Tuesday 9 August 2016

இதோ... எழுந்து விட்டது.... BSNL

கடல் கிழித்து கதிரவன் எழுகிறது...
தரை கிழித்து விதை எழுகிறது...

எழுவது மட்டுமே எல்லோருக்கும் தெரியும்...
உறங்குவது ஒருவருக்கும் தெரியாது...

இதோ...  எழுந்து விட்டது....BSNL...
ஆகஸ்ட் - 10...
நாடு முழுவதும்...
வாடிக்கையாளரை வசப்படுத்தும் நிகழ்ச்சிகள்...
ஊழியர்களின் உணர்வுப்பூர்வமான உறுதிமொழிகள்..
மக்களை சந்திக்க வீதிகளில் தேர்வலமாய்  ஊர்வலங்கள்...
நம் சேவையின் தரம் சொல்லும் விளம்பரங்கள்...

அதிகாரிகள்... ஊழியர்கள்...
அனைத்து சங்கங்கள் கரம் கோர்ப்போம்...
ஒன்றாய் சேர்ந்து வடம் பிடிப்போம்...
BSNL என்னும் அழகுத்தேர் இழுப்போம்....

தூய சேவை... துரித சேவை...
இதுவே நமது முழக்கம்...

ஒன்றுபடுவோம்... வென்று காட்டுவோம்...
இதுவே நமது குறிக்கோள்...

----------------------------------------------------------------------------------------------------------------
இன்று 10/08/2016 - காலை 10 மணிக்கு 
காரைக்குடி பொதுமேலாளர் அலுவலகத்தில் 
ஊழியர்களின் உறுதிமொழி ஏற்பு நிகழ்வும்....
காரைக்குடி வீதிகளில் ஊர்வலமும் நடைபெறும்...
தோழர்களே... பங்கேற்பீர்...

No comments:

Post a Comment