GPF விண்ணப்பங்களுக்கு இன்னும் மாவட்ட அளவில் பட்டுவாடாவிற்கு ஒப்புதல் அளிக்கப்படவில்லை. ஒரு வேளை இன்று 26/10/2015 ஒப்புதல் அளிக்கப்பட்டால் நாளையோ மறுதினமோ அல்லது சம்பளத்துடனோ பட்டுவாடா நடக்க வாய்ப்புள்ளது.
===============================================================
TM பயிற்சி முடித்து பதவிகள் இல்லாத காரணத்தால் இன்னும் TM பதவி உயர்வு பெறாத தோழர்களை பதவி உயர்வு,இறப்பு மற்றும் பணி ஓய்வு ஆகியவற்றால் காலியாகும் இடங்களில் பணியமர்த்தவும், அருகாமையில் உள்ள மாவட்டங்களில் சென்று TM ஆகப்பணி புரிய அவர்களின் சம்மதங்களை கேட்கவும் CORPORATE அலுவலகம் மாநில நிர்வாகங்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
===============================================================
ஓய்வூதியம் பெறும் தோழர்கள் ஒவ்வொரு நவம்பர் மாதமும் தாங்கள் உயிரோடு இருப்பதாக உயிர்ச்சான்றிதழ் LIFE CERTIFICATE வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற தோழர்கள் வேறு இடங்களில் வசித்து வந்தால் அந்தந்த இடங்களில் உள்ள வங்கிக்கிளைகளில் தங்களது LIFE CERTIFICATEஐ வழங்கி ஒப்புகை பெற்றுக்கொள்ளலாம் என நிதி அமைச்சகம் உத்திரவிட்டுள்ளது.
===============================================================
LEASED LINE மற்றும் CIRCUIT பழுதுகளை உடனுக்குடன் நீக்குமாறும் இதனால் ஏற்படும் வருமான இழப்பை தடுத்து நிறுத்த நடவடிக்கைகள் எடுக்குமாறும் மாநில நிர்வாகங்களை CORPORATE அலுவலகம் வலியுறுத்தியுள்ளது.
===============================================================
JTO இலாக்காத்தேர்வு மற்றும் நேரடித்தேர்வுகள் OUTSIDERS விரைவில் நடத்தப்படும். தேர்வுகள் நடத்துவதற்கான பணிகள் விரைந்து நடந்து வருகின்றன.
===============================================================
BSNL மருத்துவ திட்டத்தை மறு ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக சங்கங்களிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளது.
===============================================================
நாலுகட்டப்பதவி உயர்வில் உள்ள குளறுபடிகளை நீக்கக்கோரி BSNLEU சங்கம் கோரிக்கை வைத்துள்ளது. குறிப்பாக இலாக்காத் தேர்வு மூலம் அடைந்த பதவி உயர்வை நாலுகட்டப்பதவி உயர்வில் ஒன்றாக கருதக்கூடாது என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இப்போதாவது நாலுகட்டப்பதவி உயர்வில் உள்ள குளறுபடிகள் புரிந்ததே....
===============================================================
No comments:
Post a Comment