பணிக்குழுவில் 
நம் பங்கைப் பாங்குடன் செலுத்துவோம்.

Monday, 27 May 2013

செய்திகள் 

BSNL  ஊழியர்கள்  ஈரல் மாற்று அறுவை சிகிச்சை 
LIVER TRANSPLANT SURGERY  மேற்கொள்வதற்கு BSNL  நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. சம்பந்தப்பட்ட முதன்மைப்பொது மேலாளரின் அனுமதி பெற்று சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

தொலை பேசி மூலம் வணிகம் செய்து வாடிக்கையாளர்களை தொல்லைப்படுத்தும் TELEMARKETERS மீது நடவடிக்கை எடுக்க TRAI தொலைபேசி ஒழுங்கு முறை ஆணையம் முடிவு செய்துள்ளது.

இரங்கல் 
தோழர். கடலூர். 
B. இராஜேந்திரன் 

அவர்கள் காலமானார் 
என்ற  செய்தி 
தானே புயல் போல் நம் இதயம் தாக்கியது.

மஸ்தூர் தோழர்களின் வாழ்வு மலரவும் 
ஒப்பந்த ஊழியர்களின் வாழ்வு உயரவும் 
NFTE செங்கொடி உயரப்பறக்கவும் 
தொடர்ந்து பாடுபட்டவர்..
தோழர். கடலூர். இராஜேந்திரன்...

கணக்கும் நெஞ்சமுடன்..
கசியும் விழிகளுடன்.. 
நமது அஞ்சலியை உரித்தாக்குகின்றோம்...

Sunday, 26 May 2013

BSNL - MTNL 
ஓய்வூதிய அறக்கட்டளை 
PENSION TRUST 

BSNL  மற்றும்  MTNL நிறுவனங்களில் பணியாற்றும்  ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு ஓய்வூதியம் அளிப்பதற்காக PENSION TRUST 
ஓய்வூதிய அறக்கட்டளை ஆரம்பிக்கும் எண்ணம் அரசுக்கு உண்டா?
 என நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது.

                           BSNL ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு ஓய்வூதியம் 
                     1972 ஓய்வூதிய விதி பிரிவு 37-Aன்படி அளிக்கப்படுவதாகவும்..

MTNL ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு ஓய்வூதியம் அளிப்பதற்கு தனி ய்வூதிய அறக்கட்டளை ஆரம்பிப்பது பற்றி அரசு  பரிசீலித்து வருவதாகவும், இது சம்பந்தமாக மத்திய அமைச்சரவையே  இறுதி முடிவு எடுக்க வேண்டும்
எனவும் நமது இலாக்கா இணை அமைச்சர் 
திரு. மிலிந்த் தியோரா பதில் அளித்துள்ளார்.

Saturday, 25 May 2013


T M S 
மூன்றெழுத்தில் மூச்சிருக்கும் ..
முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும் 




பாட்டாளிகளை பாட்டால் பரவசப்படுத்தி 
உழைப்போர் உள்ளத்திற்கு 
ஒத்தடம் கொடுத்த ஒப்பற்ற பாடகர் 

TM . சவுந்திரராஜன்

மறைவிற்கு  நமது அஞ்சலி..
---------------------------------------------------------------------------------
குழலினிது.. யாழினிது.. என்பர் 
TMS குரல் கேளாதோர்.. 
---------------------------------------------------------------------------------


Friday, 24 May 2013


JCM
எனக்கும் 4...  உனக்கும் 4....

JCMல் NFTEக்கு 5 இடங்களும் BSNLEUவிற்கு 9 இடங்களும் 
என நிர்வாகம் உத்திரவிட்டது அனைவரும் அறிந்ததே. 

NFTEஐ விட 4 இடங்கள் எங்களுக்கு கூடுதல். எனவே JCMல் நாங்கள் வைத்ததுதான் சட்டம். "NFTEன் குடுமி எங்கள் கையில்" என்றெல்லாம் 
எழுதி   BSNLEU தோழர்கள் பல இடங்களில் 
பீற்றினார்கள்...  பிதற்றினார்கள்...

ஆனால் உண்மையில் NFTEக்கும்,  BSNLEUவிற்கும் JCMல் நான்கு இடங்கள் மட்டுமே என்பது சிந்தித்தால் சிறிது புரியும்.

 கூட்டணி சங்கமான SNATTAவிற்கு  ஓரிடம் ஒதுக்கியது போக  
NFTEக்கு 4 இடங்களே மிஞ்சுகின்றது.

கூட்டணி சங்கங்களான TEPU/BSNLMS/SEWABSNL/NFTEBE /FNTOBEA ஆகிய 5 சங்கங்களுக்கும் தலா ஒரு இடம் ஒதுக்கியது போக 
BSNLEUவிற்கு  மிஞ்சுவது 4 இடங்களே..
ஆக.. JCMல் உனக்கும் 4.... எனக்கும் 4...  


இலவச ROAMING 

தொலைத்தொடர்புக்கொள்கை 2012ன்படி 
2013 அக்டோபருக்குள் 
 நாடு   முழுவதும் இலவச ROAMING வசதி அளிக்கப்படும் 
என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் TRAI 
இலவச ROAMING சம்பந்தமாக  தனது பணியினை முடித்து பரிந்துரைகளை இன்னும் இரு வாரங்களுக்குள் அரசிடம் சமர்ப்பிக்கும் 
என்று கூறப்பட்டுள்ளது.

இலவச ROAMING அளிப்பதால் ஏறத்தாழ 15000 கோடி நட்டம் ஏற்படலாம் என்றும் அதனால் முழுவதும் இலவசமாக இல்லாமல்  மிகக்குறைந்த கட்டணம் நிர்ணயிக்கப்படலாம் என்றும்  செய்திகள் உலா வருகின்றன.

இலவசத்தால் மக்களை வசப்படுத்தும் அரசு 
இலவச ROAMING மூலம் வாடிக்கையாளர்களை  
பரவசப்படுத்தினால் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.
இலவசங்கள்தானே..
இந்திய தேசத்தின் தேர்தல் இலக்கு..

Tuesday, 21 May 2013


JCM இட ஒதுக்கீடு 


14 உறுப்பினர்கள் அடங்கிய JCM குழுவில் 
NFTE சங்கத்திற்கு 5 இடங்களும் 
BSNLEU சங்கத்திற்கு 9 இடங்களும்  ஒதுக்கப்படுவதாக 
BSNL நிர்வாகம் 21/05/2013 அன்று உத்திரவிட்டுள்ளது.

இதன் மூலம் FNTO சங்கத்தின் 
ஒரு சீட்டு ஆசை முடிவுக்கு வந்துள்ளது.

கூட்டாலோசனைக்குழு என்ற அமைப்பின் மூலம் 
ஊழியர்களின் பிரச்சினைகளை உரிய முறையில், 
உயரிய முறையில் 
தீர்ப்பதற்குப்  பாடுபடுவோம்.


வாழ்க வளமுடன் 



மாநிலச்செயலர் 
அருமைத்தோழர். பட்டாபி - தோழியர். ஹேமலதா 
தம்பதியரின் அருமைப்புதல்வன் 

ப. நிர்மல் ராம் 

திரு.வெங்கட்ராமன் - திருமதி.உஷா 
ஆகியோரின் அருமைப்புதல்வி 

வெ.ராதிகா 

ஆகியோரின் 
மணவிழா வரவேற்பு 22/05/2013 அன்றும் 
மணவிழா 23/05/2013 அன்றும் 
சென்னை குரோம்பேட்டை 
ஆனந்தா திருமண மாளிகையில் 
வெகு ஆனந்தமுடன் நடைபெறவுள்ளது.

நமது உள்ளம் பூரிக்கும்..
நல்வாழ்த்துக்களை 
உரித்தாக்குகின்றோம்.

Monday, 20 May 2013


சங்க அலுவலகம் 

அங்கீகரிக்கப்பட்ட  NFTE  
மற்றும்  BSNLEU  சங்கங்களுக்கு 
தொழிற்சங்க வசதிகளில் ஒன்றாக 
சங்க அலுவலகமும் - OFFICE ACCOMODATION 
அளிக்கப்படும்  என BSNL நிர்வாகம் 
20/05/2013 அன்று உத்திரவிட்டுள்ளது.

16/05/2013 அன்று நமது சங்கத்தலைவர்கள் BSNL நிர்வாகத்தை சந்தித்து மாநிலம் மற்றும்  மாவட்ட மட்டங்களில் நமது சங்கத்திற்கு 
சங்க அலுவலகம் ஒதுக்குமாறு கோரிக்கை விடுத்தனர். 

BSNLEU சங்கமும் NFTE சங்கத்திற்கு சங்க அலுவலக வசதி அளிக்க வேண்டும் என நிர்வாகத்திற்கு கடிதம் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சங்க அலுவலகம் ஊழியர்களின் 
சந்தோஷ அலுவலகமாக விளங்கட்டும்..

Saturday, 18 May 2013


JAO OFFICIATING உத்திரவு 

 தமிழகத்தில் JAO தேர்வில் வெற்றி பெற்ற  
49 தோழர்களுக்கு 
OFFICIATING  உத்திரவு வெளியிடப்பட்டுள்ளது.

மதுரை,காரைக்குடி போன்ற  JAO  காலியிடங்கள் இல்லாத ஊர்களில் இருந்து மட்டுமே வெளியிடங்களுக்கு மாற்றல் இடப்பட்டுள்ளது.

JAO  பட்டியல் 

1. GURUMOORTHY B. KMB KMB
2 .BALAMURUGAN P. KMB KMB 
3 .DHANALAKSHMI L CBT CBT 
4 .MANIKANDAN S. VGR VGR 
5. KOLANCHI AYYAPPAN N.  KMB KMB 
6 .PUSHPALATHA S, VGR VGR 
7. RAMANI A. MA NGC 
8. MOORTHY. P.S TNJTNJ 
9. KADIRAVAN S. TNJ TNJ 
10. SAVITHRI. S CBT CBT
11 .RAIESWARI A. SLM SLM 
12. IAYARAMAN R. KMB  KMB 
13. MAYAKRISHNAN S TNJ TNJ 
14. LATHA T.N.TNI TNJ 
15 .VIJAYA R. TNJ TNI 
16.  RAJENDRAN S. VGR VGR 
17. ARUNACHALAM N. TVL  TVI- 
18 .SANTHI G. TNJ TNJ 
19 .MUTHUPANDI K. MA CBT 
20 .RADHAKRISHNAN, S TR  TR 
21. RAJESWARI KUPPAN VLR VLR 
22 .A. SADIK BASHA CDL CDL 
23. AFSARI K. ZAMAN VLR VLR 
24 PAUL ROBERT CONCON 
25 MUNIYASAMY P, SLM SLM 
26 NAGALAKSHMIV. TR TR 
27. THANGAVELU G. MA VGR
28 NEDUMARAN P. CDL  CDL 
29 KALPANA KMB KMB 
30 RAGHU R.MA CBT 
31. NALINI K. TNJ TNJ 
32 SEKAR R, KMBKMB 
33 MANGALA R, TNJ KMB 
34 SARAVANAN S. KMB KMB 
35 SOMASUNDARAM VLR VLR 
35 ANURADHA S. CBT CBT 
37 SARAVANAN P. VLR VLR 
38 KANAKARAJ S. CIVIL ERD 
39 ARULJOTHI S. ERD ERD 
40 KANAGARAJ .S. TT TT 
41. L SHANTHI ANANDAN TR TR 
42 SUNDARAMURTHY R TNJ KMB 
43 ARANGARAJAN S TNJ KMB 
44 RAJAN M.A. VGR ERD 
45 DURAIRAJ R. TNJ KMB
46 USHARANI G TR TVL 
47 KANAGARAJ. K KKD TVL 
48 LAKSHMI R. CBT CBT
49 KRISHNASAMY V. II TNJ  KMB 


TM  ஆளெடுப்பு  - 2012

தமிழகத்தில் 2012ம் ஆண்டிற்கான   
TM தேர்வுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

காலியிடங்கள் 
OC - 648,   SC -104,  உடல் ஊனமுற்றோர் - 37

தகுதி:  

10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற  
TMAN / GRD / RM / TSM ஆகியோர்
                                
வயது:   
OC - 40  OBC -43  SC/ST  - 45
                ஜூலை 1 அன்று வயது கணக்கிடப்படும்.

தேர்வு நடைபெறும் நாள்

11/08/2013 - 10 மணி முதல் 12.30 வரை 

விண்ணப்பிக்க  கடைசி நாள்: 15/06/2013

தேர்வு முறை :  

ஒரேயொரு தேர்வுத்தாள் - 100  மதிப்பெண்கள்
பொது அறிவியல் மற்றும் கணிதம் -50 மதிப்பெண்கள் 
   இலாக்கா நடைமுறைகள் -  50 மதிப்பெண்கள்.
                          
OBJECTIVE முறை - CHOICE உண்டு .
    தவறான பதிலுக்கு 25% மதிப்பெண் கழிக்கப்படும்.

OC  பிரிவினர் ஒவ்வொரு பகுதியிலும் 
30 மதிப்பெண்களும் 
       கூட்டாக 37 மதிப்பெண்களும் பெற வேண்டும்.
SC/ST பிரிவினர் ஒவ்வொரு பகுதியிலும் 
20 மதிப்பெண்களும் 
   கூட்டாக 30 மதிப்பெண்களும் பெற வேண்டும்.
                                                      
மதுரை மற்றும் சேலம்  மாவட்டங்களில் 
TM காலியிடங்கள் இல்லை.
அங்கு உள்ள  தோழர்கள் அருகில் உள்ள மாவட்டங்களுக்கான காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க அனுமதி கோரி 
மாநிலச்சங்கம் நிர்வாகத்தை அணுகியுள்ளது. 

சாதகமான உத்திரவு வரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.


Friday, 17 May 2013


ளைர் திவிழா 

காரைக்குடி சங்க அலுவலகத்தில் 
இளைஞர் தின விழா சிறப்புடன் நடைபெற்றது. 

தோழியர். கார்த்திகா தலைமையேற்க 
தோழர். பூபதி சிறப்புரையாற்ற 
தோழர். சுபேதார் அலிகான் முன்னிலையில் 

தோழர் ஜெகனின் மறக்க இயலா மாண்புகள் 
மனங்கசிய நமது தோழர்களால் எடுத்துரைக்கப்பட்டது.

ஜெகன் புகழ் பாடுவோம்..
ஜெகம் உள்ளளவும்..


மே - 17 - இளைஞர் தினம் 
தோழர். ஜெகன் பிறந்த தினம் 

தொழிற்சங்க நடைமுறையில் 
புதிய இலக்கணம் படைத்த 
ஒரு பிரம்மாவின் பிறந்த நாள் இன்று..

இலக்கணம் மாறாமல் இயக்கம் வளர்த்து 
இயக்கத்தை இலக்கியமாக செதுக்கிய 
ஒரு சிற்பியின் பிறந்த நாள் இன்று..


இலக்கணத்திற்கு இலக்கணமாகத் திகழ்ந்த 
இலட்சியத்தலைவனின் பிறந்த நாளில் 
இதயம் தொட்டு உறுதி ஏற்போம்.. தோழர்களே 

எல்லை மீறும் இலக்கணத்தை 
எக்கணமும் எடுத்தெறிவோம்..

தொல்லை தரும்  விமர்சனங்களை 
இக்கணமே துடைத்தெறிவோம் 

வாய் தவறி சொல்லிவிட்டால் 
"வழூ"உவில் அடங்கி விடும் 

வழி தவறி சென்று விட்டால் 
வழுக்கலில் வீழ்த்திவிடும்..

வேதனை வலிகளை மறப்போம்..
சாதனை வழிகளைக் காண்போம்..

தனிவழி தவிர்ப்போம் 
தலைவலி தடுப்போம் 

ஒன்றாய் நிற்போம் 
ஒரு வழி செல்வோம் 

தனக்கென வாழா தனிப்பிறவிக்கு..
நமக்கென வாழ்ந்த நல்லமனிதனுக்கு..
நாம் செய்யும் கைமாறு ஒற்றுமை தவிர வேறென்ன 
  
மாறு இல்லா மனங்களோடு கரம் கோர்ப்போம்..
ஊறு இல்லா ஒற்றுமை படைப்போம்..

ஒற்றுமையாய்  சந்திப்போம்..
ஒற்றுமை பற்றி சிந்திப்போம்..

வாழ்த்துக்கள்.. தோழர்களே..
ந. நாகேஸ்வரன் - மாவட்டத்தலைவர் 
காரைக்குடி மாவட்டச்சங்கம் 

Monday, 13 May 2013


கூடுவோம்..  குடந்தையில் 



தன்னிகரற்ற சங்கம் 
தமிழகத்தில்.. NFTE என்று..
தன்மானத்தோடு வாக்களித்த 
தோழர்களுக்கு 
செவ்வணக்கம்  செலுத்த.. மே..14ல்  
கூடுவோம் குடந்தையில்..

மன பேதங்களை துடைப்போம் 
புது  வேதங்களைப்  படைப்போம்..

வாரீர்.. தோழர்களே..

Friday, 10 May 2013


கூடாத கூட்டம்.. 

10/05/2013 அன்று கூட இருந்த BSNL சீரமைப்புக்குழுக் கூட்டம் 
தள்ளி வைக்கப்பட்டுள்ளது. 

குழுவிற்கு தலைமை தாங்கவேண்டிய எங்கள் ஊர் MP - 
இந்திய நாட்டு நிதி மந்திரி வழக்கம்போல் 
சனி,ஞாயிறுகளில் ஊர்ப்பக்கம் வந்து விட்டார்.

 குழுவின் மற்றொரு உறுப்பினரான சட்ட அமைச்சர் சட்ட சிக்கலில் சிக்கி, உச்சக்கட்டமாக  உச்சநீதிமன்றத்தின் கண்டனத்திற்கு ஆளாகி 
தனது பதவியையே நேற்று துறந்து விட்டார்.
இனி குழு எப்போது கூடும் என்பது ஆராய்ச்சிக்குட்பட்டது.

நமது கவலை என்னவென்றால்..
BSNLஐ சீரமைப்பது ஒருபுறம் இருக்கட்டும்...
முதலில் மந்திரிசபையை சீரமைத்தால் 
நமக்கும் நல்லது... நாட்டுக்கும் நல்லது ..



TTA தேர்வு முடிவுகள் 

நீண்ட நாட்களாக ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட 
TTA தேர்வு முடிவுகள்   வெளியிடப்பட்டுள்ளன 
மொத்தம்  62 தோழர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 


மதுரை, ஈரோடு,சேலம்  ஆகிய மாவட்டங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளதால் தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை.

காரைக்குடியில் 11 தோழர்களும் 

அதிகபட்சமாக திருச்சியில் 16 தோழர்களும் 
கோவையில் 2, கடலூர் 6, தர்மபுரி 3, கும்பகோணம் 4, பாண்டிச்சேரி 3,  திருநெல்வேலி 3, வேலூர் 9, மற்றும் விருதுநகரில்  5  தோழர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர் .


தேர்ச்சி பெற்றோர் பட்டியல் 
COIMBATORE
  1. SWACKIN.I 199202238 TM OC
  2. SHANMUGASUNDARM.R  SC 
CUDDALORE SSA 
  1. SRINATH.R. 200400349 TOA(G) OC
  2. BHUVANESWARI S 199900170 Sr.TOA(TG)
  3. NANDAKUMAR R 199201558 TM OC
  4. SENTHAMARAI. P. 199201833 TM OC 
  5. SAKTHIMANALAN T 198201601 TM OC 
  6. ELANGOVAN V 198900993 TM OC 
DHARMAPURI SSA 
  1. YAGGNANARAYANAN.S 199400213 TM OC
  2. JAYAVEL A 199000379 TM OC 
  3. SAKTHIVEL K 200400211 Sr TOA
KARAIKUDI SSA 
  1. Rathinasamy .S 199200437 TM SC
  2. AnnamalaLSP 199500976 TM OC
  3. Chrlstopher.M 200400277 TOA(G) OC
  4. Karunakaran.R 199500967 TM OC
  5. Ramesh.T 199500968 TM OC
  6. Kavltha.L 200400123 TOA(G) OC
  7. Krlshnan.C. 200400184 TOA(G) OC
  8. Arumuaam.S. 199401247 TM OC
  9. Rajamohan.B 199500603 TM OC
  10. Palanlchamv. V 199401241 TM OC
  11. Alexander.R 199800298 TM OC
KUMBAKONAM SSA
  1. SUBRAMANIAN K 199300702 T.M OC 
  2. VASUDEVAN K 199200989 T.M OC 
  3.  VENKATESAN S 199000286 T.M OC 
  4. BABU R 199500668 T.M OC 
 PONDICHERRY SSA
  1. Subramani A.D 200401452 Sr TOA(G) OC
  2. Pasupathy S 199408439 TM OC
  3. Vltavareqhavan S 200401478 Sr TOA(G) OC 
TRICHY SSA
  1. GOPINATH. R 200401771 TOA(G) OC
  2. UMA. J 200000031 Sr.TOA(G) OC
  3. SURESH. D 200402326 TOA(G) SC
  4. KULANDAIVELU. R 198600443 TM , OC
  5. RAJA. K 198100816 TM OC
  6. DHANRAJ SAMVEL. A 199400696 TM OC
  7. RAVI. M 199200471 TM OC
  8. LOURDURAJ. M 199200558 TM OC
  9. RAJAPPA.K 199201000 TM OC
  10. BHASKAR. M 199000161 TM OC
  11. MAHENDRAN. M 199700357 Sr.TOA(TG) OC
  12. STANLEYALEXIS. F 200000122 Sr.TOA(G) OC
  13. MUTHUKUMAR. K 200401385 Sr.TOA(G) OC
  14. PALANIYANDI. V 198301152 TM OC
  15. NATARAJAN. P 199400177 TM OC
  16. SHANMUGAM. . 199400316 TM OC
TIRUNELVELI SSA
  1. A.Alagunatchiyar 200000214 Sr.TOA(G) OC
  2. D.Christopher Rajadurai 199400415 TM OC..
  3. P.Manikandan 200400391 Sr.TOA(G) SC
VELLORE SSA
  1. NIZAMUDEEN K 198901228 SR.TOA   OC
  2. BALU K  200400200 TOA  OC
  3. NAGARAJAN P 198301617 TM OC
  4. SUMATHI G  200304232 TOA(G) OC
  5. ASJADH 200000041 ISr. TOA (T) OC
  6. PARASURAMAN S 199200502  TM OC
  7. RAJENDIRAN N 199700064 Sr. TOA (G) OC
  8. SAROJA B 200500008 ISr. TOA (G) OC
  9. DHANARAJ N  199201390 TM OC
VIRUDHUNAGAR SSA
  1. SETHURAM.K.N 199400495 TM OC
  2. RAJALETCHUMI.C 200500011 STOAG SC
  3. SUNDARARAJ . C.S 199100619 TM SC
  4. MALATHI.R 200400011 TOAG SC
  5. VELPANDIARAJAN. M 200400012 STOA SC 
அனைவருக்கும் வாழ்த்துக்கள்..

Thursday, 9 May 2013


நண்ணிய பெருங்கலைகள் 

இன்று  நடைபெற உள்ள BSNL/ MTNL சீரமைப்புக்குழு கூட்டம் 
CABLE TV  மற்றும் ஒலிபரப்பு ஆகியவற்றில் 
BSNL மற்றும் MTNL நிறுவனங்களை ஈடுபடுத்துவது பற்றி 
பரிசீலிக்கும்  என கூறப்பட்டுள்ளது.


நண்ணிய பெருங்கலைகள் 
நாலாயிரங்கோடி நயந்து நின்ற நாடு 
என பாரதி பாடினான்..

தொலைத்தொடர்பில் நாம் தோள்  தட்டி வாழ்ந்தது ஒரு காலம்  
இன்று சீர்கெட்டு சிதிலமுற்ற நிலையில் உள்ளோம்..
இந்நிலை மாற்றிட நண்ணிய பெருங்கலைகளில் 
நாமும் ஈடுபட வேண்டியது காலத்தின் கட்டாயம் போலும்..


காலவரையற்ற  வேலை நிறுத்தம் 

மறுபடியும் முதலில் இருந்து..

09/05/2013 அன்று  கூடிய NFTE,  BSNLEU,  FNTO,  BSNLMS,  BSNLWRU,  SNEA, மற்றும் AIBSNLEA  சங்கங்கள்  கலந்து கொண்ட  அனைத்து தொழிற்சங்க கூட்டத்தில் 78.2 சத IDA இணைப்பை உடனடியாக வழங்கக்கோரி 
கீழ்க்கண்ட போராட்ட முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

22/05/2013 - நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் 

05/06/2013 - நாடு தழுவிய தர்ணா 

12/06/2013 முதல் கால வரையற்ற வேலை நிறுத்தம்

தோழர்களே.. தயாராவீர் ...

Wednesday, 8 May 2013


VRS  என்னும் வேதாளம் 

10/05/2013 அன்று நடக்க இருக்கும் BSNL/MTNL  சீரமைப்புக்குழு கூட்டத்தில் 
தனது பரிந்துரைகளாக DOT  சிலவற்றைக் கூற உள்ளது.

அவற்றில்..
மத்திய பொதுத்துறைகள் மற்றும் அரசின் நிதி உதவி பெறும் அமைப்புக்கள்
BSNL/MTNL  சேவையைப் பயன்படுத்த வேண்டும்.

BSNL/MTNL  சேவையைப் பயன்படுத்தும் ஊழியர்களுக்கு மட்டுமே
பொதுத்துறைகள்  தொலைபேசி ஈட்டுப்படி வழங்க வேண்டும்.

BSNL/MTNL  நிறுவனங்கள் அரசு ஊழியர்களைக் கவரும் விதத்தில்
புதிய திட்டங்களை தயாரிக்க வேண்டும்.

என்று பல பரிந்துரைகளை தயாரித்துள்ள DOT..
  
ஊழியர் சம்பளம் BSNLலில் வருமானத்தில் 49 சதமாகவும், 
MTNLலில் 103 சதமாகவும்  இருப்பதால் 
BSNLலில் ஒரு லட்சம் ஊழியருக்கும் 
MTNLலில் 20ஆயிரம்  பேருக்கும்  விருப்ப ஓய்வு அளிக்க வேண்டும்  
என்ற பயமுறுத்தல் பரிந்துரையையும்  அளிக்க உள்ளது.

5 தேர்தல்களாக VRSஐ  முறியடித்துவிட்டோம் என்ற 
நம்பூதிரி வகையறாவின் சாதனை நையாண்டி மேள ஒலி  
ஒருபுறம் தொடர்ந்து ஒலித்துக்கொண்டிருக்கின்றது.

ஆனாலும் 
விருப்ப ஓய்வு என்னும் வேதாளம் தான் விரும்பும்போதெல்லாம் 
BSNL  ஊழியர்களை பயமுறுத்துவது வாடிக்கையாகிவிட்டது.

பொறுத்திருந்து பார்ப்போம்..


Tuesday, 7 May 2013


LTC

தற்போது BSNL நிதி நிலை சீரடையவில்லை என்ற காரணத்தால்
 மறு  உத்திரவு வரும் வரை LTC  மீண்டும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஆயினும் 59 வயதைக் கடந்தவர்களுக்கு மட்டும் LTC  அனுமதி உண்டு 
 என  BSNL  நிர்வாகம் உத்திரவிட்டுள்ளது. 

முன்பாக LTC சலுகை இரண்டாண்டுகளுக்கு வெட்டப்பட்டு  விதிவிலக்காக 05/09/2013க்கு முன் பணி ஓய்வு பெறுவோருக்கு மட்டுமே 
அனுமதிக்கப்பட்டு வந்தது.

Sunday, 5 May 2013


குழுக்கூட்டம் 

BSNL  மற்றும் MTNL  நிறுவனங்களைச்  சீரமைக்க அமைக்கப்பட்ட 
7 பேர் கொண்ட மந்திரிகள் குழு 10/05/2013 
அன்று கூடி விவாதிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. 

குழு தனது அறிக்கையை மூன்று மாதங்களுக்குள் அரசிடம் 
சமர்ப்பிக்க வேண்டும் என்பது அரசின் அறிவுறுத்தல்.


தோழர். பட்டாபி பேசுகின்றார்..



AITUC நடத்தும் கருத்தரங்கில் 

இன்றைய உலகில் மார்க்சியம் 
என்னும் தலைப்பில் 

சிந்தனைச்செம்மல் 

மாநிலச்செயலர் 

தோழர்.  பட்டாபி

கருத்துரை வழங்குகின்றார்.

05/05/2013 - நாயக் பவன் - சென்னை.
தோழர்களே...  வாரீர்.. 

Saturday, 4 May 2013


மாற்றல் வசதி 

அங்கீகரிக்கப்பட்ட சங்கத்தின் பொறுப்பாளர்களுக்கு  
BSNL  நிர்வாகத்தின் 19/09/2012 தேதிய  உத்திரவுப்படி 
கீழ்க்கண்ட  மட்டங்களில் 
மாற்றல் வசதி  IMMUNITY  TRANSFER அளிக்கப்படுகின்றது.


1. அகில இந்திய  மட்டம் 
    பொதுச்செயலர்  - GENERAL  SECRETARY 
    உதவிப் பொதுச்செயலர் - ASST. GENERAL  SECRETARY 
    பொருளர்  - ALL INDIA TREASURER 

2. மாநில மட்டம் 
    மாநிலச்செயலர்  - CIRCLE SECRETARY 
    மாநில உதவிச் செயலர் - ASST. CIRCLE SECRETARY 
    மாநிலப் பொருளர்  - CIRCLE TREASURER 

3. மாவட்ட மட்டம் 
    மாவட்டச்செயலர் - DISTRICT SECRETARY 
    மாவட்ட  உதவிச்செயலர்  - ASST. DISTRICT SECRETARY 
    மாவட்டப்பொருளர்  - DISTRICT TREASURER 

கிளை மட்ட பொறுப்பாளர்களுக்கு மாற்றல் வசதி இல்லை.
தற்போது நமது சங்கத்திற்கும் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதால் 
நமக்கும் இது பொருந்தும்.
உண்மையில் மாற்றல் வசதி IMMUNITY FROM TRANSFER - என்பது 
இருக்கும் இடத்தை விட்டு மாற்றல் செய்யக்கூடாது   என்பதேயாகும். 
ஆனால் நாம் மாற்றல் பெறுவதற்கு பயன்படுத்திக் கொள்கின்றோம்.


செய்திகள்



மே 14 குடந்தையில்...
 வாக்களித்தோருக்கு,  வாகை சூட  வைத்தோருக்கு
  நன்றி தெரிவிக்கும் விழா.  
சிறப்பு சிறு விடுப்பு உண்டு.

தமிழகத்தில் JAO தேர்வில் தேறியோருக்கு OFFICIATING  செய்வதற்கு 
விருப்பம் கேட்கப்பட்டுள்ளது.

NFTE  அகில இந்தியத்தலைவர்  தோழர். இஸ்லாம் தலைமையில் டெல்லியில் கூடிய  அனைத்து  
சங்க கூட்டத்தில்  BSNLன் மறு சீரமைப்புக்காக அமைக்கப்பட்டுள்ள மந்திரிகள் குழுவிடம்
 ஒரு மனதான கோரிக்கையை சமர்ப்பிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. 

மேலும் 78.2 சத IDA இணைப்பை விரைந்து அமுல்படுத்துதல்,  நிறுத்தப்பட்ட மருத்துவப்படி மற்றும் LTCயை மீண்டும் பெறுதல் ஆகியவற்றில் துரித நடவடிக்கை மேற்கொள்ள 
முடிவு செய்யப்பட்டுள்ளது.







Thursday, 2 May 2013


கங்கையிலே குளித்தாலும்..


BSNL மற்றும்  MTNL சீரமைப்புக்காக
7 அறிவு ஜீவிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டது
அனைவருக்கும் தெரிந்ததே..

ஆனால்..
BSNLஐ வலுப்படுத்த 7 அறிவாளிகள் எல்லாம் தேவையில்லை..
மத்திய மாநில அரசுகள் 
BSNL சேவையை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என 
ஒரேயொரு உத்திரவு இட்டாலே போதும்..
பிழைத்துக்கொள்ளும் BSNL..

இந்நிலையில்..
அஞ்சல் துறையில் RELIANCE நிறுவனத்தின் சேவையை பயன்படுத்த முடிவெடுத்துள்ள செய்தி 
நமக்கு செய்தீ ஆகும்.

கங்கையிலே குளித்தாலும்
காக்கை நிறமும்.. காங்கிரசார் நிறமும் மாறாது..
என்பது சர்வ சத்திய உண்மை....

சரப்ஜித்சிங்
ஓர்  எல்லை மீறல்..


"யாதும் ஊரே.. யாவரும் கேளீ ர்.."
என்றார் கணியன் பூங்குன்றனார்.

ஆனால்.. ஊர் விட்டு ஊர்
பாக்கிஸ்தான் எல்லையை தாண்டிய  குற்றத்திற்காக
22 ஆண்டுகள் கேட்பாரற்று 
பாக்கிஸ்தான் சிறையில் அடைபட்டு..அவதிப்பட்டு  
இறுதியில் சக கைதிகளிடம் அடிபட்டு  மிதிபட்டு
உயிர் நீத்த சரப்ஜித்சிங் மரணம் கேட்டு
கனக்குது நமது  மனம்..

சரப்ஜித்சிங் செய்தது 
மண்ணில் எல்லை மீறியது..

பாக்கிஸ்தான் செய்ததோ..
மனிதத்தில் எல்லை மீறியது...

முறையான நீதி..
தனிமனித உரிமை..
கைதிகளுக்கு பாதுகாப்பு.. 
அண்டை நாட்டுடன் நல்லுறவு..
என்ற அனைத்து எல்லைகளும் மீறப்பட்டுள்ளது..

இந்தியாவின் இயலாமைக்கு.. முயலாமைக்கு  
இதுவும் ஒரு சான்று ..




Wednesday, 1 May 2013



மாமதுரை

வைகையில் வெள்ளம் 
எப்போதேனும் பெருக்கெடுக்கும்.. 

மதுரை கூட்டுறவு சங்கத்திலோ 
எப்போதும் பெருக்கெடுத்து ஓடியது 
ஊழல் வெள்ளம்....

பரியை நரியாக்கினார்கள் 
நரியை பரியாக்கினார்கள் 
மொத்தத்தில் ஊழியரை  ஏமாளியாக்கினார்கள்..

மாபெரும் நிகழ்வுகள் நிகழ்ந்தது மதுரை.. 
மாபெரும் செயல்கள் புரிந்தது மதுரை.. 
எனவே அதற்கு மாமதுரை எனப்பெயர் உண்டு..

அதன் வழியில்..
மதுரை தொலைத்தொடர்பில் மாபெரும் நிகழ்வாக 
கூட்டுறவு நாணயச்சங்கம் நாணயமிக்க 
நமது கூட்டணியின் கட்டுப்பாட்டில் வந்துள்ளது.

இன்று.. 11 இடங்களில்..
9 இடங்களை வென்றுள்ளது 
9 கரங்களின் தலைமையிலான கூட்டணி..

நமது கூட்டணி..
நியாயம் நேர்மை கொண்டு 
கூட்டுறவை வலுப்படுத்தட்டும் 

நீதி உரைத்த மாமதுரையில்...
நிமிர்ந்து பறக்கட்டும்..
நேர்மையின்.. மீன் கொடி..