Monday, 14 March 2016

இலவச SIMல் 
தனியார் தொலைபேசிகளை அழைக்கும் வசதி.

BSNL  ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட 
மாதம் ரூ.200/= இலவச SIMல் 
தனியார் அலைபேசிகளை அழைக்கும் வசதி தரப்படாமல் இருந்தது. இதனால் நமது தோழர்கள் குறிப்பாக TM தோழர்கள் தனியார் அலைபேசியை உபயோகிக்கும் வாடிக்கையாளர்களைத் 
தொடர்பு கொள்ள இயலாத நிலை நிலவியது. 

இப்பிரச்சினை நமது சங்கத்தால் எழுப்பப்பட்டு 
JACயின் கோரிக்கையாக மாற்றப்பட்டது. 
தற்போது இந்த கோரிக்கை நிர்வாகத்தால் ஏற்றுகொள்ளப்பட்டுள்ளது.

 மாதம் ரூ.50/= அளவிற்கு 
மாநில எல்லைக்குள் தனியார் அலைபேசிகளை 
ஊழியர்கள் இலவச SIMல் தொடர்பு கொள்ளலாம் 
என BSNL  நிர்வாகம் 09/03/2016 அன்று உத்திரவிட்டுள்ளது.
ஆறு மாதங்களுக்கு சோதனை அடிப்படையில் 
இவ்வசதி வழங்கப்பட்டுள்ளது. 
அதன்பின் பரிசீலனை செய்யப்படும். 

No comments:

Post a Comment