Sunday 11 October 2015

செய்திகள்.. சில...

01/10/2015 முதல்   5.3 சத   IDA உயர்விற்கான உத்திரவை  
DPE இலாக்கா   08/10/2015 அன்று வெளியிட்டுள்ளது.
 BSNL  உத்திரவு விரைவில் வெளிவரும்.
---------------------------------------------------------------------------------
JAO தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தும்  
தமிழ் மாநிலத்தில் போதிய காலியிடங்கள் இல்லாததால் 
JAO பதவியில் அமர வாய்ப்பு இல்லாமல் இருக்கும் தோழர்களுக்கு 
தற்காலிகப் பதவி உயர்வு வாய்ப்பு  JAO OFFICIATING   வழங்க 
நடவடிக்கை எடுக்க வேண்டி நமது தமிழ்மாநிலச்சங்கம் 
மத்திய சங்கத்திற்கு கடிதம் எழுதியுள்ளது. 
இது மயிலாடுதுறை மாநில செயற்குழு தீர்மானங்களில் ஒன்றாகும்.
---------------------------------------------------------------------------------
RM/GRD பதவிகளில் உள்ள  தோழர்கள் 
தேக்க நிலை STAGNATION  அடைந்த பின்பு 
தேக்க நிலை ஆண்டு உயர்வுத்தொகை பெற்று வந்தார்கள். 
இத்தகைய தோழர்களுக்கு NEPP என்னும் 
நாலுகட்டப் பதவி உயர்வு வழங்கப்படும் போது
 அந்த தோழர்கள் மீண்டும் தேக்க நிலையை அடைந்ததோடு 
ஏற்கனவே வாங்கியிருந்த 
தேக்க நிலை ஆண்டு உயர்வுத்தொகையையும் 
இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 
இது மிகக்கொடுமையானது எனவும் 
உடனடியாக இந்தக்கொடுமை களையப்பட வேண்டும் எனவும் 
நமது மத்திய சங்கம் நிர்வாகத்திற்கு கடிதம் எழுதியுள்ளது.
---------------------------------------------------------------------------------
JAO இலாக்காத்தேர்வு எழுத  சேவைக்காலத்தை  5 ஆண்டுகளாகத்  தளர்த்தி BSNL வாரிய ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு ஆண்டுகள் பல ஆகியும் இன்னும் ஒப்புதல் கிட்டவில்லை. நிர்வாகம்  JTO தேர்வுக்கு ஒப்புதல் வழங்கியுள்ள நிலையில் JAO தேர்வுக்கும் உரிய ஒப்புதல் வழங்க வேண்டும் என மத்திய சங்கம் நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளது.
---------------------------------------------------------------------------------
தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் 
சேவை பராமரிப்புக்கும் 
புதிய இணைப்புக்கள் வழங்குவதற்கும் 
உரிய கருவிகளும். பொருட்களும்..
MATERIALS இல்லாத சூழல் நிலவுகிறது. 
உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி 
நமது தலைவர்கள் CMDயிடம் வலியுறுத்தியுள்ளனர்.
---------------------------------------------------------------------------------
தனி செல் கோபுர நிறுவனம் உருவாக்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள அமைச்சர்கள் குழுவில் BSNL அதிகாரிகளையும் இடம் பெறச்செய்ய வேண்டும் என்ற  கோரிக்கையை வலியுறுத்தி  நமது சங்கம்
 இலாக்கா அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளது. 
BSNL  நிர்வாகமும் நமது கடிதத்தை 
DOTக்கு அனுப்பியுள்ளது.
---------------------------------------------------------------------------------
மரணமுற்ற ஊழியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைககளை 
உடனடியாக முடிக்க வேண்டும் என BSNL நிர்வாகம் 
மாநில நிர்வாகங்களை வலியுறுத்தியுள்ளது.
---------------------------------------------------------------------------------
பல்வேறு ஊழியர்களுக்கு போனஸ் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நமக்கு குறைந்தபட்ச தற்காலிக  போனஸ் வழங்க வேண்டும் என 
நமது சங்கம் நிர்வாகத்தை மீண்டும்... மீண்டும்   வலியுறுத்தியுள்ளது.
---------------------------------------------------------------------------------

No comments:

Post a Comment