போனஸ் குழுக்கூட்டம்
30/03/2016 அன்று டெல்லியில்
போனஸ் குழுக்கூட்டம் நடைபெற்றது.
நிர்வாகத்தரப்பில் PGM(SR) GM(RESTR) மற்றும் GM(PER)
ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஊழியர் தரப்பு சார்பாக..
நமது அகில இந்தியத்தலைவரும்,
தேசியக்குழு ஊழியர் தரப்புத்தலைவருமான
தோழர்.இஸ்லாம் அகமது கலந்து கொண்டார்.
BSNLEU தரப்பு உறுப்பினரான
தோழர்.அபிமன்யு கலந்து கொள்ளவில்லை.
பாவம்... அவருக்கு போனசை விட
பல முக்கிய வேலைகள் இருந்திருக்கலாம்.
நிர்வாகத்தரப்பில் குறைவான தொகை போனசாக முன் வைக்கப்பட்டது. போனஸ் தொகையின் அளவு நமக்கு ஏற்புடையதாக இல்லாவிட்டாலும்
நமது உரிமையான போனசை
நாம் போராடிப்பெற்ற போனசை
நாம் ஆண்டாண்டு காலம் பெற்ற போனசை..
நிர்வாகம் மறுக்கவே இயலாது என்றும்...
ஊழியர்களுக்கு கொடுத்தே தீர வேண்டும் என்றும்..
உணர்வோடு.. உறுதியோடு...
தனது வாதத்தை தோழர்.இஸ்லாம் முன் வைத்தார்.
போனஸ் குழு தனது பரிந்துரையை
நிர்வாகத்திடம் விரைவில் சமர்ப்பிக்கும்.
அதன் பின் உரிய முடிவெடுக்கப்படும்.
போனஸ் நமது உரிமை...
போராடி... வாதாடிப் பெறுவது நமது கடமை...
ஒதுங்கி நின்று... ஓரங்கட்டுவது மடமை...