Wednesday 8 May 2013


VRS  என்னும் வேதாளம் 

10/05/2013 அன்று நடக்க இருக்கும் BSNL/MTNL  சீரமைப்புக்குழு கூட்டத்தில் 
தனது பரிந்துரைகளாக DOT  சிலவற்றைக் கூற உள்ளது.

அவற்றில்..
மத்திய பொதுத்துறைகள் மற்றும் அரசின் நிதி உதவி பெறும் அமைப்புக்கள்
BSNL/MTNL  சேவையைப் பயன்படுத்த வேண்டும்.

BSNL/MTNL  சேவையைப் பயன்படுத்தும் ஊழியர்களுக்கு மட்டுமே
பொதுத்துறைகள்  தொலைபேசி ஈட்டுப்படி வழங்க வேண்டும்.

BSNL/MTNL  நிறுவனங்கள் அரசு ஊழியர்களைக் கவரும் விதத்தில்
புதிய திட்டங்களை தயாரிக்க வேண்டும்.

என்று பல பரிந்துரைகளை தயாரித்துள்ள DOT..
  
ஊழியர் சம்பளம் BSNLலில் வருமானத்தில் 49 சதமாகவும், 
MTNLலில் 103 சதமாகவும்  இருப்பதால் 
BSNLலில் ஒரு லட்சம் ஊழியருக்கும் 
MTNLலில் 20ஆயிரம்  பேருக்கும்  விருப்ப ஓய்வு அளிக்க வேண்டும்  
என்ற பயமுறுத்தல் பரிந்துரையையும்  அளிக்க உள்ளது.

5 தேர்தல்களாக VRSஐ  முறியடித்துவிட்டோம் என்ற 
நம்பூதிரி வகையறாவின் சாதனை நையாண்டி மேள ஒலி  
ஒருபுறம் தொடர்ந்து ஒலித்துக்கொண்டிருக்கின்றது.

ஆனாலும் 
விருப்ப ஓய்வு என்னும் வேதாளம் தான் விரும்பும்போதெல்லாம் 
BSNL  ஊழியர்களை பயமுறுத்துவது வாடிக்கையாகிவிட்டது.

பொறுத்திருந்து பார்ப்போம்..


1 comment:

  1. நம்பூதரி இமாலய சாதனையில் இதுவும் ஒன்று நாம் VRS ஒழித்துவிட்டோம்,தடுத்துவிட்டோம் என்று மார்தட்டி சொல்கிறார்கள் ஆனல் ஒழித்தது VRS அல்ல தொழிலாளி மருத்துவப்படி, போனஸ், LTC, 78.2, இன்னும் பல சலுகை பட்டியல் நீடிக்கலாம் நம்பூதரி அணி முதன்மைசங்கமாக இருக்கும் வரை

    ReplyDelete