இலஞ்ச ஒழிப்பு - விழிப்பு வாரம்
அக்டோபர் 26 - 31
நாடு முழுக்க அக்டோபர் 26 முதல் 31 வரை
இலஞ்ச ஒழிப்பு விழிப்பு வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது.
இலஞ்ச ஒழிப்புக்கு எதிராக
நெஞ்சுக்கு நேரே கையை நீட்டி
உறுதிமொழி எடுத்த சில நிமிடங்களில்..
மேஜைக்கு கீழே கையை நீட்டி
கூச்ச நாச்சமின்றி
இலஞ்சம் வாங்கிய கொடுமை
தமிழகத்தில் அரங்கேறியுள்ளது.
கடலூரில் மாவட்டத்தில்
துணை ஆட்சியராகப் பணிபுரியும் தாஸ் என்ற
நேர்மைத்திறமற்ற ஒரு மனித உருவம்..
தமது அலுவலகத்தில்
இலஞ்ச ஒழிப்புக்கு எதிராக
உறுதி மொழி எடுத்த சில நிமிடங்களில்
முத்திரைத்தாள் மதிப்பைக்
குறைத்து மதிப்பிடுவதற்காக
ரூ.11,500/= லஞ்சம் வாங்கிய செய்தி
பத்திரிக்கைகளில் வெளிவந்துள்ளது.
நேர்மையாக இருப்போம் என்ற
உறுதியும்... உறுதிமொழியும்...
உள்ளத்தில் இருக்க வேண்டும்.
கள்ள மனம் கொண்டவர்கள்
இலஞ்சம் வாங்க மாட்டேன் என்று
உறுதிமொழிக்கு பின்பாட்டு பாடி விட்டு..
பின் இலஞ்சத்திற்கு வாய்ப்பாட்டு
பாடுவது வேதனைக்குரிய செயல்.
திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால்
திருட்டை ஒழிக்க முடியாது
என பட்டுக்கோட்டை பாடினான்...
திருடர்களாகப் பார்த்து திருந்தாதவரை
VIGILANCE AWARENESS WEEK என்பது
இந்த தேசத்தில்...
VIGILANCE AWARENESS WEAK
ஆகவே இருக்கும்..
No comments:
Post a Comment