ஆச்சிக்கு... அஞ்சலி...
ஆயிரம் திரை கண்ட அபூர்வ சிந்தாமணி..
ஆச்சி என்று பெயர் கண்ட..
அதிசயக் கலைமாமணி ...
கலைஞர்களில் முதல்வர்..
ஐந்து முதல்வர்களோடு
கலை பயின்ற கலைஞர்...
மன்னார்குடியின் மண்மகள்...
பள்ளத்தூரின் பாசமகள்..
கோடம்பாக்கத்துக் கோமகள்...
நகைச்சுவையிலே தனிரகம்..
நடிப்பிலே நவரசம்...
சொந்த வாழ்விலோ சோகரசம்...
கணவனோடு கண்டது மணமுறிவு..
காலமெல்லாம் கண்டது..
கலையோடு.. உயிர் உறவு...
கலையோடு பிரிக்க இயலா நேசம்
காலமெல்லாம் புகழ் மணக்கும்...
கலையுலகப் பாரிஜாத வாசம்..
வண்ணத்திரையில் வரும் வரை..
மக்கள் மனத்திரையில்.. வாழும் வரை
கலைஞனுக்கு அழிவில்லை..
மக்கள் மனங்களை
ஜில்லென்று குளிர்வித்த
ஜில் ஜில் ரமாமணிக்கும்
கலையுலகத் திருநாட்டை
ஐம்பதாண்டு ஆட்சி செய்த...
கலை மேதை ஆச்சிக்கும்..
என்றும் மரணமில்லை...
என்றும் முடிவில்லை..
என்றும் அழிவில்லை...
வாழ்க...
ஆச்சி மனோரமா..
வளர்க அவரது மங்காப்புகழ்..
No comments:
Post a Comment