பட்டிமன்றம்
02/10/2015 காந்தி பிறந்த நாளன்று...
தேவகோட்டை பகுதியில்
BSNL சேவை சீரழிவுக்கு யார் காரணம்?
மாவட்ட நிர்வாகமா? தலமட்ட நிர்வாகமா?
என்ற பட்டிமன்றம் நடைபெறும் என அறிவித்திருந்தோம்.
தேவகோட்டை கோட்டப்பொறியாளர்
திருமதி.லெட்சுமி அவர்களின் வேண்டுகோளின் பேரில் நிர்வாகத்துடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது.
தேவகோட்டை கிளைச்செயலர் தோழர்.பாலமுருகன்,
GM அலுவலக கிளைச்செயலர் தோழர்.சுபேதார் அலிகான்,
புறநகர்க்கிளைச்செயலர் தோழர்.ஆரோக்கியம் ஆகியோர் கலந்து கொண்டனர். தோழர்.சண்முகம் SDE பேச்சுவார்த்தையின் போது
உடன் இருந்து உதவினார்.
தேவகோட்டைப் பகுதி மனித வளம் குறைவான பகுதியாகும்.
ஒப்பந்த ஊழியர்கள் மற்றும் ஓரிரு நிரந்தர ஊழியர்களின் உழைப்பில்தான் நமது சேவை நடைபெறுகிறது.
தேவகோட்டைப் பகுதியை ஆட்சி செய்யும்
துணைக்கோட்ட அரசர்கள்...மன்னிக்கவும்.. அதிகாரிகள்
இருக்கின்ற ஓரிரு ஊழியர்களையும் துன்புறுத்துவதும்,
அவர்களைத் தரக்குறைவாக நடத்துவதும்,
ஒப்பந்த ஊழியர்களின் வயிற்றில் அடிப்பதும்,
அவர்களுக்கு கிடைக்கும் கூலியில் இருந்து பிடுங்கித்
தங்கள் தேவைக்குப் பயன்படுத்துவதுமான செயலிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். இத்தகைய இழிநிலை மாறவேண்டும்
என சுட்டிக்காட்டியுள்ளோம்.
காரைக்குடியில் மாவட்ட நிர்வாகம்
என்ற பெயரில் எதுவும் தென்படவில்லை.
தலமட்ட அதிகாரிகள் தானடித்த மூப்பாக
தறிகெட்டு வலம் வருகிறார்கள். இதற்கு முன்பு இருந்த தேவகோட்டையின் பொறுப்பு அதிகாரி
முழுக்க முழுக்க REAL ESTATE பணி மட்டும்தான் செய்தார்
என்பது அனைவரும் அறிந்த உண்மை.
தட்டிக்கொடுத்து வேலை வாங்குவது.. என்ற நிலை இங்கில்லை. மாறாக.. தட்டுக்கெட்ட நிலைதான் இங்கு நிலவுகிறது.
உழைக்கிற ஊழியர்களுக்கு உரிய வசதிகள் செய்து கொடுப்பதில்லை. கால் பிடிப்பவர்கள் மட்டுமே
இங்கே காலத்தைத் தள்ள முடியும்.
இத்தகைய அவலங்களை சுட்டிக்காட்டியுள்ளோம்.
தேவகோட்டைப் பகுதியில் நமது சேவை மேம்பட வேண்டும்.
ஊழியர்களோ.. அதிகாரிகளோ.. வக்கிரச்செயல்கள் விடுத்து
வாங்கும் சம்பளத்திற்கு வேலை செய்ய வேண்டும்.
இதுவே நமது கோரிக்கை...
நிச்சயமாக மாவட்டத்தின் குரலை நிறைவேற்றுவோம் தோழரே.....
ReplyDelete